Sunday, March 04, 2007

மார்ச் 5, 2007 க்கு பிறகான பின்னூட்டங்கள்

மார்ச் 5, 2007 க்கு பிறகான பின்னூட்டங்கள்

33 Comments:

Blogger குழலி / Kuzhali said...

http://azakiyaraavanan.blogspot.com/2007/03/blog-post.html

வணக்கம், குறைந்தது மூன்று பதிவுகளை எழுதிவிட்டு பிறகு தமிழ்மணம் இணைய தளத்தில் இடது பக்கத்தில் யு.ஆர்.எல். இடுக என்றிருக்கும், அதில் http://azakiyaraavanan.blogspot.com/ என்று அளிக்கவும், அதன் பிறகு தமிழ்மணம் நிர்வாக குழு உங்கள் பதிவை ஏற்றுக்கொண்ட பிறகே தமிழ்மணத்தில் உங்கள் பதிவு தெரியவரும்.

மேலும் பார்க்க...தமிழ்மண பயணர் கையேடு 8ம் பக்கம்
http://www.thamizmanam.com/thamizmanam_userguide_v1.pdf

5:05 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://9thumoorthi.blogspot.com/

please delete this blog, donot behave indecently

11:43 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://valavu.blogspot.com/2004/12/blog-post.html

//இரா. முருகன் சொன்னது போல் செயேந்திரர் மீண்டும் இருள்நீக்கி மகாதேவன் சுப்பிரமணியன் என்று ஆகுவதே சிறப்பு.
//
இரா.முருகனா? இரா.முருகனா அப்படி சொன்னார், ஆச்சரியமாக இருக்கின்றது அய்யா!!! ஜெயேந்திரர் என்பதில் 'ர்' விட்டுவிட்டு ஜெயேந்திரன் என்றாலே துடித்து போய்விட்டாராமே... நான் சொல்லவில்லை எல்லேராம் சொன்னார், அப்படிபட்ட இரா.முருகனா இப்படி?? பாவம் இப்படி இரா.மு. சொன்னதை கேட்டிருந்தால் எல்லேராம் தேம்பி தேம்பி அழுது உண்ணாவிரதமிருந்திருப்பார்....



http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/2826

நம்பி,

இந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்தி விட்டீர்கள். தனிப்பட்ட முறையில் எனது
நேற்றைய தூக்கம் பலியானதற்கு இந்துமதப் பெரியவர் ஜெயேந்திரர் பற்றிய உங்கள் இழி
சொல்லே காரணம். மிகவும் வருத்தப்பட்டேன். 'அவன். இவன்' என்றெல்லாம் சபை
நாகரிகம் கூட இல்லாமல் எழுதி விட்டீர்களே? ;-(((

(அப்படி நம்பி என்ன எழுதிட்டாரென்றால் "தீவிரவாதம் என்றால் என்ன என்று சற்று சிந்திக்க வேண்டி உள்ளது. ஒஸாமாக்கள், புஷ்
கள், ஜெயேந்திரன்கள் மட்டும்தான் தீவிரவாதிகளா?")
.......................................................
.......................................................

நேற்று முருகன் எந்த அளவுக்குத் துடித்துப் போயிருந்தார் என்பது எனக்குத் தெரியும்.
(எதுக்கு ஜெயேந்திரன் என்று சொன்னதற்கு தான் முருகன் துடித்து போயிருந்தாராம்)
நானும் முருகனும் இந்தக் குழுவின் இரு கண்கள். ஒரு கண் வலியில் துடிக்கையில்
இன்னொரு கண் தூங்குமா? நான் நேற்று பட்ட வேதனைக்கு அளவே இல்லை.
இத்னால் கேவலம் அவருக்கோ எனக்கோ இல்லை.

.......................................................................
..................................................................
இனிமேலாவது இந்த மாதிரி வி்ஷயங்களில் பெரும்பான்மையினரை இங்கே
புண்படுத்தும்படி எழுதி எங்களைத் தர்ம சங்கடத்துக்கும், வெறுப்புக்கும்,
வேதனைக்கும் உள்ளாக்காதீர்கள்.

...............................................................
................................................................

எல்லே ராமராயன்

முழு கடிதத்தையும் ராகாகியில் படித்து பாருங்கள் செம தமாசா இருக்கும்.....

6:37 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://elavasam.blogspot.com/2007/03/blog-post_21.html

நாகரிகம்? எது நாகரிகம்? யார் சொல்வது நாகரிகம், நாம் சொல்லிக்கொண்டிருக்கும் நாகரிக கையேட்டை அவர்களிடத்தில் நம்மை வைத்து பார்த்தால் நம் நாகரிக கையேட்டை நம்மால் பின்பற்ற முடியுமா? இது தொடர்பான என் பதிவு இங்கே

//குழலி, நாகரிகம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் உங்களுக்கு பிடிக்காத பதிவு ஒன்றை எழுதினால் என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் நீங்கள் சொல்லலாமா? அதுதான் எனக்கு வருத்தம்.//
அய்யா ராசா, உங்க தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி எங்கேய்யா இல்லாததும் பொல்லாததும் சொன்னேன், எங்கேங்க உங்க தனிப்பட்ட வாழ்க்கையை குறிப்பிட்டு எழுதியிருக்கேன்?

7:25 AM  
Blogger குழலி / Kuzhali said...

//நான் உங்களுக்கு பிடிக்காத பதிவு ஒன்றை எழுதினால் என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் நீங்கள் சொல்லலாமா? அதுதான் எனக்கு வருத்தம்.
//
புரியுது நீங்க எதை சொல்ல வர்றீங்கன்னு.... ஆனா பதிலை என்னிடம் கேட்காமல் உங்கள் மனசாட்சியிடம் கேட்கவும்....

7:30 AM  
Blogger குழலி / Kuzhali said...

//விளிம்புநிலை மனிதர்கள் முன்னேற்றத்துக்கும் தனிமனிதத் தாக்குதலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை சமூகம் உணர்வதெப்போ. //

இ.கொ. இங்கே விளிம்புநிலை மனிதர்களின் முன்னேற்றம் பற்றியா பேசிக்கொண்டிருக்கிறோம். விளிம்புநிலை மனிதர்களை கேவலப்படுத்தியதைப்பற்றி தானே பேசிக்கொண்டிருக்கிறோம்


தனியாக ஓரிரு கொலைகள் செய்தால் அது குற்றம்அதற்கு தூக்கு தண்டனை கூட உண்டு, ஆனால் கும்பலாக கும்பலாக நிறைய பேரை கொலைசெய்தால் அதை செய்தவனை எதிர்த்தால் தவறு அப்படித்தானே இருக்கிறது நியாயம்....

அதாவது இவர் அவர் என பெயர் சொல்லாமல் மொத்தமாக திருநங்கைகளை கேவலப்படுத்துவதை விட ராதிகா என்று பெயர் குறிப்பிட்டு அவரின் பத்தினித்தனத்தை கேள்வி கேட்பது தவறு, ஒரு வேளை கிரியேட்டிவ் ஹெட் என்று போடாமல் கிரியேட்டிவ் ஹெட்கள் என்று போட்டு ராதிகாவின் பெயர் போடாமல் இருந்திருந்தால் அது நாகரீகமாகி விட்டிருக்குமோ??

7:56 AM  
Blogger குழலி / Kuzhali said...

//குழலி, அவர்களை வில்லிகளாய் காண்பிப்பதை நிறுத்துனால் அவர்களுக்கு முன்னேற்றம் வரப் போவதில்லை.
//
முதலில் வில்லிகளாய் காண்பிப்பதை நிறுத்துவதிலிருந்து ஆரம்பிக்கட்டும்.... இதையே நாம் நம் சூழலில் இணைவைத்து பார்ப்போ,

திருநங்கைகள் இடத்தில் வலைப்பதிவர்கள்

அவர்களை ஆபாசமாக காண்பிக்கும் இடத்தில் போலி

இப்போ உங்கள் பதிலை நம் சூழலுக்கு எழுதினால் எப்படி இருக்கும்....

வலைப்பதிவர்களை ஆபாசமாய் போலி எழுதுவதை நிறுத்துனால் வலைப்பதிவர்களுக்கு முன்னேற்றம் வரப் போவதில்லை.

இப்போ மேலே சொன்னது சரிதானா? இதைத்தான் நீங்கள் திருநங்கைகள் சூழலுக்கு சொல்லியிருக்கின்றீர்கள்

யோசிச்சி பாருங்க

டிஸ்க்கி:
என்ன செய்ய நம் மக்களுக்கு நம்முடைய சூழலிலிருந்து எடுத்து போட்டால் தான் தெரியும் போல

8:13 AM  
Blogger குழலி / Kuzhali said...

//குழலி, சும்மா பேசணும் அப்படின்னு ஒரு எண்ணத்தோட பேசற மாதிரி தெரியுது.
//
இ.கொ. முதலில் இப்படியும் அப்படியும் ஜம்படிப்பதை கொஞ்சம் நிறுத்துகின்றீரா? திருநங்கைகளை வில்லிகளாய் காண்பிப்பதை நிறுத்தினால் அவர்களுக்கு முன்னேற்றம் வரப் போவதில்லை என்று நீங்கள் சொன்னதற்காகத்தான் இந்த போலி ஒப்பீட்டையே சொன்னேன், அதாவது திருநங்கைகளை வில்லியாக ஆபாசமாக காண்பிப்பதை நிறுத்தினால் அவாகளுக்கு முன்னேற்றமெதுவும் வரப்போவதில்லை என்னும்போது எனர்ஜியை இதில் ஏன் வீணாக்க வேண்டுமென்ற உங்கள் கேள்வியை அப்படியே நம் வலைப்பதிவு சூழலுக்கு ஒப்பிடுங்களேன் என்றேன்....

//சினிமாவில் வில்லியா வரதும், உங்க வீட்டு பெண்களை பத்தி அசிங்கமா எழுதறதும் ஒண்ணா?
//
நம்ம வீட்டு பொண்ணுங்களை அசிங்கமா எழுதறது நமக்கு தப்பு அதே சமயம் திருநங்கைகளை வில்லியா(வெறும் வில்லியாக மட்டும் காண்பிக்கவில்லையே)ஆபாசமா காண்பிப்பது ஒன்னும் பெரிய தவறில்லை, அதை கேட்டா ஆபாசமா திருநங்கைகளை காண்பிக்காமல் விட்டால் அவர்கள் வாழ்க்கை முன்னேறிவிடப்போகிறதா என்று ஒரு கேள்வி வேறு, நமக்கு நம்ம வீட்டு பொண்ணுங்களை ஆபாசமா எழுதுவது பெரிய தவறு, லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கு அவர்களை போன்றோர்களை கேவலமாக ஆபாசமாக சித்தரிப்பது பெரிய தவறு... இதைத்தான் சொன்னேன் நம் நாகரிக கையேட்டை அவர்களிடத்தில் எடுத்துச்செல்லும் முன் அவர்களிடத்தில் நம்மை பொறுத்தி பாருங்கள் என்று.

8:32 AM  
Blogger குழலி / Kuzhali said...

//Anonymous said...
If this same post has come from a different person, these same kuzhali and muthukumaran would be talking different things. Ask Lucky look and Senthazhal Ravi - they will tell you.
//
லக்கி மற்றும் செந்தழல் பதிவுகளை பார்க்கவும், அங்கேயே என் எதிர்ப்புகளை சொல்லியிருப்பேன்...

6:54 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://dharumi.blogspot.com/2007/01/blog-post.html

//இவையெல்லாம் படிப்பறிவாலும் அனுபவத்தாலும் வருவதுதான். என்னைப் பொறுத்த வரையில் இதற்கு திராவிட இயக்கமோ, பகுத்தறிவு இயக்கமோ, பெரியாரோ எந்த விதத்திலும் தேவைப்படவில்லை.
//
என்ன செய்வது பிற சாதியினருக்கு வேண்டுமானால் படிப்பறிவு தற்போது சில ஆண்டுகளாக(ஒரு 20 அட 30 வேணாம் 50 வருடங்கள்னு வைத்துக்கொள்வோம்) ஆனால் காலம் காலமாக சில சமூகத்தினருக்கு படிப்பறிவு இருந்ததே அப்போது குறைந்தது அந்த படிப்பறிவு மிக்கவர்களாவது மரியாதை கொடுத்து பேசினார்களா?

படிப்பு என்பதையெல்லாம் விட இது அளிக்கப்பட்டது இது என் தலைவிதி, இப்படி அவர்கள் கூப்பிட்ட்டால் தப்பில்லை என்பது மாறி சுயமரியாதை உணரப்பட்டதே இதற்கு காரணம், அந்த சுயமரியாதையை உணரவைத்ததில் பெரியார் மற்றும் திராவிட இயக்கங்களின் பங்களிப்பு மிக மிக அதிகம்....

9:30 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://adhiseshan.blogspot.com/2007/03/blog-post_5356.html

//வடுவூர் குமார் said...
நிலைமை கை மீறுகிறது.
அவர்கள் தமிழ் சொல், வழக்கு வேறு.
மேலும் மேலும் பதிவின் அழகு கெடுகிறது.:-((
//
வடுவூர் குமார், நீங்கள் அவர்கள் என்று கூறியிருக்கிறீர்களே அந்த அவர்கள் என்றால் எவர்கள்? என்று சற்று விளக்கமாக சொல்கிறீர்களா? இதை விளக்கினால் அதன் பிறகுஅவர்கள் இவர்கள் உவர்கள் என்று எல்லாம் பொத்தாம் பொதுவாக போட்டு தாக்காமல் திறமையாக பேசுவதாக நினைத்துக்கொண்டு பேசாமல் சில விடயங்களை நேரிடையாகவே பேசலாம்......

8:20 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://livingsmile.blogspot.com/2007/03/blog-post_28.html

//எனவே இனி என் பதிவு எதுவும் தமிழ்மணத்தில் வரப்போவதில்லை...
//
பொது தள கதவை சாத்துகின்றீர்...

//ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு என் வலைப்பதிவு எப்போதும் திறந்தேயுள்ளது.
//
ஆர்வம் உள்ளவர்கள் அல்லது உங்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்பவர்களுக்கு நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை, அதே சமயம் மூர்க்கத்தனமாக எதிர்ப்பவர்களுக்கு நீங்கள் சொல்லி திருந்தப்போவதுமில்லை, நடுநிலையாளர்கள்(அல்லது குறைந்தது அப்படியாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள்) உங்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்வது எப்படி? இன்றைக்கு இருக்கும் வாசகர்கள் உங்கள் பதிவிற்கு வருவார்கள், ஆனால் நாளை புதிதாக தமிழ்மணம் வருபவர்களுக்கு உங்கள் பதிவு எப்படி தெரியும், இப்படி ஒரு பார்வை இருப்பதே தெரியாதே அவர்களுக்கு? என்னளவில் நான் இப்படித்தான், ஒத்த கருத்துடையவர்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை, மூர்க்கத்தனமான எதிர் கருத்திருப்பவர்கள் நான் சொல்வதை ஏற்கப்போவதில்லை, ஆனால் நடுவில் இருப்பவர்களை குறிவைத்தே என் எழுத்துகள் அமைவது, அதில் சில சிறு சிறு வெற்றிகளும் கிடைத்துள்ளது... எனவே உங்கள் பதிவிற்கு வரும் கதவை அடைக்காதீர்கள்....

3:09 AM  
Blogger குழலி / Kuzhali said...

பார்ப்பனிய எதிர்ப்பு என்பது இந்திய தேசிய எதிர்ப்பா? ஆனால் பார்ப்பனிய எதிர்ப்பு கண்டிப்பாக ஹிந்து தேசிய எதிர்ப்பே.... அப்படியே இந்திய தேசியத்தை எதிர்த்தால் தான் என்ன தவறு... இந்திய தேசியத்தை எதிர்ப்பதற்கான நியாயங்கள் இருக்கத்தானே செய்கின்றன.

//இந்திய தேசியம் தான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு தமிழரை ஜனாதிபதியாகவும், இன்னொரு தமிழரை நிதியமைச்சராகவும் ஆக்கியிருக்கிறது. இதற்கு ஈடான தமிழ்ப் பெருமிதம் உண்டா?
//
ஹா ஹா.... பாக்கிஸ்தானில் கூட இந்துக்கள் அமோகமாக வாழ்கிறார்களாம், அங்கே ஒரு ஹிந்து தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியாத உங்களுக்கு, பார்க்க என் பதிவு

//இன்று இந்தியாவில் தான் தமிழர்கள் சகல உரிமைகளுடனும், வசதிகளுடனும், வாய்ப்புகளுடனும் திகழ்கிறார்கள், உலகில் வேறெங்கும் அல்ல. இந்திய தேசியம் தான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில்//
பேசாமல் இந்தியாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக இணைத்து விட்டால் நாமும் உலகின் வல்லரசு நாடாகிவிடுவோம், மிகப்பெரிய ஜனநாயக நாடு, மன்மோகன்சிங்க் அமெரிக்காவின் நிதியமைச்சராக்கிவிடலாம்,

அப்போது ஜடாயு ஒரு பதிவு போடுவார்,

இன்று அமெரிக்காவின் கீழுள்ள இந்த அரசில் தான் இந்தியர்கள் சகல உரிமைகளுடனும், வசதிகளுடனும், வாய்ப்புகளுடனும் திகழ்கிறார்கள், உலகில் வேறெங்கும் அல்ல. அமெரிக்க தேசியம் தான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு இந்தியரை ஏபிசி என்ற பதவியிலும்(ஒன்றுக்கும் உதவாத ஏதாவதொரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி ஏதாவது சொல்லுங்க), இன்னொரு இந்தியரை நிதியமைச்சராகவும் ஆக்கியிருக்கிறது. இதற்கு ஈடான இந்தியப் பெருமிதம் உண்டா?


என்ன ஜடாயு, இந்தியாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக்கிவிடலாம் தானே...

இந்தியா அமெரிக்காவின் 51வது மாநிலமாகக்கூடாதா? ஏன்? ஏனென்பதற்கான நியாயங்களை சொல்லும் ஜடாயு, சொல்ல மாட்டீர்கள் நீங்கள் அதற்கு என்னென்ன நியாயம் சொல்கிறிர்களோ அதே நியாயம் தமிழகம் ஏன் இந்தியாவோடு இருக்கக்கூடாது என்பதற்கு பொறுந்தும், இந்தியா என்பது ஹிந்துயாவாக இருக்க வேண்டும் என்ற ஹிந்துத்துவா வெறியர்களின் எண்ணம், ஹிந்து என்றால் பார்ப்பனிய ஆதிக்கம், இதுத்தானேய்யா விசயமே....

9:42 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://jataayu.blogspot.com/2007/03/blog-post_28.html

9:49 PM  
Blogger குழலி / Kuzhali said...

//நீங்கள் இந்திய தேசத்திற்கு எதிரானவர் என்று முதலிலேயே சொல்லிவிட்டதால் இந்த வாதமே அர்த்தமற்றது. இந்தியா நாசமாய்ப் போக வேண்டும் என்று நினைக்கும் உங்களிடம் அதன் ஒற்றுமை, முன்னேற்றம், இறையாண்மை இவை பற்றி மேலே சொன்னது போன்ற அபத்தங்களின் அடிப்படையில் நான் வாதம் புரிய விரும்பவில்லை.
//
ஜடாயு எஸ்கேப்பிசமா? இந்தியா இந்தியாவாக இருப்பதை விட அமெரிக்காவின் 51வது மாநிலமாக இருப்பது எவ்வளவோ மேல்.... அது ஏன் தவறு என்று நீங்கள் சொல்லுங்கள்? சொல்லுங்கப்பா காரணத்தை சொல்லுங்கோ ஏன் காரணம் சொல்ல மாட்றேள், ஓ ஓ காரணம் சொன்னால் அதே காரணம் தமிழகத்துக்கும் பொறுந்தும் என்பதாலா?

11:26 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://eenpaarvaiyil.blogspot.com/2007/03/blog-post_29.html

//நன்றி தேசபக்தி சீமான்களே
உங்கள்
ஒப்புதல் வாக்குமூலத்திற்கு//
அருமையான ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்கள் அவர்கள்... தேசபக்தர்களுக்கு பக்தி தேசத்தின் மீதா? பார்ப்பனியத்தின் மீதா என்பதை தெளியவைத்துள்ளார்கள்...

11:48 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://balaji_ammu.blogspot.com/2007/04/321.html

பாலா அந்த போர்டை கழற்ற அவர்கள் என்ன செய்தார்கள் வலைப்பதிவில் கும்மி அடிக்கிறார்களே என்று சொன்ன நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றீர் இப்போ? அந்த போர்டை கழற்ற ஏதாவது முயற்சி எடுத்தீரா? ஓ ஓ அது கி.அனானி எழுதியதா? :-) சரி கி.அனானி நீர் என்ன செய்தீர் ஓய்....

கி.அனானியின் இந்த கும்மி பற்றி ஒரு பதிவு எழுதும் அளவிற்கு விசயமிருக்கு, அதை ஒற்றை பின்னூட்டத்தில் போட விருப்பமில்லை... அதனால விலாவரியா பதிவு எழுதுகிறேன்.....

7:11 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://tvpravi.blogspot.com/2007/04/blog-post_03.html

ரவி, கடுமையான நேரக்குறைவு என்பதால் இடஒதுக்கீடு தொடர்பான பதிவுகள் தொடர்ந்து எழுத முடியவில்லை, க்ரீமிலேயர் பற்றியதொரு மிகத்தவறான பிம்பம் உருவாக்கப்பட்டிருப்பதால் சில பின்னூட்டங்களில் இதை புரியவைக்கவும் இயலாது....

http://reservationfaqs.blogspot.com
இதில் க்ரீமிலேயர்பற்றி செல்லா எழுதியிருக்கின்றார், க்ரீமிலேயரின் வரையறை என்ன? அது தான் இப்போதும் பிரச்சினை.... க்ரீமிலேயரை பொருளாதார அடிப்படையில் வைக்கக்கூடாது என்பதுவே என்னுடைய மிக முக்கியமான கோரிக்கை.

எப்போதுமே நாம் விதிவிலக்குகளை உதாரணம் காண்பித்து அதையே விதிகளாக காண்பிக்கிறோம் அந்த இரண்டு உதாரணங்கள் அப்படிப்பட்டது, முதலில் இடஒதுக்கீடு என்பது பொருளாதார முன்னேற்றத்திற்காக கொண்டுவரப்பட்டது அல்ல, சமூக முன்னேற்றத்திற்காக வலியுறுத்தப்படுவது இது, நூறு பன்றி வைத்துக்கொண்டு மாதம் நிறைய சம்பாதிப்பவர்கள் க்ரீமிலேயரில் வந்துவிடுவார்கள் அவர்கள் தலைமுறையிலேயே யாரும் படிக்கவில்லையென்றாலும், நீங்கள் சொன்ன தாசில்தார் மட்டுமல்ல, 40-50 வயசில் அரசாங்க வேலை பார்க்கும் 'டி' குரூப் கிளார்க்கும் கூட இந்த க்ரீமிலேயரில் வந்துவிடுவார்கள் இப்போதைய அளவீட்டின்படி....

முற்படுத்தப்பட்ட சாதி மாணவர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எங்கே தெரியுமா இடைவெளி? அவர்களுக்கு கிடைக்கும் சூழல், அப்பா, அம்மா, அக்கா, அத்திம்பேர் என அத்தனை படித்தவர்களின் வழிநடத்துதல் இருக்கும், ஆனால் எத்தனை பணமிருந்தாலும் இவைகள் மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை, கண்கூடாக நீயே கூட பார்த்திருக்கலாம், கொஞ்சம் பணம் உள்ள தொழில் செய்யும் குடும்பங்களிலே படிக்கறதை விட்டுட்டு கடையில் உக்கார் என்று சொல்வதை, இதற்கு காரணம் படிப்பை பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி இல்லாமை, அல்ட்டிமேட்டாக இதற்கு பின்னுள்ள காரணத்தை நோண்டினால் அது நிறுத்துமிடம் சாதியாகவே இருக்கின்றது. மேலும் பணம், வருமானம் சொத்து இவைகள் நிலையானதில்லை, எந்த நேரத்தில் பணம் சொத்துகளை இழந்து அடுத்த வேளை சோற்றுக்கு சிங்கியடிக்கலாம், அப்போது க்ரீமிலேயராக இருந்தவன் இப்போது பாவர்ட்டி லைனுக்கு கீழ் வரலாம்.

கல்விக்கு எத்தனையோ கடன் திட்டங்கள் உள்ளன.

ஞானி க்ரீமிலேயர் பற்றி எழுதியதை இங்கே தருகிறேன்.

உயர்சாதி க்ரீமிலேயர் பற்றி ஞானியின் கருத்து...

http://www.keetru.com/dheemtharikida/sep06/gnani_5.html
2. இட ஒதுக்கீடு பெற்றுள்ள சாதிகளில் வசதி படைத்த மேட்டுக்குடியினரே (கிரீமி லேயர்) அதிக இடங்களைச் சுருட்டிக்கொள்வதைப் பற்றி எல்லாரும் மழுப்புவது ஏன்?

அரசியல், கல்வி, தொழில் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், துளியும் பண பலம் இல்லாதவர்களைவிட, ஓரளவேனும் பண பலம் உள்ளவர்கள் தான் முதலில் நுழையவும், நுழைந்த பின் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியும் என்பதும், வசதி யற்றவர்கள் முண்டியடித்து, முட்டி மோதித்தான் தங்கள் இடத்தைப் பிடிக்க முடியும் என்பதும்தான் நீண்ட காலமாக சமூகத்தின் நிலை. ராஜாஜி, பெரியார், நேரு என்று அரசியலில் பெரும் தாக் கத்தை 20&ம் நூற்றாண்டில் ஏற்படுத்திய பலர், வசதியான பின்னணியில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களுடைய சமூக அக்கறைகள் தெளிவாக இருந்ததனால் தான், அவர்களைப் பின்பற்றி வந்த வசதியற்றவர்களான சத்தியமூர்த்தி, காமராஜர், அண்ணா போன்றவர்கள் தங்களுக்குரிய இடத்தைப் பெற முடிந்தது. சமூகப் பார்வையில் தெளிவும், தனக்குச் சமமான கூர்மையும் உடைய ஏங்கல்ஸ் போன்ற பணக்கார நண்பர் இருந்திரா விட்டால், வசதி குறைந்தவரான கார்ல் மார்க்ஸ் இன்னும் அதிக சிரமப்பட்டு இருப்பார்.

எனவே, இட ஒதுக்கீட்டிலும், அந்தந்த சாதியில் ஓரளவு வசதியுள்ளவர்களே முதல்கட்டத்தில் உயர் கல்வி வரை வர முடியும். அப்படி வருபவர்களில் அக்கறை உள்ளவர்கள்தான் மற்றவர்களை அரசி யல் படுத்தித் திரட்ட முடியும். அந்த நிலைக்கு வருவதற்கு அந்தந்த சாதி ஏழைகள் முதலில் அடிப்படைக் கல்விக் கான வசதியைப் பெற்றாக வேண்டும்.

தவிர, இட ஒதுக்கீடு என்பது பொருளா தார ஏற்றத் தாழ்வைச் சரி செய்ய வந்த திட்டம் அல்ல. சாதிகளிடையே ஏற்றத் தாழ்வைச் சரி செய்யவும், எல்லாச் சாதிகளுக்கும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொடுக்கவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்ட திட்டம். வறுமை ஒழிப்புக்கும் வர்க்க சமத்துவத்துக்கும் வேறு திட்டங் களைத்தான் நாம் உருவாக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டில் அந்தந்த சாதிக்கான இடங்களில் முதல் தலைமுறையாகப் படிப்போர், ஏழைகளுக்கு முன்னுரிமை தருவது சரிதான். ஆனால், அதை ரிசர்வேஷன் இடங்களில் மட்டும் செய்வது சரியாகாது. ஓப்பன் கோட்டாவிலும் அதே போல ஏழைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.சமையல்கார பிராமணர், சவுண்டி பிராமணர், டிரைவர் முதலியார் ஆகியோரின் குழந்தைகளுக்கு முன்னு ரிமை தர, மூன்று தலைமுறையாக வக்கீல்களாக இருக்கும் அய்யர்களும், ஆடிட்டர்களாக இருக்கும் அய்யங் கார்களும், டாக்டர்களாக இருக்கும் முதலியார்களும் முன்வருவார்களானால், மற்ற சாதிகளிடமும் இது குறித்து நாம் விவாதிக்கலாம்.


அதே போல ஏழை- பணக்காரன் வாதத்தைக் காட்டி ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதும் தந்திரமானது. இப்போது ஏழைகளைப் பற்றிக் கவலைப்படும் இவர்கள், இதுவரை பணக்காரர்களுக்கென்றே இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தனியாரின் டொனேஷன் கல்லூரிகளுக்கு எதிராக ஒரு போராட்டமும் செய்ததில்லை.

படிப்பறிவே இல்லாத ஒரு குடும்ப சூழலிருந்து சட்டென்று ஐஐடிக்கு ஒரே ஹைஜம்ப் அடித்து செல்வது இயலாதது, கீழுள்ளதை சற்று படித்து பாருங்கள்


இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களால் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு இட ஒதுக்கீட்டை பயன் படுத்தி முன்னேறியவர்களே மீண்டும் மீண்டும் அதை பயன்படுத்துகிறார்கள், சரியாக வார்த்தைகளை கவனிக்கவும் பயன்படுத்துகிறார்கள் பயன்படுத்துவார்கள் என சொல்லவில்லை, பயன்படுத்துகிறார்கள் என்று கூறுகின்றனர்.

ஒரு தலைமுறைக்கு 33 ஆண்டுகள், இட ஒதுக்கீடு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றது, சரியாக சொல்லப்போனால் முதல் தலைமுறையில் அதன் பலன் தெரியவில்லை, ஏனெனில் தொழிற் கல்விகளுக்கான(professional courses) (உதாரணம் பொறியியல்,மருத்துவம்,சட்டம் மற்ற கல்விகள்) அடிப்படை தகுதிகள் பெறும் அளவிற்கு கூட அந்த கட்டத்தில் பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை, மேலும் தொழிற்கல்விகள் படிக்க முனைந்தவர்கல் மிக மிகக்குறைவே, மேலும் அன்றைய காலகட்டத்தில் மிகக்குறைந்த அளவிலேயே தொழிற்கல்வி கல்லூரிகள் இருந்தன, மேலும் SSLC, PUC முடித்தவுடன் அரசாங்கம் அளித்த கடைநிலை ஊழியர்கள், எழுத்தர்கள், ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியர்கள் என்று தான் அவர்களால் செல்லமுடிந்ததே தவிர பெரும் எண்ணிக்கையில் அவர்களால் முன்னேற முடியவில்லை, ஆதலால் கிட்டத்தட்ட ஒரு தலைமுறை இட ஒதுக்கீட்டினால் பெரிய பலன் அடையவில்லை.

இரண்டாம் தலைமுறை, அதாவது எண்பதுகளின் இறுதியில் தான் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக எண்ணிக்கையில் தொழிற்கல்லூரிகளினுள் அடியெடுத்து வைத்தனர்,
கிட்டத்தட்ட கடந்த பதினைந்து பதினாறு ஆண்டுகளாகத்தான் இடஒதுக்கீடு அதன் பலனை தந்து கொண்டிருக்கின்றது, இட ஒதுக்கீட்டை அனுபவித்துள்ள இந்த தலை முறையின் சந்ததிகள் இன்னமும் கல்லூரி நிலையை எட்டியிருப்பார்களா என்பது சந்தேகமே... அதற்குள் தலைமுறையாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு சாரரே இட ஒதுக்கீட்டை பயன் படுத்துகின்றனர் என்பது எத்தனை அப்பட்டமான பொய்.

எழுபதுகளில் தொழில்கல்லூரியில் இடஒதுக்கீட்டில் பயனுற்றவர்கள் மிக மிக குறைவே அவர்களின் சந்ததிகளின் எண்ணிக்கையும் விழுக்காடு அளவில் மிகக்குறைவே என்பது கண்கூடு, இருந்தாலும் இப்படி ஒரு பொய் பிரச்சாரம் இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களால் வைக்கப்படுகின்றது, இட ஒதுக்கீட்டு சட்டத்தில் திருத்தம் தேவை ஆனால் அதன் தேவை இன்றே என்ற அளவில் இல்லை,

தலைமுறை தலைமுறையாக இட ஒதுக்கீட்டை ஒரு சிலரே பயன்படுத்துகிறார்கள் என்பது அப்பட்டமான பொய் பிரச்சாரம், இட ஒதுக்கீட்டை பயன்படுத்திய/பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற முதல் தலைமுறை தான் இப்போது உள்ளது.

தலைமுறை தலைமுறையாக இட ஒதுக்கீட்டை ஒரு சிலரே பயன்படுத்துகிறார்கள் என்று கவலைப்படும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் அதன் காரணத்தால் இட ஒதுக்கீட்டையே நிறுத்த சொல்வது வினோதமான ஒன்று.

என்னுடைய அடுத்த தொகுப்பில் க்ரீமிலேயர் பற்றிய கட்டுரைகளும் இடம்பெறும்

12:57 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://jataayu.blogspot.com/2007/04/blog-post_23.html

ஸ்ப்ப்ப்பா பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது, மத்தவால்லாம் சுத்தி வளைச்சி பேசிண்டிருந்தா, நீர் நன்னா நேரடியா சொல்லிட்டேள், ஜடாயு தெள்ளத்தெளிவா என்ன சொல்றார் புரியுதோன்னா புரியுதோ?....

8:30 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://kilumathur.blogspot.com/2007/05/blog-post_9117.html

போராளி, புரட்சியாளர் புலவர் கலியபெருமாள் அவர்களின் மரணச்செய்தி நிலைகுலைய வைக்கின்றது...

கண்ணீருடன்
குழலி

6:24 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://idlyvadai.blogspot.com/2007/06/blog-post_26.html
//ஒட்டுமொத்தத்துல இந்த 60 வருஷத்துல பொதுஜனம் அத்தனைபேரும் (என்னையும் சேர்த்துதான்பா சொல்றேன்) மழைல நனையற எருமைமாடு மாதிரி ஆயிட்டோம்! ஊருக்கு ஊரு, தெருவுக்கு தெரு மனுஷன் நடக்க முடியாத அளவுக்கு எங்க பார்த்தாலும் கட்சித்தலைவர்கள் கட்அவுட், போஸ்டர்!//
60 வருசம் முன்னாடி அப்படியே பாலும் தேனும் ஓடுச்சாமோ? இப்போ கட்-அவுட் போஸ்டரால நடக்க முடியலைன்னு வேதனைப்படுறாங்களாம், 60 வருசத்துக்கு முன்னால நாயும் பூனையும் நடந்த தெருவுக்குள்ள மனுசன் நடக்கவே பெரியார் வந்து போராட வேண்டி வந்துச்சி, போங்கய்யா நீங்களும் உங்க .....

6:38 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://truetamilans.blogspot.com/2007/06/blog-post_29.html

உங்களின் இந்த பதிவில் பொதுவாக எனக்கு மாற்று கருத்து ஏதுமில்லை.... ஒரு சில இடங்கள் தவிர....

இந்த கேள்வி உங்களுக்கு

இந்த பதிவில் குடி குடி என்கிற இடத்திலெல்லாம் ஹெல்மெட் என்று போட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்? அல்லது
ஹெல்மெட் சட்டத்திற்கு "என் சாவைத் தடுக்க இவர்கள் யார்..?" என எழுதப்பட்ட பதிவில் http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_29.html ஹெல்மெட் ஹெல்மெட் என்ற இடத்தில் குடி குடி என்று போட்டிருந்தால் எப்படியிருந்திருக்கும்....

உண்மைதமிழா கட்டாய ஹெல்மெட்டுக்கு சட்டம் தேவையில்லை என்ற உங்களுக்கு மதுக்கடைகள் மூட மட்டும் சட்டத்தையும் அரசாங்கத்தையும் தேடுகிறீர்கள் (மதுக்கடை மூடுதலை நான் ஆதரிக்கிறேன் என்பது வேறு விசயம்...) என்றால் வெளிப்படையாகவே கேட்கிறேன் மதுகடை திறந்து வைத்திருப்பதால் அதை எதிர்ப்போம் உயிர் போகிறது என்று அதே கட்டாய ஹெல்மெட் கொண்டுவந்தால் தனிமனித சுதந்திரம் என்பதில் ஆரம்பித்து என் சாவை தடுக்க நீ யாருடா என அதையும் எதிர்ப்போம்.... என்றால் இரண்டு கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பிரச்சினைக்கு இரண்டு வேறு விதமான நிலைகளை உங்களை போன்ற விமர்சகர்கள் எடுத்தால் உங்களுக்கு பிரச்சினைகள் மீது பிரச்சினையா? அல்லது திமுக செய்வதால் பிரச்சினையா?

3:52 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://govikannan.blogspot.com/2007/08/blog-post.html

வன்னிய சாதி வெறியர்களின் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.... நேரம் கிடைத்தால் விரிவாக மிச்சத்தையும் பேசலாம்....

நன்றி

6:16 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://dondu.blogspot.com/2007/09/blog-post_04.html

//வாதத்துக்கு அப்படியே தெரியாது என்று கூறியதாகவே வைத்துக் கொள்வோம். அது மட்டும் உண்மையா?
//
நிச்சயமாக ஏனெனில் அப்போது சந்தேகம் மட்டுமே இருந்தது, உண்மையா என்று தெரியாது, விடாது கருப்பு பதிவில் என் பின்னூட்டத்தை மட்டும் காப்பியெடுத்து போட்டுக்கொண்டு திரிகின்றீரே அதற்கு கீழே விடாதுகருப்பு பின்னூட்டம் உள்ளதே, நான்(விடாதுகருப்பு) உங்களை(என்னை) சந்திக்கவேயில்லைய்யென்று அதை வசதியாக மறைத்ததேனோ?

டோண்டு அய்யா மூர்த்திக்கும் உங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அவன் அசிங்கமாக பேசுவான் மெயில் அனுப்புவான் நீங்கள் அசிங்கமாக பேசவோ மெயில் அனுப்பவோ மாட்டீர்கள் (குறைந்த பட்சம் என்னிடத்தில்)...

இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை....

நன்றி

7:13 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://rathnesh.blogspot.com/2007/09/blog-post_08.html
//அதே கிராமத்தினர் மற்றும் ஏழைபாழைகளின் ஓட்டில் எம்எல்ஏ அல்லது மந்திரி என்று ஆகிவிட்டவர்கள் ஏன் சிலகாலமாவது கிராமங்களில் தங்க வேண்டும் என்கிற கட்டாய விதி ஏற்படுத்தக் கூடாது?
//

தொடர்ந்து இது மாதிரி சொல்வதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போது நான் பாமக வின் இணைய கொள்கை பரப்பு செயலாகிவிடுகிறோனோ என்று சந்தேகமே எனக்கு வந்துவிடுகின்றது :-) சரி விசயத்துக்கு வருகின்றேன், பாமக எம்.எல்.ஏ. எம்.பி கள் கிட்டத்தட்ட அனைவருமே கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள், மேலும் அனைத்து எம்.எல்.ஏக்களும் எம்.பி.களும் அவ்வப்போது ஏதேனும் ஒரு கிராமத்த்ற்கு சென்று அங்கே முழுக்க தங்கியிருந்து அவர்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென மருத்துவர் இராமதாசு சொல்லியிருக்கிறார் அதை அவர்கள் கடைபிடித்துக்கொண்டுமிருக்கின்றார், இப்படியான ஒரு விசிட்டை (திண்டிவனம் எம் பி தன்ராஜ்ஆனந்தவிகடன்) கவர் ஸ்டோரியாகவே போட்டிருந்தது. மேலும் அந்தந்த செய்திதாள்களின் உள்ளூர் பதிப்புகளில் இந்த செய்திகள் வருவதுண்டு, இதையெல்லாம் சொல்வதால் என் மீது பாமக காரன் என்கிற முத்திரை மேலும் வலுவாக விழும் என்ற போதிலும் தெரிந்த ஒரு விசயத்தை முத்திரைக்கு பயந்து கொண்டு சொல்லாமல் இருக்க என் சுபாவம் இடம்கொடுக்கவில்லை

12:19 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://oootru.blogspot.com/2007/09/blog-post_18.html

தங்கரின் வாய்கொழுப்பு ஊரறிந்த ஒன்று,தங்கர் கண்டிப்பாக வாயை கட்டுப்படுத்த வேண்டும், தங்கர்-சேரன் பிரச்சினை இன்று தொடங்கியதல்ல, தங்கர்-சேரன் இருவரும் கடுமையாக விமர்சித்து மோதிக்கொண்டு அதன் பின்பு "சொல்ல மறந்த கதை"யில் சேர்ந்தனர், தங்கரின் சுருட்டல் கதைகளை பல முறை கிசு கிசுக்களாக புத்தகங்களில் படித்திருக்கின்றேன், வலைப்பதிவில் கூட ஒரு முறை யாரோ சொன்னார்கள்....

"தலைகீழ்விகிதங்கள்" கதை சொல்ல மறந்த கதையாக மாறிய போது கதாசிரியர் "நாஞ்சில் நாடன்" அவர்களுக்கு தமிழ்திரைப்பட கதாசிரியர்களும் யாருக்கும் கிடைக்காத சம்பளம் தந்ததாக படித்தேன்... அதை பலரும் அந்த நேரத்தில் பாராட்டியிருந்தனர், அப்படிபட்ட தங்கர் சேரனுக்கு 3 இலட்சம் தந்துவிட்டு 25 இலட்சம் தந்ததாக தயாரிப்பாளரிடம் சொன்னதாக சேரன் குற்றம் சாட்டியது அதிர்ச்சியையே ஏற்படுத்தியது...என்றாலும் தங்கர் செய்திருக்காலாம் என்றே நம்ப தோன்றுகிறது.


ஒன்பது ரூபாய் நோட்டு மிக அற்புதமான நாவல், அந்த கதை நாயகனையும் மற்றவர்களையும் அச்சு அசலாக என் கண்முன்னே பார்த்திருக்கின்றேன்... கொஞ்சம் கூட ஹீரோயிசமில்லாமல் வீம்பு பிடிக்கும் ஒரு மனிதரை பற்றிய கதை... பார்ப்போம் எப்படி படமாக்குகின்றார் என்று.....

"ஒன்பது ரூபாய் நோட்டு" என்கிற அந்த தலைப்பே முழுகதையையும் சொல்லிவிடுகிறதே... தலைப்பினுள்ளே கதை அற்புதம்...

ஒரு அற்புதமான படைப்பாளி ஏன் இத்தனை திமிரும் வாய்கொழுப்பும் எடுத்து ஆடவேண்டும்?

6:50 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://jannal.blogspot.com/2007/09/blog-post_19.html

//பின்னூட்டம் போடுபவர்களுக்கு வசதியாக கீழே சில templateகள் தரப்பட்டிருக்கின்றன. அவரவர் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளலாம்:
//
எங்களை மாதிரி கற்றுக்குட்டிகளுக்கு ஓகே, ஆனால் முதிர்ந்த எழுத்தாளர் மாலனுக்கு இது அழகா? என்று யோசிக்க தோன்றுகிறது....

பதிவை பற்றி கருத்தென்றால் உண்மை எதுவென்று கிஞ்சித்தும் எனக்கு தெரியாது, கருத்து சொல்வதென்றால் நம்பிக்கையின் பேரிலேயே சொல்லவேண்டிய நிலை அதனால் நோ கமெண்ட்ஸ்

8:30 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://sugunadiwakar.blogspot.com/2007/11/blog-post_20.html

//நான் சமீபத்தில் கேள்விப்பட்ட தகவல், சில கணிப்பொறி நிறுவனங்களில் அங்கு பணிபுரியும் ஆண்/ பெண்ணைக் காதலித்து மணந்தால் சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் உண்டாம். ஆக குடும்பத்தோடு கொத்தடிமைகள்.
//
இந்த கேள்விப்பட்ட தகவல் எந்த நிறுவனம், யார் சொன்னார் என்று தெளிவாக தெரிவிக்கவும் ஏனெனில் இந்த கேள்விப்பட்டேன் கேள்விப்பட்டேன் என்றே பல கேள்விப்பட்டதாக சொல்லப்படும் தகவல்கள் ஐ.டி. துறைப்பற்றி சில பிம்பங்களை உருவாக்குகின்றது.... இவர் சொன்னார், இந்த நிறுவனம் சொன்னது என்று சொல்வதில் சுகுணாவிற்கு எந்த தயக்கமும் இருக்காது என நினைக்கிறேன்.


பிபிஓ கால்செண்டர் கழிவறைகள் காண்டம்களால் நிரம்பி வழிகிறது என்று 'லூசு' சாருநிவேதிதா (முதன்முறையாக சாருநிவேதிதா லூசு என்ற அடைமொழியில் அழைக்க ஆரம்பிக்கிறேன்) சொல்வதும், மன்சூர் அலிகான் என்ற 'பொறுக்கி' நடிகன் திரைப்படங்களில் காரில் பாலுறவு கொள்பவர்களை பார்த்து ஏன்டா அதான் கால்செண்டர் இருக்கே என்று சொல்வதும் 'கேள்விப்பட்டு கேள்விப்பட்டு கேள்விப்பட்டு' சொல்வது தான்... பிபிஓ, கால்செண்டர், ஐடி துறைப்பற்றிய ஒரு உண்மையில்லாத பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தோன்றுகின்றது, அதே துறையில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஒருவனுக்கு தெரிந்ததை விட கேள்விப்பட்டவர்கள் கேள்விப்பட்டதாக சொல்லுவது எனக்கே பயமாக இருக்கின்றது...

'கற்றது தமிழ்' இன்னும் பார்க்கவில்லை, பார்த்த பிறகு அதைப்பற்றி பேசலாமென உள்ளேன்...

5:52 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://masivakumar.blogspot.com/2007/12/blog-post_3933.html

வணக்கம் மா.சி.,
நான் பல வருடங்களாக சரவணபவன் உணவகத்தில் சாப்பிடுவதில்லை சரவணபவன் உணவு எவ்வளவு நன்றாக இருந்தாலும், சரவணா ஸ்டோர்ஸ்ல் பொருள் வாங்குவதில்லை எத்தனை விலை மலிவாக இருந்தாலும் ,எங்களூரில் நண்பனோடு கொடுக்கல் வாங்கல் பிரச்சினை என்று வந்தபின் அவரின் குழந்தை மனைவியையும் கூட கொலை செய்த பஸ் ஓனரின் பஸ்ஸில் ஏறுவதில்லை எத்தனை அவசரமாயிருந்தாலும்.... இன்னும் இது போன்ற ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.... சேவை தரமெல்லாம் நன்றாக இருந்தும் நான் புறக்கணிக்கும் மனிதர்கள் / நிறுவனங்கள் / கடைகள்...

6:51 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://cdjm.blogspot.com/2008/03/blog-post_31.html

கடலூர் புதுச்சேரி மறைமாவட்டத்திலே எறையூர் ஏகப்பட்ட பாதிரியார்கள், சிஸ்டர்கள் என வழங்கி இந்த மறைமாவட்டத்தில் எப்போதுமே எறையூர் வன்னிய கிறுத்துவர்களின் ஆதிக்கம் அதிகம்..... மதம் மாறி வந்தாலும் சாதி ஒழிக்க முடியாத வன்னிய ஆதிக்க சாதிவெறியில் ஊறி திளைத்த சாதி வெறியர்கள் இம்மாதிரியாக தலித்களின் மீதான வன்கொடுமைகளை செய்கின்றனர்....

ஜோ வடமாவட்டங்களில் இந்து / கிறித்துவ மதம் என்ற வேறுபாடின்றி சாதி வெறியே முதன்மையாக இருக்கின்றது

இந்த பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் போதே இறந்து போன தலித் ஒருவரின் சடலத்தை பொது வண்டியிலும் பொது வழியிலும் எடுத்து செல்ல கடும் முயற்சியையும் தடுத்தால் எறையூரில் வன்னியர்களுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என அறிவித்து பொது வண்டியிலும் பொதுப்பாதையிலும் எடுத்து செல்ல வைத்த திண்டிவனம் தொகுதி பா.ம.க. எம்பி தன்ராஜ் அவர்களின் தலைமையிலான பாமக-விடுதலை சிறுத்தைகள் குழுவிற்கு எமது பாராட்டுகள்....

ஆனாலும் என்ன அடுத்த நாளே எப்படி பொது வண்டியில் தலித் சடலத்தை எடுத்து செல்லலாமென வண்டியை அடித்து நொறுக்கிவிட்டார்கள் வன்னிய சாதி வெறியர்கள்....

மதம் மாறினாலும் சாதி விசம் மாறவில்லை....

10:18 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://salladai.blogspot.com/2008/12/politics-of-depoliticisation.html

மிக பொருத்தமான ஒரு படைப்பு, அரசியல் என்றால் என்ன என்ற புரிதலோ அதற்கான எந்த முயறிச்சியுமே இல்லாமல் வெறும் வாக்கு அரசியலை மட்டுமே அரசியலாக பார்க்கின்ற சூழலில் இந்த கட்டுரை தெளிவு தர முயற்சிக்கிறது.

ஆனால் எல்லா கம்யூனிஸ்ட்களும் எல்லாவற்றையும் வர்க்க வேறுபாட்டில் போய்தான் நிறுத்துவார்கள் என்பதற்கு நீங்களும் விதிவிலக்கல்ல என்பதற்கிணங்க நீங்களும் கடைசியாக வர்க்க வேறுபாட்டில் வந்து நிறுத்தி இருக்கின்றீர்...

வர்க்க வேறுபாட்டு அரசியலை விட இன்று(மட்டுமல்ல என்றுமே) Priority politics என்பதுவே எல்லா அரசியலையும் தீர்மாணிக்கின்றது.... நான் யாருக்கு வாக்களிக்கனும் என்பதை என் கொள்கைகள் எட்செட்ர்ரா எல்லாவற்றையும் தாண்டி தீர்மாணிப்பது என் Priority politics தான்.... அந்த நேரத்தில் எது எனக்கு(அல்லது மக்களுக்கூ அல்லது இனக்குழுவுக்கு) அதிக முக்கியம் என்பதே அந்தந்த நேரத்து அரசியலை தீர்மாணிக்கின்றது.... வெறும் வர்க்க வேறுபாடு அரசியலை தீர்மாணிப்பதில்லை.....


போதாமையால் (inadequacy) உருவாவதுதான் இத்தகைய எண்ணப் போக்குகள். நடைமுறையில் இருக்கும் கட்சி அரசியல் என்பதிலிருந்து மாறுபட்டதுதான் உண்மையான அரசியல். குறிப்பிட்ட மக்கள் குழுக்கள் தங்களுடைய நலனை முன்னிலைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே அரசியல். இத்தகைய மக்கள் குழுக்கள் பெரும்பாலும் பொருளாதார அடிப்படையில் அமைவதுதான் இயற்கை. ஓவ்வொரு நாட்டு அரசியலும் இந்த திசையில் மெல்ல மெல்ல பயணித்து வருகிறது. எனினும் அனைத்து அரசியல் குழுக்களும் தன்னுடைய பொருளாதார நலனை நேரடியாக முன்னிறுத்தி இயங்க ஆரம்பித்தால் ஒருவிதமான சமநிலை (Equilibrium) விரைவில் ஏற்பட்டுவிடும். அந்த சமநிலையானது ஒவ்வொரு குழுவின் பலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதாகவே இருக்கும். எனவேதான் இந்த பலத்தில் மாற்றம் எற்பட்டாலொழிய ஒரு குழுவானது மற்றறொரு குழுவைவிட அதிக பொருளாதார பலனை அடைய முடியாது. ஓவ்வொரு குழுவும் அது பிரதிநிதித்துவ படுத்துவதாக இலக்கு வைத்துள்ள மக்கள் குழுக்களை தன்னுடைய நடவடிக்கைகளுக்குள் உள்ளிழுப்பதே அரசியல்மயப்படுத்துல். இந்த அரசியல்மயப்படுத்துதலே அக்குழுவின் பலத்தை தீர்மானிக்கும்.

10:25 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://eenpaarvaiyil.blogspot.com/2009/01/blog-post.html

//ஈழ பிரச்சனையில் கலைஞரின் தொடர்ச்சியான மெளனம்தான் மிகவும் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகும், இன்னும் எதற்காக காத்திருக்கிறார்
//
எதுவரை காத்திருப்பார் என்றால் எளிதாக சொல்லலாம், விடுதலை புலிகள் அழியும் நாள்வரை காத்திருப்பாரென்று.... வெறும் மந்திரி பதவி மட்டும் காரணமென்று நான் நம்பவில்லை...

//ஈழமக்களே இல்லை அவர்கள் எல்லாம் இலங்கை மக்களே என்றுரைக்கும் ஜெயலலிதா இருப்பதால்தான் கருணாநிதியை ஆதரிக்க வேண்டி இருக்கிறது. // சூப்பருங்க வழக்கம்போல ஜெயலலிதாவை முன்னிட்டு கருணாநிதியை ஆதரிக்கும் வசனம்(இதே வசனத்தை பலமுறை நானே சொல்லியிருக்கிறேன்,இப்போது என்னோட இதையே நானே திங்கற மாதிரி இருக்கு ).

ஏன் நாம் திருமாவை முழுமூச்சாக ஆதரிக்க கூடாது? என்னதுக்கு கலைஞர் மட்டும்? கலைஞரை ஒதுக்குவோம் கலைஞர் போய் பங்கு பிரிக்கும் வேலையையும் பெரிய குடும்பங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினையை தீர்க்கும் புரோக்கர் வேலையை பார்க்கட்டும்...

திருமாவை தமிழக தலைமையாக்குவோம்....

மருத்துவர் இராமதாசு மேல் மிக நிச்சயமாக ஈழம் விசயத்தில் ஏமாற்றமும் அதிருப்தியும் உள்ளது, ஆனால் இதுவரை பாமக சாதிகட்சி என்று பேசியவர்களுக்கு எப்போதிலிருந்து பாமக எல்லா சாதிக்கும் பொதுவான கட்சி ஆனது?

இரண்டு அரசியல் இப்போது செய்யவேண்டும், ஒன்று தமிழினத்திற்கு வெளியேயான அரசியல், மற்றொன்று தமிழினத்துக்குள்ளான அரசியல், ஆனால் இப்போதை இவை இரண்டுக்குமே திமுக தகுதியற்றதாகிவிட்டது...

5:28 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://mankavuchi.blogspot.com/2009/02/blog-post_26.html?showComment=1235701020000#c2623816816603757079

வணக்கம் அய்யா,
இவர்களை பற்றி நீண்ட நாட்களாக விரிவாக எழுத வேண்டுமென நினைத்தேன் ஆனால் முடியவில்லை...

சாதிப்பிள்ளைகள் முன்பெல்லாம் வன்னியர் வீட்டு சடங்குகளை செய்பவர்களாக இருந்தார்கள், இப்போதும் கூட, வன்னியர் வீடுகளை தவிர வேறு யார் வீட்டிலும் இவர்கள் வரி(மன்னிக்கவும் இப்போ இது கிட்டத்தட்ட பிச்சை மாதிரி) கேட்க மாட்டார்கள், மேலும் இது வரி வசூல் போன்ற அதிகார தோரணையாகவே இருக்கும் அதேபோல் வன்னியர் வீடுகளிலும் இவர்களின் அதிகார தோரணையை கோபமின்றி மறு பேச்சில்லாமல் ஏற்று கொள்வார்கள்...

கிட்டத்தட்ட கல்வியறிவு என்பதே இல்லாத சமூகம், தொடர்ச்சியான இடம்பெயர்ந்தே வாழ்வதால் இம்மக்களால் கல்வியறிவு பெற இயலவில்லை என்றாலும் இவர்களுக்கென சொந்த ஊரும் அதில் நிலபுலண்களும் இருப்பதுண்டு.

இவர்கள் தொடர்பான ஒரு கதை உண்டு, வன்னிய சமூகத்தை சேர்ந்த ஒருவர் மலையாள தேசத்தில் சென்று மிகப்பெரிய நிலையை அடைவார் நிறைய செல்வங்களை சேர்த்துக்கொள்வார், அங்கேயே வேற்று சாதி பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வார் அதனால் அவரை சொந்த ஊரில் வன்னியர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், பின் அவ்வூர் கோவில் கட்டுவதற்கு நிலைப்படி வைக்கும் போது ஒவ்வொரு நாளும் அது விழுந்துவிடும், இது விழாமல் நிற்க கர்ப்பிணி பெண்ணை பலி கொடுக்க வேண்டுமென்பார்கள், அதற்கு வேறு யாரும் ஒத்துக்கொள்ளாததால் இவர் தன் மனைவியை பலி தர ஒத்துக்கொள்வார், ஆனால் அதற்கு பதில் தன் சந்ததிகளுக்கு வன்னியர்களின் வாழ்விலும் சாவிலும் பங்கிருக்க வேண்டுமென சடங்கு நடத்தும் உரிமையையும் வரிவசூல் உரிமையையும் கேட்பார்கள்... அதற்கு ஒத்துக்கொண்ட பின் நிறைமாத கர்ப்பிணியை பலிகொடுக்க கோவில் நிலைப்படி நிலையாக நிற்கும்... இது ஒரு கதை இதன் உண்மைதன்மை தெரியவில்லை....

சமூக நிலையில் கல்வி விழிப்புணர்ச்சியில் மிகுந்த பின்னடைவில் உள்ள சமூகம்...

6:18 PM  

Post a Comment

<< Home