Saturday, March 04, 2006

மார்ச் 04

http://eenpaarvaiyil.blogspot.com/2006/03/blog-post_03.html

கால்கரி சிவாவின் பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் விட நினைத்து வந்த போது நான் நினைத்ததையும் விட தெளிவாக சொல்லியுள்ளார் மூக்கு சுந்தர்.

//இலக்கியத்திலும் ஜாதியா?. தலித் இலக்கியம் என்றால் என்ன? பார்ப்பன இலக்கியம் என்றால் என்ன?
//
உண்மையிலேயே தெரியவில்லையா? தலித்துகளின் மீதான அடக்குமுறையையும் அவர்களின் வாழ்க்கையையும் இலக்கியமாக வடிப்பது பார்ப்பன இலக்கியம் எது தெரியுமா? ஒரு பிராமண குடும்பம் நொடித்து போய் அடுத்த வேளை காப்பிக்கு காபி பொடிக்கு அடுத்த ஆத்து மாமியிடம் கடன் கேட்கும் நிலைக்கு வந்தது தான் உலகின் மிகப்பெரிய துக்கம் போல எழுதுவது.

பட்ட படிப்பு படித்து பின் 'டி' கிரேடு தேர்வெழுதி வேலைக்கு வந்த தலித் பெண்ணை கோட்டா என்று பட்டம் கட்டி டெஸ்பாட்ச் வேலை கொடுத்து ஓரம் கட்டி வைத்து விட்டு எஸ்எஸ்எல்சி யில் கோட் அடித்துவிட்டு சூப்பர்வைசரின் சொந்தக்காரன் என்பதால் காண்ட்ராக்டில் வேலைக்கு சேர்ந்து கிளார்க் வேலை செய்யும் அநியாயத்தை கண்டு புழுங்கி அந்த வேதனையை எழுதுவது தலித் இலக்கியம்.

ஏன்டி இப்படியா டிரஸ் பண்ணுகிட்டு மினுக்கற அவனை மயக்கறதுக்கு என்று மகளை கேட்க, நீ மட்டும் என்ன அப்பா செத்த பிறகு மொட்ட பாப்பாத்தியாவா இருக்க நன்னா எண்ணெய தடவி வழிச்சி சீவிண்டு தானே இருக்க என்று மகள் கேட்ட வார்த்தைக்காக மறுநாள் மொட்டை அடித்துவிட்டு வந்ததை உலகின் பெரிய துக்கமாக எழுதுவது பார்ப்பன இலக்கியம்.

//சுடலைமுத்து ரெட்டியார் வீட்டிற்கு போய் தன் மகன் பெயர் மோகன் என்று சொன்னான், செல்லப்பெயரையும் கூறினான் , இப்படி தனக்கு தெரிந்த எல்லா வீடுகளுக்கும் போய் சொன்னான், முனிசிபல் சேர்மனின் மனைவி கேட்டாள்: "அப்போ அவனை பேபி தோட்டீன்னு கூப்பிடனுமா?" இப்படி சொல்லிவிட்டு சிரித்தாள் அவள்.- தோட்டியின் மகன் நாவலிலிருந்து
//

சிறிய வயதில் கல்யாணம் ஆகி விதவையாக நிற்கும் அத்தை சாமி பூசை பஜனை என்று இருப்பதாகவும் வேலைக்காரி கணவன் இருக்கும் போது இன்னும் வேறொரு ரவுடியிடம் சோரம் போவதாகவும் எழுதுவது பார்ப்பன இலக்கியம், அய்யா ராசா பார்ப்பன இலக்கியம் பற்றி நிறைய நிறைய நிறைய எழுதலாம்....தலித் இலக்கியம் படைப்பது தலித்களால் மட்டுமே முடியுமா என்றால் பிறரும் எழுதலாம் தலித்களின் மீதான அடக்கு முறையை பார்த்து தான் அவர்களால் எழுதமுடியும் இது எப்படியென்றால் பசி என்றால் எப்படியிருக்கும் என்று அனுபவித்து சொல்பவனுக்கும், பசியை அனுபவிக்காமல் பசியால் துடிப்பவனை பார்த்து பசி என்றால் எப்படியிருக்கும் என்பதை எழுதுபவனுக்கும் உள்ள வித்தியாசம்.

//ஒரு பார்பணர் பீ அள்ளவோ, மாடு அறுக்கவோ விரும்பி செய்தால் அதை தடுக்க யாரால் முடியும் அதேபோல் ஒரு தலித் ஒரு மதகுருவாகவோ அல்லது ஒரு உயர் அதிகாரியாகவோ ஆவதை யாரால் தடுக்க முடியும்.
//
எத்தனை தலித்கள் மாடு அறுக்க வேண்டுமென்றும் எத்தனை தோட்டிகள் பீ அள்ளவேண்டும் என்றும் தன் பரம்பரையே தோட்டியாக இருக்க வேண்டுமென்றும் விரும்பி செய்கின்றார்கள்?

//தோட்டியின் மகன் தோட்டியாகவே பிறப்பதில்லை, தோட்டியாக உருவாக்கப்படுகிறான் அந்த தோட்டி தந்தையே அவனை தோட்டியாக வளர்க்க நினைக்காவிடினும்.
- தோட்டியின் மகன் நாவலிலிருந்து//

இன்னும் நிறைய உதாரணங்கள் எழுதலாம்.

--------------------------------------------

http://idlyvadai.blogspot.com/2006/03/blog-post_114147744241478705.html

மதிமுக எக்ஸ்ட்ரா லக்கேஜா?

2001 தேர்தலில் மதிமுக திமுக கூட்டணியில் இல்லாமல் போனதால் திமுக கூட்டணி 26 இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது,இவற்றில் 20க்கும் மேற்பட்ட தொகுதிகள் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில்.

அந்த நிலையில் கூட்டணியில் தென் மாவட்டத்தில் ஓரளவிற்கு வாக்கு வங்கியுள்ள காங்கிரஸ் திமுகவுடன் இல்லை என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும், தற்போது திமுக மதிமுகவிற்கு தர நினைத்தது 22 தொகுதிகள்...

திமுக கூட்டணி ஆட்சிக்கு தயாராக இல்லாமல் தனி ஆட்சிக்கு மட்டுமே தயாராக இருந்தால் தனிப்பட்ட முறையில் திமுக மதிமுகவினால் வெகு சில தொகுதிகளை மட்டுமே இழக்கும் என்பது எனது கணிப்பு.

நன்றி
-------------------------------------------------------------------
http://tamilkudumbam.blogspot.com/2006/03/blog-post_04.html

எதிர்பார்த்தது தானே!!!
----
என்ன ஒரு பத்து நாளைக்கு முன்னே போயிருந்திருக்கலாம், திருமா இங்கிருந்திருப்பார், பார்ப்போம் என்ன ஆகிறதென்று
--------------------------------------------------------------------
http://thamizhsasi.blogspot.com/2006/03/3.html

// தொண்டர் பலத்தையும் கொண்டு பார்க்கும் பொழுது தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை//
சசி மூன்றாவது பெரிய கட்சி பாமகவும் இல்லை மதிமுகவும் இல்லை, காங்கிரஸ் தான் என்பது எனது கருத்து, காங்கிரசில் தலைவர்களும் அதிகம் காங்கிரசிற்கு வாக்களிப்பவர்களும் அதிகம் ஆனால் இரண்டிற்கும் இடையில் இருக்கும் தொண்டர்கள் தான் மிகக்குறைவு...

ம்... இந்த பதிவை நான் எழுதியிருந்தால் சுற்றி சுற்றி அடித்திருப்பார்கள் என் சார்பு நிலைகளெல்லாம் என்ன எழுதியிருக்கிறேன் என்றே பார்க்காமல் விமர்சிக்கப்பட்டிருக்கும்.
---------------------------------------------------------------------
http://thamizhsasi.blogspot.com/2006/03/blog-post_04.html

//கலைஞர் அரசியல் சாணக்கியரா என்ற கேள்வி கடந்த சட்டமன்ற தேர்தலின் பொழுதே எனக்கு எழுந்தது
//
இந்த சந்தேகம் எனக்கு 1998 பாராளுமன்ற தேர்தலின் போதே ஏற்பட்டது

//எனவே திமுக-மதிமுக எந்தக்காலத்திலும் ஒரு இயல்பான கூட்டணியாக இருக்க முடியாது.
//
மதிமுகவில் இருப்பவர்கள் யாரென்று பார்த்தால் மதிமுக உருவாவதற்கு முன் ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவில் இருந்த எதிர் கோஷ்டியினர், கடலூர் மதிமுக பொறுப்பாளர்களிலிருந்து அத்தனை மாவட்டங்களிலும் மதிமுக பொறுப்பாளர்கள் திமுகவின் அப்போதைய பொறுப்பாளர்களை எதிர்த்து திமுகவிலேயே இருந்து எதிர்ப்பு அரசியல் நடத்தியவர்கள், இவர்கள் மனமுவந்து இணைந்து செயல்பட முடியாது என்பதும், கடந்த காலத்தில் திமுக-மதிமுக கூட்டணியின் போது இதை நேரிலேயே பார்த்திருக்கின்றேன்...

//கலைஞர் யோசித்து நயமாக, கவிதையாக பேசக் கூடியவர் என்ற நிலை மாறி இன்று உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார். திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கும் வாய்ப்பை கெடுத்தது கலைஞரின் பேச்சு தான்
//
ம்...

//சுமாராக 20-25 தொகுதிகளில் திருமாவளவனுக்கு கணிசமான ஆதரவு உள்ளது. திருமாவளவனை அதிமுக கூட்டணிக்கு அனுப்பியதன் மூலம் எளிதில் வெற்றிப் பெறக்கூடிய 20க்கும் மேற்பட்ட வடமாவட்ட தொகுதிகளை கலைஞர் கடுமையான போட்டிக்குள்ளாக்கியிருக்கிறார்.
//
மிக எளிதாக 'க்ளீன் ஸ்வீப்' அடிக்க வேண்டிய நிச்சய வெற்றி வட மாவட்ட தொகுதிகளை திருமாவின் கூட்டணியை விட்டதால் கடும் போட்டிக்குள்ளாகியிருக்கிறார்.

//எல்லாமே எதிர்பார்த்ததுதான். எதிர்பாராத ஆண்டி-க்ளைமேக்ஸ், திருமாவளவன் மட்டுமே.
//
நானும் இதையே தான் நினைகின்றேன், மதிமுக விலகலை அனைத்து கூட்டணி கட்சிகளும் முன்பே எதிர்பார்த்தது தான், இதனால் தான் திருமா அவசரப்பட்டு விட்டதாக மருத்துவர் இராமதாசு கூறியது.

அதிமுகவிற்கு மதிமுகவின் பலத்தால் 'சைக்காலஜிக்கல் பலம்' கிடைத்துள்ளதை தவிர வேறு பலன் இல்லை என்பது எனது கணிப்பு, தேர்தலுக்கு பின் பார்ப்போம் இது எந்த அளவு உண்மையென்று, ஆனால் திருமாவை வளைத்ததில் ஜெயலலிதா தேர்ந்த அரசியல்வாதியாகியிருப்பது மீண்டும் ஒரு முறை உறுதியாகியுள்ளது.

61 Comments:

Blogger குழலி / Kuzhali said...

http://thamizhsasi.blogspot.com/2006/03/blog-post_04.html

//கலைஞர் அரசியல் சாணக்கியரா என்ற கேள்வி கடந்த சட்டமன்ற தேர்தலின் பொழுதே எனக்கு எழுந்தது
//
இந்த சந்தேகம் எனக்கு 1998 பாராளுமன்ற தேர்தலின் போதே ஏற்பட்டது

//எனவே திமுக-மதிமுக எந்தக்காலத்திலும் ஒரு இயல்பான கூட்டணியாக இருக்க முடியாது.
//
மதிமுகவில் இருப்பவர்கள் யாரென்று பார்த்தால் மதிமுக உருவாவதற்கு முன் ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவில் இருந்த எதிர் கோஷ்டியினர், கடலூர் மதிமுக பொறுப்பாளர்களிலிருந்து அத்தனை மாவட்டங்களிலும் மதிமுக பொறுப்பாளர்கள் திமுகவின் அப்போதைய பொறுப்பாளர்களை எதிர்த்து திமுகவிலேயே இருந்து எதிர்ப்பு அரசியல் நடத்தியவர்கள், இவர்கள் மனமுவந்து இணைந்து செயல்பட முடியாது என்பதும், கடந்த காலத்தில் திமுக-மதிமுக கூட்டணியின் போது இதை நேரிலேயே பார்த்திருக்கின்றேன்...

//கலைஞர் யோசித்து நயமாக, கவிதையாக பேசக் கூடியவர் என்ற நிலை மாறி இன்று உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார். திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கும் வாய்ப்பை கெடுத்தது கலைஞரின் பேச்சு தான்
//
ம்...

//சுமாராக 20-25 தொகுதிகளில் திருமாவளவனுக்கு கணிசமான ஆதரவு உள்ளது. திருமாவளவனை அதிமுக கூட்டணிக்கு அனுப்பியதன் மூலம் எளிதில் வெற்றிப் பெறக்கூடிய 20க்கும் மேற்பட்ட வடமாவட்ட தொகுதிகளை கலைஞர் கடுமையான போட்டிக்குள்ளாக்கியிருக்கிறார்.
//
மிக எளிதாக 'க்ளீன் ஸ்வீப்' அடிக்க வேண்டிய நிச்சய வெற்றி வட மாவட்ட தொகுதிகளை திருமாவின் கூட்டணியை விட்டதால் கடும் போட்டிக்குள்ளாகியிருக்கிறார்.

//எல்லாமே எதிர்பார்த்ததுதான். எதிர்பாராத ஆண்டி-க்ளைமேக்ஸ், திருமாவளவன் மட்டுமே.
//
நானும் இதையே தான் நினைகின்றேன், மதிமுக விலகலை அனைத்து கூட்டணி கட்சிகளும் முன்பே எதிர்பார்த்தது தான், இதனால் தான் திருமா அவசரப்பட்டு விட்டதாக மருத்துவர் இராமதாசு கூறியது.

அதிமுகவிற்கு மதிமுகவின் பலத்தால் 'சைக்காலஜிக்கல் பலம்' கிடைத்துள்ளதை தவிர வேறு பலன் இல்லை என்பது எனது கணிப்பு, தேர்தலுக்கு பின் பார்ப்போம் இது எந்த அளவு உண்மையென்று, ஆனால் திருமாவை வளைத்ததில் ஜெயலலிதா தேர்ந்த அரசியல்வாதியாகியிருப்பது மீண்டும் ஒரு முறை உறுதியாகியுள்ளது.

5:33 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://kuzhappam.blogspot.com/2006/03/blog-post.html

//திருவகீந்தபுரம் தேவநாத சுவாமி
//
என்னங்க நீங்க நம்ம ஊரு(கடலூர்) பக்கமா?

3:20 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://paravai.blogspot.com/2006/03/blog-post.html

சில விடயங்களை மிகவும் சுருக்கமாக எழுதிவிட்டீர் விரிவாக சில விடயங்கள் எழுதப்பட வேண்டும் அவர்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக அல்ல, மற்றவர்களுக்கு புரிந்துள்ளது என்பது அவர்களுக்கு புரியவேண்டுமென்பதற்காக...

5:05 AM  
Blogger குழலி / Kuzhali said...

பயங்கரவாதி 'வைகோ' வுடன் கூட்டணி வைத்த தீவிரவாத எதிர்ப்பு தலைவி ஜெயலலிதாவின் அரசியல் நிலைப்பாட்டையும் கொள்கையையும் பற்றி விவாதம் நடக்கும் என பார்த்தால் திட்டம் போட்டோ போடாமலோ ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை பற்றி பேசாமல் வேறு தளத்திற்கு ஜெயஸ்ரீ யின் ஒரு பின்னூட்டத்தினால் மா(ற்)றி விட்டது விவாதம், நன்றி... ம்.. இனி எப்போது பயங்கரவாதி 'வைகோ' வுடன் கூட்டணி வைத்த தீவிரவாத எதிர்ப்பு தலைவி ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை விவாதத்த்ற்குள்ளாக்கும் தளம் கிடைக்குமோ? கிடைத்தாலும் அதில் மட்டும் விவாதம் நடக்குமோ....

5:21 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://thamizhsasi.blogspot.com/2006/03/blog-post_09.html

5:21 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://therthal2006.blogspot.com/2006/03/rajni-fans-coimbatore-posters-dhina.html

எப்போதும் வாய்ஸ் தருவதாக ரஜினி காமெடி செய்வார், இப்போது ரஜினி ரசிகர்கள் ஆரம்பித்துள்ளனர்.... ஆனாலும் ரஜினி இல்லாத தேர்தலில் காமெடி குறைவுதான்...

9:19 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://thatstamil.oneindia.in/images25/rajini-jaya2-500.jpg

//அரசியல் கணக்குகளில்
அடமானமாகி விடாமல்
புனிதத்தை தக்க வைத்த
பூச்செண்டின் காலம்
இன்றும் தொடருகிறது!
//

ஹா ஹா ஏம்பா ரசிக கண்மணிகளே காமெடி செய்றிங்க, ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று கொரல் விட்டவர் கை கட்டி வாய் பொத்தி நிற்கிறார் இங்கே , இரட்டை இலைக்கு வாக்களித்து விட்டு வந்தது தெரிந்தும் இன்னமும் புனிதம் அது இதுனு உங்க காமெடி தாங்கமுடியலைங்கோவ்...

9:29 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://ezuthovian.blogspot.com/2006/03/blog-post.html

//வலைப்பூவுலகின் அரசியல் அறிஞர் குழலி அவர்கள்.
//
ஆகா என்னங்க இது உங்க குசும்புக்கு அளவேயில்லையா? அழைப்புக்கு நன்றி

4:47 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://potteakadai.blogspot.com/2006/03/blog-post_13.html

பொட்'டீ'கடை சத்யா முதலில் வாழ்த்துகள் நட்சத்திரமானதற்கு, இரண்டாவது வாழ்த்தையும் பிடியுங்கள் மிகவும் வித்தியாசமான முறையில்(பூச்சி தகவல்களை இடையே இடையே கலந்து) கவர்ந்திழுக்கும் படி எழுதப்பட்ட இந்த பதிவு...

//எனக்கு இலக்கணமும் தெரியாது, இலக்கியமும் தெரியாது - தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. அதனால் அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம் :-)). ஆனால் வாழ்க்கையை உற்று நோக்கி அறிந்திருப்பதால்., அவைகளை வைப்பேன் இங்கு.
//
இலக்கணம், இலக்கியம் தர்க்க சாத்திரங்கள் எல்லாம் தெரிந்து போலியாக எழுதும் பெரிய அனுபவசாலி எழுத்துகளை/எழுத்தாளர்களை விட இது எதுவுமே தெரியாமல் போலித்தனமில்லாமல் எழுதும் உங்களைப் போன்றோர்களின் எழுத்து மிக மிக உயர்வானதும் போற்றத்தக்கதும்.

கலக்குங்க சத்யா

4:58 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://idlyvadai.blogspot.com/2006/03/blog-post_114285600596070144.html

//உதிர்ந்த ரோமங்கள்!
//
ராம்கி இப்படியே எல்லா ரோமங்களும் உதிர்ந்து வழுக்கையா இருக்கபோறாருங்கோ....

//ஆழ்ந்த அனுதாபங்கள்! :-)
//
யாருக்கு ஜெயலலிதாவுக்கா?

3:31 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://rozavasanth.blogspot.com/2006/03/sakya-sanga.html

தங்கமணியின் பதிவில் உங்கள் பின்னூட்டம் கண்டு இங்கு வந்தேன், தகவலுக்கு நன்றி ரோசா

4:22 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://idlyvadai.blogspot.com/2006/03/blog-post_24.html

//only 32(leaving Nellikuppam, Kurinchipadi & dharumapuri) for mdmk?
//
தாரமங்கலம் தொகுதியையும் சேர்த்துக்கொள்ளுங்கள் மதிமுகவிற்கு 31 தொகுதிகள் தான் போல!!!

//There could have been good contest if Nellikuppam were given to VC!
//
ஆமாம்

4:14 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://potteakadai.blogspot.com/2006/03/blog-post_25.html

நெல்லிக்குப்பம் தொகுதியின் நாடித்துடிப்பை சரியாக கூறியுள்ளீர்... தொகுதியை மதிமுகவிற்கு கொடுத்துள்ளதால் வி.சி.எஸ் சின் வெற்றி கிட்டத்தட்ட முடிவு செய்த மாதிரி

//அதிமுக கூட்டணியில் மதிமுகவிற்கு இத்தொகுதியைக் கொடுத்திருப்பது...கையில்லாத ஜாக்கியிடம் சவாரிக் குதிரையை கொடுத்தது போன்றது!
//
சரியாக கூறியுள்ளீர், ஆச்சரியமான ஆச்சரியம் நெல்லிக்குப்பம் தொகுதிக்கு சம்பத்,தாமோதரன்,சொரத்தூர் ராஜேந்திரன் என பல தலைகள் போட்டியிட இருக்கும் போது நெல்லிக்குப்பத்தை மதிமுகவிடம் கொடுத்துவிட்டு அதிமுக வின் பலவீனமான தொகுதியான கடலூரில் போட்டியிடுகின்றது(மதிமுக பத்மநாபன் போட்டியிட்டிருந்தால் கடலூர் தொகுதி கடும் போட்டியிலிருக்கும்- பழிதீர்ப்பாரா பத்மநாபன் என்று ஒரு பதிவெழுதி வைத்திருந்தேன், இனி பயன்படாது) விளைவு திமுக கூட்டணிக்கு எளிதாக விசிஎஸ், புகழேந்தி(கடலூர்) என இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்

4:33 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://potteakadai.blogspot.com/2006/03/blog-post_114328779990223098.html

//பதின்ம வயதில் நான் கண்ட ஆவணப்படங்களும், நேரிடையாய் சந்தித்த இரு போராளிகளின் வாக்குமூலமும் என்னுள்ளே அவ்வயதில் வெறியை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. இன்னமும் கூட ஈழத்தில் பிறந்திருக்கக் கூடாதாவென்ற ஏக்கம் அவ்வப்போது எழுவதும் உண்டு. எந்திரத் துப்பாக்கி ஏந்திப் போராடும் எம் சகோதரர்க்கு துணையாய் இருந்திருக்கலாமே என்ற எண்ணமும் எழுந்ததுண்டு. அது ஒவ்வொரு சராசரி இந்தியனுக்கு எழும் "பிணப்பெட்டியின் மேல் தேசியக் கொடி" போன்ற எண்ணம். ஆனால் அதற்கு முரணான வாழ்க்கையைத் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.
//
ஆவணப்படங்கள், ஆத்துதிருனா, மகம், வடலூர் தை பூச திருவிழாக்களில் பார்த்த விடுதலைப்புலிகளின் கண்காட்சி ஸ்டால்கள், திலீபனின் ஒவ்வொரு நாள் உண்ணாவிரத போராட்டத்தின் நிலையையும் வானொலியில் கேட்டு கேட்டு ஒரு நாள் திலீபன் இறந்த செய்தி சொல்லப்பட துக்கம் வயிற்றை பிசைந்தது, 83 இனக்கலவரத்தில் எங்கள் வீட்டருகே குடியேறிய சில ஈழதமிழ் குடும்பங்கள் இப்படி தான் ஈழம் அறிமுகமானது எனக்கு....

//நமக்கென்று ஒரு தேசமும் அங்கிகாரமும் தேவை என்று குரல் எழுப்புவது தவறா? தமிழ்நாட்டில் இதற்கான குரல் எழும்பொழுது தமிழக உணர்வாளர்களின் குரல்வலை நெறிபடும் வேளையிலே நம் ஈழத்து சகோதரர்கள் சுயமரியாதையோடு வாழ நாம் துணை நிற்க வேண்டாமோ? தமிழன் தலை நிமிர, தனக்கென்று ஒரு கலாச்சாரம், பண்பாடு மற்றும் உலக அளவில் தமிழனுக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தோடு வலம் வர முதல் படியாக தமிழீழம் அவசியமாகிறது.
//
நம்பிக்கை தான் வாழ்க்கை, நம்புவோம்...

4:46 AM  
Blogger குழலி / Kuzhali said...

//...குறிஞ்சிப்பாடியையும் மதிமுகவிற்கு தாரை வார்த்தது எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை.
//
ம்...குறிஞ்சிப்பாடியிலும் மதிமுகவுக்கு தோல்விதானென நினைக்கின்றேன், எம்.ஆர்.கே.பியின் கோட்டையில் இந்த முறையும் ஓட்டை விழாது மதிமுக போட்டியிடுவதால் எம்.ஆர்.கே.பியின் வெற்றி எளிதாகவே இருக்குமென நினைக்கின்றேன்....

மதிமுக மாவட்டசெயலாளர் பத்மனாபன் நெல்லிக்குப்பம் அல்லது குறிஞ்சிப்பாடியில் போட்டி இடுவார் என நினைக்கின்றேன், கடலூரில் தனிப்பட்ட செல்வாக்குள்ள பத்மனாபன் மதிமுகவில் போட்டியிட்டுருந்தால் கடும் போட்டியிருந்திருக்கும், நெல்லிக்குப்பம்,குறிஞ்சிப்பாடியென்றால் சொல்வதற்கு ஒன்றுமில்லை

7:18 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://valaippadhivu.blogspot.com/2006/03/blog-post.html

//உன்னை விட்டால் தமிழர்களான எம்மைக் காக்க வேறு யார்? விஜயகாந்த் போன்ற Jokers எல்லாம் அரசியலில் இருக்கையில் இன்னும் என்ன தயக்கம்?

தமிழக அரசியல் குப்பையிலிருந்து இந்தத் தேர்தலிலாவது எம்மக்களைக் காப்பீரா?

//
ஓ நீங்களும் உங்க பங்குக்கு செய்றிங்களா? செய்ங்க, செய்ங்க
இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு!


//ஊரு முழுக்க ரசிகர் கூட்டம்
எனக்கு இருக்குதுங்க...
எனக்கொரு நினைப்பு இருக்குதுங்க
அதுக்கொரு கணக்கிருக்குதுங்க!
//
ரஜினி ராம்கி ரசிகர் கூட்டம் உதிர்ந்து கொண்டிருப்பதாக கேள்விப்படுகின்றேன்?! இங்கே ஒரு ரஜினி ரசிகனின் ஆசை யை படியுங்களேன்

6:42 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://thamizhsasi.blogspot.com/2006/03/blog-post_25.html

நெல்லிக்குப்பம் தொகுதியை பொட்டீக்கடை சத்யா அலசிவிட்டார், குறிஞ்சிப்பாடியை நீங்கள் எழுதிவிட்டீர், கடலூரையாவது எனக்கு விட்டு வைங்க,

சசி எம்.ஆர்.கே.பி யின் சாதி பாசத்தினால் பல பாமகவினர் சென்ற தேர்தலில் எதிர்முகாமில் இருந்த போதும் திமுகவிற்கு வேலைசெய்தது குறிப்பிடத்தக்கது...

10:48 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://thamizhsasi.blogspot.com/2006/03/blog-post_25.html

//Arithmetic Analysis ஐ தவிர சில முக்கிய விஷயங்களையும் இங்கு கவனிக்க வேண்டும்.
//
கூட்டணி கூட்டல் கழித்தல்களை தாண்டி உள்ள பல காரணிகள் உள்ளன, உதாரணமாக நான் பின்னூட்டத்தில் குறிப்பட்டது போல எம்.ஆர்.கே.பி யின் சாதி பாசத்தினால் பல பாமகவினர் சென்ற தேர்தலில் எதிர்முகாமில் இருந்த போதும் திமுகவிற்கு வேலைசெய்தது குறிப்பிடத்தக்கது...

எதிர்பார்த்தது போலவே மதிமுக சார்பாக பத்மனாபன் குறிஞ்சிப்பாடியில் நிற்கின்றார், இவரும் வன்னியர் என்றாலும் கடலூரில் நின்றிருந்தால் ஏற்பட்டிருக்க கூடிய பரபரப்பும் போட்டியும் குறிஞ்சிப்பாடியில் இவர் நிற்பதால் ஏற்படாது, ஏதேனும் அலை வந்து புரட்டி போடாமல் இருந்தால் குறிஞ்சிப்பாடியில் எம்.ஆர்.கே.பி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி

4:53 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://potteakadai.blogspot.com/2006/03/blog-post_22.html

http://neposarakku.blogspot.com/2006/03/blog-post_21.html

பொட்டீகடையில் தர்மஅடி விழுந்திருப்பதை பார்த்தால் ஏதோ சத்யா சொல்லக்கூடாததை சொன்னது போல ஒரு மாயையை ஏற்பட்டுள்ளது தெரிகின்றது, ஏற்கனவே பலமுறை அலசி ஓய்ந்த விவாதங்களாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் இந்த பதிவின் கருத்துகள் இது வரை தமிழ்மண தளத்தில் பேசப்படாத ஒன்று, இந்த பதிவில் சொல்லப்பட்ட கருத்துகள் தவறென கருதுபவர்கள் அவர்கள் கருத்துகளை எடுத்து வைப்பதை விட தர்ம அடி போடுவதிலேயே சிரத்தை எடுத்துள்ளது இது விவாதிக்கப்படவே கூடாது என்ற அவசரத்தில் இருந்ததும் புரிகின்றது.

எந்த ஜாட்டானும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டு ஒருவர் செல்லமுடியும், பிராமணர்களுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை அவர்கள் படித்து முன்னேறுகின்றார்கள் உங்களுக்கு ஏனிந்த தாழ்வுமனப்பான்மை என்று டோண்டு அய்யா கூறிவிட்டு தர்ம அடி வாங்காமல் செல்லமுடியும் ஆனால் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஒரு விடயத்தை விவாதத்திற்கு கொண்டு வந்ததற்கு அழுகிய வேர்கடலை அது இது என இத்தனை ஆர்பாட்டமா?

இது சத்யாவிற்கு மட்டும் தோன்றியது அல்ல, நானும் இது தொடர்பாக சில நண்பர்களிடம் பேசியுள்ளேன், இருந்தாலும் தமிழ்மணத்தில் இதை எழுதாததற்கு பெரியதாக ஒன்றும் காரணமில்லை சாதாரணமாக எல்லா சாதியினரும் அவரவர்களின் வட்டார வழங்கு மொழியில் பேசும் போது உலகெங்கும் அவர்களுக்கு மட்டும் ஒரே வழங்கு மொழி எப்படி சாத்தியமானது? இந்த கேள்விக்கான காரணத்தை கூறுங்கள் தெரிந்து கொள்கின்றோம், தெரிந்து கொண்டு நினைப்பு தவறாயின் மாற்றிக்கொள்கின்றேன், அதை விடுத்து தர்ம அடி போடும் அவசரமென்ன?

யூதர்கள் 800 ஆண்டுகளுக்கும் மேல் ஐரோப்பிய நாடுகளில் விரவி வாழ்ந்த போதும் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தங்கள் மொழி மதத்தை வீட்டினுள் வைத்து பொத்தி பொத்தி வளர்த்தனர், கத்தோலிக்க மதம், மொழி, நாடு என எந்த நீரோட்டத்திலும் கலக்காமல் யூதர்கள் என்றே தனித்துவமாக வைத்திருந்தனர், இதற்கு முக்கிய காரணம் யூதர்களின் தம் மதம், தம் மொழி, தன் இனம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்ற அவர்களின் உயர் மனப்பான்மை, ஒரு வேளை இதைத் தான் அசோகமித்திரன் பிராமணர்கள் யூதர்களைப்போல என்று கூறியிருப்பாரோ? (எல்லோரையும் குறிப்பிடவில்லை, தனிப்பட்ட வாழ்க்கையில் இதை எல்லாம் பார்க்காதவர்கள், பொது தளத்தில் பேசும் போது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து இப்படி எதுவுமே இல்லை என கூறும் பிரச்சினைகள் வருவதுன்டு)

//வட்டார வழக்கைத்தாண்டியும், பாட்டி என்பதற்கு, ஆச்சி, ஆத்தா, அப்பத்தா, அம்மம்மா என பல வழக்குகள் சாதி அல்லது இனவாரியாக பயன்படுத்தப் படுகின்றன
//
சாணக்கியன் அவர்கள் இப்படி கூப்பிடுவது வட்டார மொழியா அல்லது எந்த சாதி மொழி என்று தெளிவாகவே கூறலாமே? ஆச்சி என்பது காரைக்குடியில் வயதான எல்லாரையும் அப்படித்தான் கூப்பிடுவார்கள், அப்பு நானும் 4 வருடங்கள் காரைக்குடியில் குப்பைக்கொட்டியவன், அவ்வளவு ஏன் என் மாமியாரின் அம்மாவை நாங்கள் கூப்பிடுவது ஆச்சி என்றுதான்.



// அதை விவதிப்பது என்பதே சாதிக்கு அப்பாற்பட்டவர்களாக பாவனை செய்யும் 'மஞ்சள் ரத்த' (நேரடி அருத்தத்தில் இல்லை) ஜெண்டில் மேன்களுக்கு பொத்து கொண்டுவருகிறது.
//
ரோசாவின் இதே கேள்விதான் முதன் முதலில் இந்த பின்னூட்டங்களை படிக்கும் போது எனக்கும் தோன்றியது.

5:54 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://potteakadai.blogspot.com/2006/03/blog-post_22.html

கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் தலித்கள் 'செம்பு' என்று வழங்குவர், சில இடங்களில் இதை வைத்து தலித்தா என அடையாளம் காண்பார்கள், ஆனால் இதுவும் கூட வட்டார வழக்கு தான், சீர்காழி,சிதம்பரம் பகுதிகளிலும் கள்ளக்குறிச்சி,விழுப்புரம் மாவட்டங்களிலும் செம்பு என்று வழங்குவர்.

6:23 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://muthuvintamil.blogspot.com/2006/03/blog-post_28.html

//இவங்கள்ளாம் அந்த ஆளோட ரசிகனுங்களாம்..இங்க வந்தா ஏதாவது கிடைக்கும்..அங்க போஸ்டர் ஒட்டுனது, பால் அபிஷேகம் பண்ணுனதுல கொஞ்சம் காசையாவது திரும்ப எடுக்கலாம்னு வந்திருக்காங்க...
//
ஆஹா கெளம்பிட்டாங்கயா கெளம்பிட்டாங்க....

7:02 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://santhipu.blogspot.com/2006/03/blog-post_28.html

//பறிபோகும் தங்கள் வாழ்க்கைக்காக போராடியதற்காக ஆந்திர அரசு கொடுத்த பரிசுதான் துப்பாக்கி சூடு, கண்ணீர்புகை வீச்சு, தடியடி (மரண அடி).
//
எப்போதும் எந்த அரசாங்கத்திடமும் பலியாவது ஏழை மக்கள்.... என்று நிற்கும் இந்த அரச பயங்கரவாதங்கள்?

7:14 AM  
Blogger குழலி / Kuzhali said...

//3) தற்போது வி.சி, அதி.மு.கவுடன் சேர்ந்திருப்பதால்
அ.தி.மு.க அணிக்கு 19323 + 40497 = 59820 வாக்குகள் ஆகின்றன.
//
40497 வாக்குகள் திருமா வேட்பாளர் என்றதால் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும், திருமா போட்டியில் இல்லாத நிலையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்த வாக்குகள் மதிமுகவிற்கு சாதகமாக விழாது.

நன்றி

8:00 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://thamizhsasi.blogspot.com/2006/03/blog-post_31.html

//இந்த தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிட்டு இரண்டாமிடத்தை பெற்றது. தமிழகமெங்கும் மிக எளிதாக வெற்றி பெற்ற திமுக இங்கு போராடி 6885 ஓட்டுகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது
//
இதற்கு முக்கிய காரணம் கடைவீதி வாக்குகள், கிட்டத்தட்ட 10,000 வாக்குகள் உள்ள விருத்தாசலம் கடைவீதி, மற்றும் வணிகர்கள் மத்தியில் கிளப்பப்பட்ட பீதி, பாமக வெற்றிபெற்றால் இங்கு கடையே நடத்த முடியாது என்று நேரடி பிரச்சார பீதி மேற்கொள்ளப்பட்டது, இன்று விருத்தாசலம் சட்டமன்றம், நகர்மன்றம் விருத்தாசலம் தொகுதி அடங்கிய பாராளுமன்றம் என அத்தனையும் பாமகவின் கையில் ஆனால் அதே ஆட்கள் இன்னமும் அதே கடை வீதியில் வியாபாரம் செய்து கொண்டு தான் உள்ளனர் எந்த பிரச்சினையும் இன்றி.

//கடந்த 2001 தேர்தலில் பாமக-அதிமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பாக போட்டியிட்ட டாக்டர் கோவிந்தசாமி சுமார் 68,905 ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக-விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி சுமார் 61,777 ஓட்டுகளைப் பெற்றது.
//
1996-2001ன் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிறந்த முறையில் பணியாற்றியது இதற்கு முக்கிய காரணம்,

//அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.ஆர் என்று இங்கு அழைக்கப்படும் ஆர்.டி.ரங்கநாதன் களமிறங்கி இருந்தால் அதிமுகவிற்கு இன்னும் பலம் சேர்ந்திருக்கும்.
//
பலம் சேர்ந்திருக்கும், ஆனாளும் 1991-1996ல் நிறைய கெட்ட பெயர் சம்பாதித்திருந்தவர் இவர்.

//பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி எந்தளவுக்கு தொகுதியில் பிரபலமாக இருந்தாரோ அதே அளவுக்கு அவருக்கு தொகுதியில் தற்பொழுது கெட்டப் பெயர். தன்னுடைய டாக்டர் தொழிலை மட்டும் பார்க்கிறார். கிராமங்கள் பக்கம் வரவேயில்லை. கிராம மக்களிடம் சரியாக பேசுவதில்லை என்பன போன்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. மணிமுத்தாறு பாலம் உடைப்பட்டது மிக முக்கிய தேர்தல் பிரச்சனையாக உள்ளது
//
நானும் கேள்விப்பட்டேன், வேட்பாளர் கோவிந்தசாமி மீதான அதிருப்தி நிறையவே தாக்கத்தை ஏற்படுத்தும், நகர்மன்ற உறுப்பினர்களின்(கவுன்சிலர்கள்) ஊழலுக்கு துணைபோகாமல் அதை நேரடியாக எதிர்த்து, பதவியை வைத்து சொத்து சேர்க்காமல் நல்ல முறையில் பணியாற்றும் பாமகவை சேர்ந்த தற்போதைய நகர் மன்ற தலைவர் போட்டியிட்டிருந்தால் பாமகவிற்கு இன்னும் பலமாக இருந்திருக்கும்.


//"கேப்டன்" தன்னுடைய டெபாசிட்டை காப்பாற்றிக் கொள்ளுவார் என்று நம்புகிறேன். இரண்டாமிடம் எதிர்பார்க்க முடியாது.

இரண்டாமிடம் அதிமுகவிற்கோ, பாமகவிற்கோ தான்.
//
திரைப்பட கவர்ச்சி அதிகம் உள்ள இடத்தில் இப்படி கூறுவதில் எனக்கு நம்பிக்கையில்லை முடிவுகள் எப்படியும் இருக்கலாம், ஆனால் மருத்துவர் பாமக, அதிமுக இருவருக்குமே இங்கே வெற்றி அத்தனை எளிதல்ல

6:00 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://ezuthovian.blogspot.com/2006/04/2006_114389030130788807.html

இப்னுவிற்கு எனது கடுமையான கன்டணத்தை தெரிவித்துக்கொள்கின்றேன், தொகுதிப்பங்கீடு செய்து கொள்ளாமல் புவனகிரி தொகுதியை எடுத்துக்கொண்டதற்கு, ஏற்கனவே தமிழ்சசியினால் குறிஞ்சிப்பாடி,விருத்தாசலம் தொகுதியையும், பொட்டீக்கடை சத்யாவினால் நெல்லிக்குப்பம் தொகுதியையும் இந்த இருவரினால் பண்ருட்டி தொகுதியையும் இழந்திருந்தேன், கேவிஆர் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் தொகுதிகளுக்கு துண்டு போட்டுவிட்டார் தற்போது தான்
ஆச்சரிய ஆண்டிமடம் என்று ஆண்டிமடம் தொகுதிப்பற்றி எழுதிவிட்டு வந்தால் புவனகிரி கையைவிட்டு போய்விட்டது, நான் எழுதியதிலிருந்து சில வரிகள் இங்கே,

கடலூர் மாவட்டத்தில் பல அதிமுக புள்ளிகள் குறிவைத்தது புவனகிரி தொகுதியை, கிழக்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராசேந்திரன் நெல்லிக்குப்பம், பண்ருட்டி தொகுதியோடு புவனகிரி மீதும் கண்வைத்திருந்தார், அருள்மொழித்தேவனும் புவனகிரியை குறிவைத்தார், வருமானத்திற்கு மீறிய சமீபத்தில் சிறைசென்று வந்து அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் சமீபகாலமாக கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மல்லிகாவும் பெயருக்கு கேட்டுவைத்தார்

பரங்கிப்பேட்டையில் சில காலங்களுக்கு முன் 'ஒத்தக்கை' பாண்டியன் கோஷ்டியினருடன் ஏற்பட்ட சாராய மோதலில் அதிமுக பிரமுகர் ராமஜெயமும், அவரது சொந்தக்காரரும் வெட்டிக்கொல்லப்பட்ட சில மணிநேரங்களில் ராமஜெயம் கோஷ்டியினரால் 'ஒத்தக்கை' பாண்டியனின் தங்கையும் தாயும் வெட்டிக்கொல்லப்பட்டு ஒரே நாளில் நான்கு கொலைகளை பரங்கிப்பேட்டை பார்த்த பயங்கரத்திற்கு பின் 1996ல் ராமஜெயத்தின் மனைவி செல்வி ராமஜெயம் பரங்கிப்பேட்டை சிறப்பு பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு அதிமுக சார்பாக போட்டியிட்டார், அப்போது தான் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவிற்கு எதிரான அலையடித்து அதன் தொடர்ச்சி உள்ளாட்சி தேர்தல்களில் வெளிப்பட்ட போதும் செல்வி ராமஜெயம் வீடுவீடாக திண்ணைகளில் அமர்ந்து வாக்கு கேட்டதும் செல்வி ராமஜெயம் வெற்றி பெற உதவியது, அதனைத் தொடர்ந்து 2001 உள்ளாட்சி தேர்தலில் இப்படியெல்லாம் அனுதாப அலை தேவையில்லாமலே அவருடைய முந்தைய செயல்பாடுகள் வெற்றி பெற வைத்தது, மாவட்டத்தின் செல்வாக்கு அதிமுக பிரமுகர்கள் குறிவைத்த போதும் புவனகிரி தொகுதி அவருக்கு கிடைத்தது இவைகள் தெரிந்தவர்களுக்கு ஆச்சரியமில்லை, மேலும் அதிமுக, திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் என்ற வரிசையில் செல்வாக்கு பலமிருக்கும் தொகுதியில் செல்வி ராமஜெயம் வெற்றியின் அருகில், புவனகிரி கடலூர் மாவட்டத்தில் அதிமுகவின் இலுப்பைப்பூ

8:30 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://thamizhsasi.blogspot.com/2006/04/blog-post.html

சசி அருமையான அலசல், தேர்தல் 2006 - அரசியலின் கூட்டல், கழித்தல்கள் என்ற என் பதிவில் கிட்டத்தட்ட இதே கருத்துகளை எழுதியுள்ளேன்

4:26 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://koothu.blogspot.com/2006/03/prospects-of-dmk-led-alliance-in.html

I saw your feed back in my blog and read this post Excellent, nowadays media is not reflecting the people mind, instead of that they are telling their own wishes as peoples thought, that's why meany opinion poll failed....

4:51 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://ezuthovian.blogspot.com/2006/04/2006_114389030130788807.html

//நீங்கள் என் அபிமான வலைப்பூ அரசியலறிஞர்
//
இப்படி உசுப்பி உசுப்பிதான் உடம்பு ரணகளமா இருக்கு

//புவனகிரி அ.தி.மு.கவுக்கு இலுப்பைப்பூ என்றால் உங்களுக்கு மீசையில் மண் ஒட்டவில்லை.:-))
//
நம் சார்பு நிலை, நாம் யார் வெற்றிபெற வேண்டுமென நினைப்பது வேறு, தொகுதி நிலவரம் பற்றி கூறும் போது நம் சார்பு நிலையை ஏற்றி சொன்னால் அது சரியானதாகாது, நிறைய நாட்களை பரங்கிப்பேட்டையில் கழித்துள்ளேன், நீங்கள் பதிவில் அனைத்தையும் கூறிவிட்டதால் தனியாக எழுதுவதற்கு ஒன்றுமில்லை, கடலூர் மாவட்டத்தின் அதிமுக போட்டியிடும் மற்ற தொகுதிகள் சாதகமாக இல்லாத நிலையில் புவனகிரியில் அதிமுக முந்துவதால் புவனகிரியை அதிமுகவின் இலுப்பைப்பூ என்று கூறினேன்

9:03 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://cdjm.blogspot.com/2006/03/blog-post_30.html

ஜோ... ஆஸ்டின் சுயேட்சையாக போட்டியிடுகின்றாராமே, நாகர்கோவில் செய்திகளுக்கு நன்றி...

9:19 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://ezuthovian.blogspot.com/2006/04/2006_114389030130788807.html

//இளங்குற்றவாளிகள் பள்ளி எனக்குத் தெரிந்து பரங்கிப்பேட்டையில் இல்லை. கேப்பர்குவாரியில் இருக்கிறது என்று நினைக்கிறேன். எதுக்கும், நம்ம குழலியிடம் கேட்டால் தெரிந்து விடும்.
//
கடலூர் தேவனாம்பட்டினம் செல்லும் வழியிலிருந்தது, கேப்பர் குவாரி பற்றி தெரியவில்லைங்க

//அய்யா குழலி,
சட்டுனு சீரியஸாகிட்டீங்க போல. ச் சும்மா கலாய்க்கறதுக்காக 'மீசையில மண் ஒட்டலே'ன்னு சொன்னேன். நகைக்குறி கூட போட்டிருந்தேனே!
//
அட சீரியஸ்லாம் இல்லைங்க,சும்மாதான் தகவல் உங்களுக்கு அல்ல, பொதுவாக சொன்னேன்...

//தொகுதி நிலவரம் எழுதும்போது 'சார்பு'ங்கறதை ஓரங்கட்டுவீங்கன்னும் தெரியும். கருத்துக்களுக்கு நன்றி.
//
நன்றி தலைவா இப்படி நினைத்ததற்கு...

//'உங்கள் அரசியல் கருத்துக்களில் எனக்கு 'சிற்சில வேறுபாடுகள்' உண்டு'ன்னு சொல்லும்போது 'பற்பல உடன்பாடுகள்' உண்டுன்னும் அர்த்தம் இல்லீங்களா? ஆங், உங்க சார்பு நிலையோ சார்பில்லாத நிலையோ - உங்கள் எழுத்துக்கள் மூலமாகத் தானய்யா எனக்குத் தெரியும்.
//
ஹி ஹி வேறுபாடுகள் கொஞ்சமும் இல்லையென்றால் இப்னு, குழலி என இரண்டு ஆட்கள் இருக்கமாட்டார்கள் அல்லவா?! (தத்துவம்?!...)

இப்னு wordverification கொஞ்சம் தூக்கிவிடுங்களேன், அதான் மட்டுறுத்தல் உள்ளதே கொஞ்சம் சிரமமாக உள்ளது.

//வேணாம் அப்பு.. அரசியல் அதுகளோட இருக்கட்டும்.. நமக்கெதுக்கு..
//
ஷாஜி தொகுதி நிலவரம்,அரசியல் எழுதுவதில் என்ன இருக்கு, இதில் தவறொன்றுமில்லையே!!! நீங்களும் எழுதினால் உங்கள் ஊர் பற்றிய நிலவரம் தெரிந்து கொள்ளலாமே, அச்சு,ஒளி,ஒலி ஊடகங்களின் மீது நம்பிக்கை போய் எனக்கு நிறைய நாளாச்சி, நீங்களும் உங்கள் ஊர் நிலவரத்தை எழுதி கலக்குங்க

9:08 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://pitchaipathiram.blogspot.com/2006/04/blog-post.html

காலங்களில் கோலம் படைக்கும், கோலங்களில் காலம் படைக்கும் *வருங்கால முதல்வர்* சுரேஷ் கண்ணனார் அவர்களுக்கு வாழ்த்துகள்

காலம் கோலம் எல்லாம் ஒரு அடுக்கு மொழிக்கு தான், எனக்கு ஒரு எம்.எல்.ஏ. தொகுதி ஒதுக்கிடுங்க....

நன்றி

6:09 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://santhipu.blogspot.com/2006/04/blog-post_05.html

மேதா பட்கரின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன், போராட்டத்திற்கு சற்றும் செவிசாய்க்காத அரசாங்கம் கண்டிக்கபட வேண்டியது.

6:06 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://singaarakumaran.blogspot.com/2006/04/blog-post_07.html

அம்மாவின் ஆட்சியில்

அந்த பாசத்தின் அடிப்படையில் அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் ராஜ்ஜிய

9:15 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://singaarakumaran.blogspot.com/2006/04/blog-post_07.html

//திராவிட கருத்தாக்கம் என்பதை எந்தளவிற்கு கொச்சையாக நீங்கள் புரிந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதற்காக நான் வருத்தப்படுகிறேன்.
//
நானும் வருத்தப்படுகின்றேன்...

//சார், இந்தியா என்றுமே ஒரு நாடாக இருந்ததில்லை என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? இங்கு பல்வேறு இனங்களை சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். சுதந்திரத்திற்கு பிறகு ஒரே நாடாக ஆனோம். யாரை கேட்டு ஒரு நாடாக ஆனோம்.
//
என் நட்பு வட்டத்தில் நான் அடிக்கடி பேசுவது இப்படித்தான், 'பாரத நாடு பழம்பெரும் நாடு' என்று எங்கேயாவது படிக்கும் போதும் கேட்கும் போதும் எனக்குள் ஒரு சிரிப்பு தான் வரும், மொழி, இனம், கலாச்சாரம் என எதாலும் இணையவில்லை.(இந்து மதம் என்று சொல்லிக் கொண்டாலும் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இந்து மதத்தில் இருக்கிறோம், ஒரே மாதிரியாகவா இந்து மதத்தை பின்பற்றுகின்றோம், திராவிட, இயற்கை வழிபாட்டை, சிறு தெய்வ வழிபாட்டை அழித்து சைவ, வைணவம் வளர்ந்து, புத்த,ஜைன,சீக்கிய மதங்களை இந்து மதத்தின் பிரிவாக்கி) இப்போது எல்லாம் இந்து என்ற ஒரு குடையின் கீழ், இந்தியா என்ற ஒரு கடவுசீட்டின் கீழ்,அவ்வளவே, அதைத் தாண்டி ஜெய்ஹிந்த் என கேட்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பு மட்டுமே....

//எல்லோருக்கும் சுதந்திரமும் பாதுகாப்பும் கிடைக்கும் என்றுதானே
//
பாதுகாப்பின் இலட்சணம் கர்னாடகாவில் இழந்த ஆயிரம் தமிழ் உயிர்களும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பல்லாயிரம் பெண்களும் கூறுவார்கள், காஷ்மீரில் ஆரம்பித்து, வடகிழக்கு மாநிலங்கள், குசராத் என பாதுகாப்பின் இலட்சணங்கள் பற்றி நிறையவே எழுதலாம்,

//ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நாகரீகம் கலாச்சாரம், மொழி ஆகியவைதான் நம் எல்லோருக்குமானது அல்லது உயர்ந்தது என்பதை எப்படி சார் கேள்வி இல்லாமல் ஏற்றுகொள்கிறீர்கள்? simply i cannot imagine it.


நமக்கென்று ஒன்றுமே இல்லையா சார்? நாமெல்லாம அநாதைகளா சார்? என்னுடைய தாத்தா பாட்டிக்கு கீதை தெரியாது சார். அவங்கள்ளாம் கள் குடித்து முனியப்பனுக்கு கடா வெட்டித்தான் வாழ்ந்தார்கள். நாளைக்கு அவங்க கோயிலுக்கு போய் கிடா வெட்டினார்கள் என்று குற்றம் சுமத்தி அவர்களை அரசாங்கம் கைது செய்தால், அது நியாயம் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் இந்த நாட்டில் என்ன நியாயம் சார் இருக்கு?
//
ம்....

9:35 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://muthuvintamil.blogspot.com/2006/04/blog-post_114442020115706827.html

//நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை.
//
புரியவில்லையா? இந்தியா என்பது இயல்பான உருவான நாடு அல்ல, இந்திய தேசியம் ஒரு கற்பிதம், இயல்பான

நாடு உருவாவது மொழியால், இனத்தால், கலாச்சாரத்தால் என ஏதேனும் ஒன்றால் இணைந்திருக்கும், இந்தியா

வெள்ளையனிடத்தில் அடிமையாக இருந்தோம் என்ற அடிமைத்தனத்தில் மட்டுமே ஒன்றாக இணைந்திருக்கின்றது.

////இந்து மதம் என்று சொல்லிக் கொண்டாலும் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இந்து மதத்தில் இருக்கிறோம்,

ஒரே மாதிரியாகவா இந்து மதத்தை பின்பற்றுகின்றோம்,//

எல்லாரும் ஒரே தமிழ் கலாச்சாரத்தையா பின்பற்றுகிறோம்?ஒரே மாதிரியாகவா தமிழனாக இருக்கிறோம்?உலகின்

99% நாடுகளில் ஒரே மாதிரியாக ஒரு மதத்தை பின்பற்றுவது கிடையாது.Unity in diversity என்பது தான் நமது

பலம்
//
மிகத்தெளிவாக எல்லாவற்றையும் கீழே விளக்கியிருக்கும்போது வார்த்தைகளில் தொங்குகின்றீர்...

கீழே இருப்பதை மீண்டும் படித்து பாருங்கள்
//ஒரே மாதிரியாகவா இந்து மதத்தை பின்பற்றுகின்றோம், திராவிட, இயற்கை வழிபாட்டை, சிறு தெய்வ

வழிபாட்டை அழித்து சைவ, வைணவம் வளர்ந்து, புத்த,ஜைன,சீக்கிய மதங்களை இந்து மதத்தின் பிரிவாக்கி)

இப்போது எல்லாம் இந்து என்ற ஒரு குடையின் கீழ்,
//
எப்படி பல்வேறு வழிபாட்டுமுறைகளை, நம்பிக்கைகளை ஒரே குடையின் கீழ் இந்து மதம் என்ற குடையின் கீழ்

கொண்டு வரப்பட்டதோ அதே போல் இந்தியாவையும் இந்த குடையின் கீழ் கொண்டு வர முயலுவது, இதன்

முயற்சி இந்தியை திணிக்க முயன்றது, மற்றைய மாநிலங்களில் வெற்றி பெற்றது தமிழகத்தில் மட்டும் திராவிட

ராஸ்கல்களால் முடியாமல் போய்விட்டது.

//அதைத் தாண்டி ஜெய்ஹிந்த் என கேட்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பு மட்டுமே....//
இப்போதும் ஜெய்ஹிந்த் என கத்துவதை கேட்கும்போது அதன் பின்னணியிலுள்ள போலித்தனம் தான் எனக்கு

தெரிகின்றது.


//பாதுகாப்பின் இலட்சணம் கர்னாடகாவில் இழந்த ஆயிரம் தமிழ் உயிர்களும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட

பல்லாயிரம் பெண்களும் கூறுவார்கள், காஷ்மீரில் ஆரம்பித்து, வடகிழக்கு மாநிலங்கள், குசராத் என பாதுகாப்பின்

இலட்சணங்கள் பற்றி நிறையவே எழுதலாம்//
//என் ஊரில் 10 கொள்ளையும்,10 கற்பழிப்பும் நடந்தது.அதனால் போலிஸ் ஸ்டேஷனை மூடு என்று சொல்லுவது

போல் இருக்கிறது உங்கள் வாதம்.பாதுகாப்பை எடுத்தால் தான் என்ன நடந்திருக்கும் என்பது தெரியும்.1000

கொள்ளைகளை தடுத்தால் அது வெளியில் தெரியாது.யாரும் பேச மாட்டார்கள்.1 கொள்ளை நடந்தால் ஆ ஊ

என்பார்கள்.
//
கர்னாடகாவில் தமிழர்கள் கொல்லப்பட்டது தமிழன் என்ற காரணத்தால், காஷ்மீர், வடகிழக்கு

மாநிலபிரச்சினைகளும் இதே மாதிரியானதே, போலி தேசியத்தினால், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் இதையும்

முடிச்சி போடுவதை பற்றிய முடிவையும் செல்வனின் உதாரணத்தையும் அதிலுள்ள தர்கத்தையும் இதை

படிப்பவர்களிடமே விடுகின்றேன்.

//தமிழ் கலாச்சாரம் என்று கூட ஒன்று எப்போதும் இருந்தது கிடையாது.தமிழ்நாடு என ஒன்று உருவானதே 1956ல்

தான்.அப்போது தமிழ்,தமிழன் என்பதெல்லாம் வெற்றுக்கோஷமா என்ன?ஒரே மொழி பேசும் ஆங்கிலேயர்

அனைவரும் ஒரே கலாச்சாரம் என்று சொல்ல முடியுமா?
//
இந்தியா எந்த அடிப்படையில் ஒன்றினைந்திருக்கின்றது? மொழியா? மதமா? கலாச்சாரமா? இனமா? இதில்

ஒன்றில் கூட பொதுமை இல்லாத இணைவு எப்படி பட்ட இணைவாக இருக்கும், போலித்தனமான

இணைவாகத்தானே இருக்கும்? இப்படி பட்ட போலித்தனத்தால் யாருக்கோ இழப்பும், யாருக்கோ லாபமும்

இருக்கும், யார் இழக்கின்றார்கள்? யார் லாபம் அடைகின்றார்கள்?.

இதற்கு மேல் இது தொடர்பாக விவாதிக்க விரும்பவில்லை, சரியான விளக்கங்கள் தந்திருப்பதாகவே

எண்ணுகின்றேன்.

முதன்முறை செல்வனிடம் பேசுகின்றேன் என நினைக்கின்றேன்,

செல்வன் அல்லாமல், முன் முடிவுகளுடன் வார்த்தைகளை, சொல்லப்பட்ட context புரிந்து

கொள்ளாமல்/விரும்பாமல் தொங்குபவர்களிடம் பேச விரும்பவில்லை.

12:09 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://tnmediawatch.blogspot.com/2006/04/blog-post_114446993569608264.html

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றி, இது மாதிரியான ஒரு மீடியா வாட்சர் கண்டிப்பாக தேவைப்படுகின்றது, செய்தியை செய்தியாக வெளியிடாமல் பத்திரிக்கை தர்மத்தை கடைபிடிக்காமல் வெளியிடுகின்றன, இதற்கு வைத்துள்ள பெயர் 'ஊடக வன்முறை'.

1:07 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://thamizhsasi.blogspot.com/2006/04/blog-post_114498312807243149.html

//பொதுவாக செய்யப்படும் நகர்ப்புறம், கிராமப்புறம், படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள் என்பதைக் கடந்து எந்தச் சாதி, எந்தக் கட்சியை சார்ந்தவர், எந்த ரசிகர் மன்றத்தைச் சார்ந்தவர், இவை எதனையும் சாராத பொதுவான வாக்காளரா, கட்சியை சாராதவராக இருந்தாலும் இந்தக் கட்சிகளின் மேல் அபிமானம் உள்ளவரா என்பன போன்றவையெல்லாம் கருத்துக் கணிப்பிற்கு முக்கியம் என்று நினைக்கிறேன்.
//
1989,1991 தேர்தல்களில் தராசு,நக்கீரன்,குமுதம், விகடன் என கிட்டத்தட்ட எல்லா பத்திரிக்கைகளும் இது மாதிரியான கருத்து கணிப்பு நடத்தியது, அதில் மிகத்தெளிவாக sampling method எல்லாம் விளக்கியிருந்தார்கள், ஆனால் இப்பொது குமுதத்திற்கும் மற்ற சில பத்திரிக்கைகளுக்கும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கான உள்நோக்கம் இருப்பது போல் நக்கீரனுக்கு அதிமுக வரக்கூடாது என்ற உள் நோக்கம் இருப்பதுவும் அதன் விளைவான கருத்து கணிப்புகளையும் வைத்து குழப்புகின்றனர்....

நன்றி

8:54 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://thamizhsasi.blogspot.com/2006/04/blog-post_114498312807243149.html

http://jeyakumar777.blogspot.com/2006/04/blog-post_114505570795553259.html

ஊழலை கட்டுப்படுத்துதலில் கருணாநிதியை விட ஜெயலலிதாவின் மீது மக்களுக்கு நம்பிக்கையா? என்னங்கய்யா நடக்குது நாட்டில ஒன்னுமே புரியலை.....

கருணாநிதியை விட ஜெயலலிதா ஊழலை கட்டுப்படுத்துவார் என்றால் அரசை நடத்துதல், தமிழகத்தின் வளர்ச்சியில் அக்கறை நிச்சயம ஜெயலலிதாவிற்கு தான்....

மற்ற ஒன்னுமே புரியலைகள் இங்கே

6:47 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://thamizhsasi.blogspot.com/2006/04/blog-post_15.html

மிக அசிங்கமான நிகழ்வு இந்த தேர்தலில் என்றால் அச்சு ஊடகங்கள் எடுத்திருக்கும் இந்த நிலைதான்

//அரசியல் செல்வாக்கு மூலமே சன் டிவி வளர்ந்தது என்று கூறுவதும் சரியானது அல்ல.
//
சன் டிவியின் 14 ஆண்டுகாலத்தில் 9 ஆண்டுகாலம் திமுக எதிர்கட்சியாக இருந்ததுவே, மேலும் சன் டிவி ஆரம்பிக்கப்பட்ட போது இருந்தது அதிமுக ஆட்சி, சன் டிவி யின் மீது பல கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் சன் டிவி வளர அதிகாரம் மட்டுமே காரணம் என்பது மற்ற ஊடகங்கள் தம்மை தாமே ஏமாற்றி கொள்ள முயன்றது.

இருந்தாலும் ஒரு ஆறுதல் குமுதம் கருத்துகணிப்பு சிரிப்பா சிரிக்குது மக்களிடம் (யாரிடம் அதைப்பற்றி கேட்டாலும் நகைக்கின்றார்கள்)

8:34 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://jeyakumar777.blogspot.com/2006/04/blog-post_16.html

சசியின் பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது, சசி எந்த இடத்திலும் சன் டிவி தான் தமிழ் மக்களை உய்விக்க வந்த டிவி என்றோ மிக அற்புதமான டிவி என்றோ சொல்லவில்லை, அவர்களுடைய வியாபார அனுகுமுறைகள் தான் முக்கிய காரணம்.

சன் டிவியின் 14 ஆண்டுகாலத்தில் 9 ஆண்டுகாலம் திமுக எதிர்கட்சியாக இருந்தது.

தூர்தர்ஷனின் அழுது வடிந்து கொண்டிருந்த செய்தியை சுவாரசியமாக மாற்றியது சன் டிவி என்பதை மறுப்பதற்கில்லை (தற்போது கதை வேறு)

வேண்டாம் சசியை எந்த வட்டத்திலும் சிக்கவைக்காதீர்கள் எந்த முத்திரையும் குத்தாதீர்கள், சசி போன்று எழுதிய சிலர் ஏற்கனவே வட்டத்தில் சிக்கி, முத்திரை குத்தப்பட்டுவிட்டது, அந்த நிலை சசிக்கும் வரவேண்டாம்

3:46 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://rajniramki.blogspot.com/2006/04/2.html

height of frustration = 'Rajini' Ramki :-)

6:13 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://rajinifans.blogspot.com/2006/04/flashback_21.html

//பாபா படப்பெட்டியை பாமகவினர்
//
யாரு கண்டா அடுத்த தேர்தலிலே உங்கள் தலைவர் ரஜினி பாமக மாம்பழத்திற்கு வாக்களித்து விட்டு வந்து சொன்னாலும் சொல்வார் அப்போது நீங்கள் "Flashback - மறக்க முடியாத முகங்கள் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்" என்று பதிவு போட வேண்டியிருக்கும்....

நடக்காதுனு மட்டும் சொல்லாதிங்க இரட்டை இலைக்கு வாக்களித்தவர் தானே ரஜினிகாந்த்

5:47 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://bunksparty.blogspot.com/2006/04/blog-post_21.html

இந்த முறை இடஒதுக்கீட்டு விவாதத்தில் வந்த பின்னூட்டங்கள் நாம் இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவு என காண்பிக்கின்றது...

6:19 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://eenpaarvaiyil.blogspot.com/2006/04/blog-post_21.html

//தனக்கான உரையாடல்களை கட்டமைப்பதே வரலாறு என்றாகியிருக்கிறது. அதனால் ஒவ்வொரு இனத்திற்கும் தங்களுக்கான உரையாடல்களை கட்டமைப்பதே உண்மையான யுத்தக்களமாக இருக்கிறது. இங்குதான் அதிகார, ஆதிக்க சமூகம் தன் கோரக்கரங்களை நுழைக்கிறது. அந்தந்த மண்ணுக்குரிய பெருவாரியான மக்களின் உரையாடலை அறவே அழித்தொழித்து தனது ஆதிக்க உரையாடலை திணிக்கிறது. அதை அங்கு வாழும் அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானதாக கற்பிக்கிறது. இப்படி கற்பிக்கப்பட்டவையே இயற்கையானது என பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தின் நம்ப வைத்து அவர்களை மனரீதியாகவே அடிமைதனத்தை ஏற்கச் செய்கிறது. தாங்கள் அடிமைகள், ஆதிக்க சமூகத்தினருக்கு அடங்கிப்போவதே தனக்கு விதிக்கப்பட்ட விதி, அதை ஏற்றுக்கொண்டு வாழ்வதே ஒரே வழி என்று அவர்களை மனரீதியாகவே அடிமை பட வைக்கிறது. இந்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறும் போது அவர்களால் எதிர்ப்புகளற்ற அதிகார சமூகத்தை மிக எளிதாக கட்டமைக்க முடிகிறது. இவ்வாறு ஏற்படுத்திய கருத்துருவாக்கத்தை பாதுகாக்க எண்ணற்ற புராணக் கதைகள், நீதி சம்பவங்கள், இலக்கியங்கள் எனத் தொடர்ச்சியாக அதை வலுவூட்டி வருகிறது. பெண்ணடிமைத்தனமும் இதே முறையில்தான் இயங்குகிறது.
//
எத்தனை சத்தியமான வார்த்தைகள்.....

வரலாறு நேர்மையாக எழுதப்படவேண்டும் இன்றைய செய்திகள் நாளைய வரலாறு ஆனால் இன்றைய செய்திகளை செய்திகளாக பதிவு செய்யாமல் கேவலமான உத்திகளை பயன்படுத்தி திரித்து தான் பதிவு செய்கின்றனர், மேலும் இட ஒதுக்கீடு தொடர்பாக நிகழ்ந்த வாதங்களில் சிலர் எழுதியதை படித்தபோது இவர்கள் எந்த உலகத்தில் உள்ளனர், நான் பார்க்கமுடிந்த விடயங்கள் எப்படி இவர்கள் கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது, என்ன நடக்கிறது இந்த நாட்டில் என்று தெரியாமல் நிகழ்காலத்தில் உள்ளவர்களே இருக்கும்போது வருங்கால சந்ததிக்கு எப்படி பட்ட வரலாற்றை நாம் தெரிவிக்க போகின்றோம்.....

மிக அருமையான கட்டுரை....

நன்றி

3:36 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://muthuvintamil.blogspot.com/2006/04/blog-post_22.html

//சசி-யிடம் சில நேரம் குடிதாங்கி சார்பு தெரியவில்லையா?
அது ஒரு வேளை சமூகப்பற்றாக கூட இருக்கலாம் என்று நான் சொன்னால் நம்பவா போகிறீர்கள்?!.
//
ஆகா சசிக்கும் முத்திரையா? ஜெயக்குமார் அவர்கள் சசியின் சாதிச்சான்றிதழ் வைத்திருக்கின்றார் போல.... குடிதாங்கியை பல விடயங்களில் பல சமயங்களில் இணையத்தில் ஆதரித்தவர்கள் பத்ரி,ரோசாவிலிருந்து பலரையும் வரிசைபடுத்தலாம் அவர்கள் எல்லோருடைய சாதிச்சான்றிதழையும் ஜெயக்குமார் பார்த்திருப்பாரோ? பண்ருட்டி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி தொகுதி நிலவரத்தை பாமக பற்றி எழுதாமல் எழுதமுடியாது....ஜெயக்குமார் இது வரை இணையத்தில் முத்திரை குத்துபவர்கள் பத்தாதென்று நீங்கள் வேறா?

4:15 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://metermurugesan.blogspot.com/2006/04/blog-post_114576512135394551.html

//குழலிண்ணா //
மீட்டர் முருகேசு தம்பி....

//விகடன்ல கவித லிப்டு பண்ணி ப்ளாக் சுட்டிருக்காரூண்ணா. விகடனோட ரேஞ்சுக்கு இந்த துக்கடா பொயட்ரி //
விகடன்ல லிப்டு பண்ணது படம் மட்டும் இந்த துக்கடா பொயட்ரி நம்ம சரக்கு தம்பி...



//Mr. Kuzhali's post is very untimely and out of phase
//
நேற்று விகடனில் இந்த படத்தை பார்த்தபோது சட்டென்று மனதில் தோன்றியது எழுதிவிட்டேன்...

//சமூக அவலத்தை சுட்டிக்காட்டும் போராளியாக
//
போராளியா? அதெல்லாம் பெரிய வார்த்தை....

10:49 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://vettri.blogspot.com/2006/04/blog-post_23.html

பிரிவினைவாதிகளின் கொலைகளை ஆதரித்து ஏதேனும் எனது பதிவில் இருக்கின்றதா? இல்லையே பிறகு ஏன் ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்கின்றீர்...

உரக்க சொல்லுங்கள் ஜெய்ஹிந்த், இந்த ஜெய்ஹிந்த் சத்தத்தில் மனோரமாக்கள் குரல் மறையட்டும், ஈழத்தமிழ் சகோதரிகளின் குரல் நசுங்கட்டும், காஷ்மீரின் குரல் குறையட்டும், சந்தனக்காட்டு சந்ததிகளின் குரல் சுருங்கட்டும், உரக்க சொல்வோம் ஜெய்ஹிந்த்

1:02 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://rajniramki.blogspot.com/2006/04/10.html

//ரசிகர் மன்ற ஷோ நடத்தவும் போஸ்டர் அடிக்க, கட் அவுட் வைக்க நீங்க கொடுக்குற காசு எல்லாத்தையும் லஞ்ச கணக்குல கொண்டு வந்துடப் போறாங்க...
//
ஹி ஹி தலைவா எல்லா மன்றத்திலும் அப்படித்தான் நம்ம மன்றத்தையும் சேர்த்து தானப்பு சொல்றேன்..

//சினிமாவுல மட்டுமல்லாம மன்ற கூட்டத்திலேயும் ஜாதிக் கட்சி தலைவர்களுக்கு பிரமாதமா பன்ச் வைக்கிறீங்க... அப்படியே கன்டினியூ பண்ணுங்க
//
//நாயக்கர் ஓட்டை மொத்தமா அள்ளிட்டு வரணும்னா
//
என்ன தல இப்படி கொயப்புறிங்க

//படத்து ரிசல்ட் பத்தி கவலையே படாம இருக்குறது நல்ல விஷயம். யாரும் முந்திரி காட்டை தேட வேண்டிய அவசியமில்லை
//
பின்ன நாங்கெல்லாம் சொந்த படமா இருந்தா தானே கவலைப்படுவோம் வாய்ஸ் கொடுப்போம், பார்க்க வேண்டிய நேரத்தில பார்ப்போம்னு மெசேஸ் சவுண்டுலாம் கொடுப்போம், அடுத்தவன் பணத்துல எடுக்குற படம் எப்பிடி போன நம்ம எளவுக்கென்ன...
என்ன தல நாஞ்சொல்றது சரிதானே...

4:59 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://masivakumar.blogspot.com/2006/04/blog-post_114596790449130974.html

அரசு ஊழியர்களின் வயிற்றில் அடித்தது, சாலை பணியாளர்கள் 60+ பேரின் உயிரைக்குடித்தது, எம் மக்களின் சிறு தெய்வ வழிபாட்டிற்கு ஆப்பு வைத்தது, நெசவாளிகளுக்கு கஞ்சித்தொட்டி திறக்கும் நிலை வந்தது, அந்த எதிர்ப்பு குறியீட்டையும் பிரியாணி தொட்டி திறந்து அசிங்கப்படுத்தியது, அதிக படியாக கிட்டங்கிகளில் இருந்த ரேசன் பொருட்களை கூட சரியாக வினியோகிக்காமல் விவசாயிகள் எலிக்கறி தின்றது, பேருந்தில் வைத்து உயிரோடு மாணவிகளை எரித்தது, தேவையான போது வீரமணி போன்ற ரவுடிகளை பயன்படுத்தி எதிர்கட்சிகளின் மீது வன்முறையை ஏவியது, இதோ இன்று பார்வர்டு பிளாக் வேட்பாளர்களையும் லீலாவதி(எம்.ஜி,ஆரின் அண்ணன் மகள்)யை கடத்தியது, கஞ்சா வழக்குகள், பொடா அத்து மீறல்கள் என்ற மற்ற கொள்ளிகளை பார்க்கும் போது ஊடக கொள்ளி எவ்வளவு தேவலாம், ஜேஜே டிவிக்காக நடந்த அத்துமீறல்கள் சூப்பர் டூப்பர் கேபிள் இணைப்பிற்காக மிரட்டப்பட்டவர்களையும் நினைவில் கொள்ளலாம், உயிர், உரிமை போகும் பிரச்சினகள் தான் முதலில் பிறகுதான் ஊடகங்களும் மற்றவைகளும்

6:00 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://masivakumar.blogspot.com/2006/04/blog-post_114596790449130974.html

//மக்களும், ஊடகங்களும், நீதி மன்றங்களும் விழிப்போடு இருந்தால் தடுக்க முடிபவை
//
10 ஆண்டுகால ஆட்சியில் இது வரை தடுக்க முடியவில்லை என்பது நிதர்சனம், மக்கள் விழிப்புணர்வோடு இருந்திருந்தால் எந்த பிரச்சினையுமே இல்லையே...நீதி மன்றங்கள் எந்த அளவில் விழிப்புணர்வோடு இருக்கின்றன?? உதாரணத்திற்கு ஜெயலலிதா மீதான வழக்கு பெங்களூர் சென்றும் கூட இன்றுவரை அதன் நிலை? தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கின் நிலை? பொடா வழக்குகள்?.... ஊடகங்கள் இன்றைய நிலையில் ஊடகங்கள் என்று சொல்வதை விட ஊதுகுழல்கள் என்று சொல்வது சாலப்பொருத்தம் இப்படி சொல்வதாலேயே இது சன்,தினகரன் தவிர்த்த என்று பொருள் அல்ல, அவைகளும் சேர்ந்து தான், 1ரூபாய்க்கு டெக்கான் ஹெரால்டு வெளியிட்டபோது அது எப்படி சாத்தியம், அதில் எத்தனை லாபம் எப்படி முடியும் என்று ஆய்ந்து அறிந்து கட்டுரை எழுத முடியும் அதே தினகரன் 1 ரூபாய்க்கு வெளியிடும்போது வயிற்றில் அடித்துக் கொண்டுள்ளனர், ஊடகம் என்று சொல்வதற்கு அருகதையற்ற நிலையை தினமலர்,குமுதம்,சன்,தினகரன் உட்பட அனைத்து ஊடகங்களும் எடுத்துள்ளன

திமுக, அதிமுக என்ற இரு கொள்ளிகளில் திமுக என்ற கொள்ளி அதிமுக என்ற கொள்ளியைவிட பரவாயில்லை என்பது என் நிலை....

6:55 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://baavaa.blogspot.com/2006/04/blog-post_25.html

//சுனாமியின் போது ஜெ. அரசு உண்மையிலேயே அருமையாக செயல்பட்டது என்பது எதிர்கட்சிகளே (வேண்டாவெறுப்பாக) ஒப்புக் கொள்ளும் உண்மை
//
மாயவரத்தான் தவறான தகவல் தருகின்றார் கடலூர் கடுமையாக சுனாமியால் பாதிக்கப்பட்டது, பாதிக்கப்பட்டதில் எங்கள் சொந்தகாரர்கள் கிராமங்களும் பல, மாயவரத்தான் சொன்ன மாதிரி அருமையாகவெல்லாம் செயல்படவில்லை என்பது அவர்கள் கூறியது, விவேக் ஓபராய் மீதும் கடலூர் மாவட்ட ஆட்சி தலைவர் மீதும் இருந்த ஒரு பாசம் வேறு யார் மீதும் சுனாமி விடயத்தில் இல்லை, மேலும் அந்த சமயத்தில் அரசின் மீது கடும் எதிர்ப்பும், தொகுப்பு வீடுகள் கட்டி தர பல கோடி ரூபாய் திட்டத்தில் விவேக் ஓபராய் கட்ட முனைந்த போது அரசாங்கம் நிலம் ஒதுக்கி தரவில்லை என்பது அங்கே இன்னமும் புகைந்து கொண்டிருக்கும் விடயம் அதிமுகவின் சேவல் குமாரை எதிர்த்து அங்கே முக்கிய பிரச்சாரமே இது தான் என்பது மாயவரத்தானுக்கு தெரியுமோ?

7:41 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://mayavarathaan.blogspot.com/2006/04/292.html

//பாட்டை முழுசா கேட்டா ஒரே 'கவுச்சி' வாடை.
//
'கொக்கு சைவ கொக்கு அது கெண்ட மீனை கண்டு' வைவிட 'கவுச்சி' கம்மி தான் தெரியாதா தல

தில்லானா தில்லான ஜிங்சக்கு ஜிங்குஜா ஜிங்சக்கு ஜிங்குஜா தில்லானா தில்லான

இன்னும் நிறைய கவுச்சிகளை வரிசை படுத்தலாம் என்ன நாறித்தொலையும்

5:43 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://rajniramki.blogspot.com/2006/04/10.html#comments

//நிரூபிச்சு காட்டறேன்னு தினமலர்ல தேடாதீங்க. அப்புறம் தினமலரை புடிச்சு தொங்கிறதா உங்க இமேஜ் டேமேஜ் ஆயிடும்! :-)
//

தல அந்த பத்திரிக்கை பெயர் தினமலர் அல்ல, தினச்சுடர், சில ஆயிரம் பிரதிகள் மட்டுமே விற்கும் உள்ளூர் தமிழ்பத்திரிக்கை, பெங்களூரில் உள்ள தமிழக தமிழர்கள்(நம்மள மாதிரி பொழப்புக்கு போனவக) டைம்ஸ் ஆப் இன்டியா,டெக்கானோடு நிறுத்திகொள்வார்கள், என்னை மாதிரி ஒரு சிலர் மட்டுமே தினச்சுடர் படிப்பர்(பெரும்பாலும் நான் மெஸ்ஸில் ஓசியில் படித்துவிடுவேன்), 2000ம் ஆண்டு இறுதி அல்லது 2001ம் ஆண்டு தொடக்கத்தில் ரஜினிகாந்த் கன்னட சாலுவலியா சங்கத்திற்கு இரண்டு இலட்ச ரூபாய் நன்கொடை அளித்ததின் பற்று சீட்டு பதிவு தினச்சுடரில் வெளியானது, ம்... அப்போதே நான் அதை சேகரித்து வைத்திருந்தால் ரஜினி ராம்கியிடமிருந்து இணைய வாசகர்களுக்கு விடுதலை வாங்கித்தந்திருப்பேன் :-) இப்போதும் தினச்சுடர் அலுவலகத்தை தொடர்பு கொண்டால் கிடைக்கும் என நம்புகின்றேன், ரஜினி பற்றி பொஸ்தகம் எழுதியிருக்கிங்க தகவலுக்காக சொல்கின்றேன் தெரிஞ்சுக்குங்க, அந்த பத்திரிக்கை கிடைக்கும் போது உங்களுக்கு தான் முதல்ல அனுப்புவேன் தல

5:51 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://potteakadai.blogspot.com/2006/04/blog-post_27.html

//ஆற்றாமை, இயலாமை என பல பாதிப்புகளை எனது பதிவுகள் ஏற்படுத்தி இருப்பது புரிகிறது.
//

ஆகா.. ?????????

5:55 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://rajniramki.blogspot.com/2006/04/blog-post_29.html

//எழுத நினைத்த ஒரு ரிப்போர்ட்டருக்கு சம்பந்தப்பட்ட பத்திரிக்கை மேலிடத்திலிருந்தே அன்புக்கட்டளை
//
ஹா நெசமாவா? என்ன தல இது உதாரில்லையே.... பத்திரிக்கை உலகில் அதுவும் பத்திரிக்கை மேலிடத்திலிருந்து இராமதாசு, தொல்.திருமாவுக்கு ஆதரவா? என்ன தல நெசம் தான் பேசுறிங்களா? எந்த பத்திரிக்கைங்க, தினமலர்னு சொல்லிடாதிங்க நான் மயக்கம் போட்டு விழுந்துவிடுவேன்....

சட்டசபையிலேயே புலித்தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டுமென தீர்மானம் கொண்டுவந்த போது அதை எதிர்த்து கருப்பு சட்டை அணிந்து ஈழத்தமிழர்,புலி ஆதரவை காண்பித்தது பாமக, மேலும் திருமாவின் ஆதரவு அறிந்ததே...

இந்த சுட்டி வேலை செய்யவில்லை, கொஞ்சம் சரிதானா என்று சொல்லுங்களேன்
http//www.asiantribune.com/show_news.php?id=16692

//சம்பந்தப்பட்டவர்கள் யாரும் வாய் திறக்கவில்லை என்பதுதான் வேடிக்கை!
//
அடேங்கப்பா தினமணி, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ரேஞ்சுக்கு போயிட்டிங்க தல.... :-)

//தெருச்சண்டை ரேஞ்சுக்கு கழக வாரிசுகள் கத்திக்கொண்டிருக்கும் வேளையில் உள்கூட்டணி போட்டு கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் இருவர். ராமதாசு திருமாவளவன் பற்றி பேசுவதில்லை; திருமாவளவன் ராமதாசு பற்றி பேசுவதில்லை. அரசியல் நாகரிகம் புல்லரிக்க வைக்கிறது
//
என்ன தல ஏதோ புகைச்சல்ல பேசுற மாதிரி தெரியுதே, கருகிற வாசனை இங்க அடிக்குது....

வைகோவில் ஆரம்பித்து இப்போது தமிழ்பாதுகாப்பு இயக்கம் வரை விடுதலைப்புலிகளிடம் காசு வாங்கி அரசியல் நடத்துகிறார்கள் என்ற புரளி என்று நிற்குமோ.... காசு கொடுக்கும் அளவில் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்களா? அவர்களிடம் காசு வாங்கி அரசியல் செய்யும் நிலையில் தமிழ் பாதுகாப்பு இயக்கம் உள்ளதா.... அதற்கான தேவையென்ன என்பதை சற்று சிந்தித்தால் விஷமம் புரியலாம்.....

8:13 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://mayavarathaan.blogspot.com/2006/04/2006-298.html

//* சன் டி.வி.யோட காண்டிராக்டில் என் மனைவி தான் கையெழுத்து இடுவாள். 'எதாவது முரண்டு பிடித்தால் அவரோட மனைவி கோர்ட், கேசுன்னு அலைய வேண்டும்' என்று எச்சரிக்கை வந்ததினால் தான், நம்மால் நம் மனைவி இந்த வயசில் கோர்ட்டுக்கு அலைய வேண்டாம் என்று காண்டிராக்ட் முடியும் வரை காத்திருந்தேன்.
//
காண்ட்ராக்ட்டில் விசுவின் மனைவி எதற்கு கையெழுத்து இடவேண்டும்? அவரா அரட்டை அரங்கம் நடத்துகிறார்? அல்லது அதன் பின்புலத்தில் இருக்கிறாரா? அல்லது வருமாணவரியை ஏய்க்கவா? புனித பிம்பம் விசு வாழ்க...

8:53 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://oagaisblog.blogspot.com/2006/04/blog-post_114629158595421890.html

//ஆனால் இயல்பாக அமைந்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு, தேசியத்தில் ஒரு நம்பிக்கை, இவையெல்லாம் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றன.
//
என்னது பயங்கரவாத எதிர்ப்பா? வைகோ, நெடுமாறன்,நக்கீரன் கோபாலெல்லாம் பயங்கரவாதியா?

9:39 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://jeyakumar777.blogspot.com/2006/04/blog-post_29.html

உங்களின் இந்த பதிவின் நிறைய கருத்துகளுடன் அதிலும் முக்கியமாக தலித் மக்களுக்கிடையே ஒற்றுமை தேவை....

சமூக முன்னேற்றமும் அதே சமயம் அரசியல் உரிமையும் நிச்சயம் தலித்களுக்கு வேண்டும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல், அரசாங்க, அதிகார பலம் இல்லாத எந்த சமூகமும் முன்னேற முடியாது...அதிலும் குறிப்பாக தலித் சமுதாயம் அரசாங்க,அதிகார பலமில்லாமல் முன்னேற முடியாது நாடார் சமூகத்திற்கு காமராசர் காலத்திய மறைமுக அரசியல் பலமும், பெரும் பணக்கார நாடார்களின் பலமும் ஊடக பலமும் மிகப்பெரிய பலம், ஆனால் தலித் சமூகத்தில் இம்மூன்றுமே இல்லை, இது தொடர்பாக நிறைய எழுதலாம், பதிவாக எழுத முயற்சிக்கின்றேன், ஆனால் தலித் தலைவர்கள் துரோகம் செய்கிறார்கள் என்பதை ஏற்க இயலவில்லை, இன்று திருமா, எல்.ஈ போன்றவர்கள் இல்லையென்றால் தலித்களுக்கு இன்றிருக்கும் உரிமைகளும் சுதந்திரமும் கிடைத்திருக்காது, இதற்கு போராடவே அவர்களுடைய முழு பலமும் தீர்ந்துவிடுகின்றது.

மீதியை பதிவில் பேசுவோமே....

2:54 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://potteakadai.blogspot.com/2006/04/blog-post_30.html

சத்யா மிக நல்ல பதிவு, வல்லரசாவதைவிட நல்லரசாக இருப்பதே தேவை என நம்புகிறவன்....

உயிர் ஆதார உரிமைப் பிரச்சனைகள் தான் முதலில் பிறகுதான் வல்லரசெல்லாம், சமூக ஏற்றத்தாழ்வுகள் எம் மக்களுக்கான தன்னிறைவு இல்லாத வல்லரசு தேவையில்லை...

2020ல் வல்லரசு என்ற என் பதிவின் சுட்டி இங்கே

4:47 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://penathal.blogspot.com/2006/05/1-01-may-06.html

//ஜாதிகள் ஒழியாமைக்கு இத அரசியல் முறையே முக்கியக்காரணம் என்று நான் நினைக்கிறேன்
//
பெனாத்தல் சுரேஷின் புதிய கண்டுபிடிப்பா இது?

அய்யா நீங்கள் சொல்லும் இந்த அரசியல் வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன, சாதிக்கட்சி என சொல்லப்படும் பாமக பிறந்து வெறும் 16 ஆண்டுகள் ஆகின்றன? விடுதலை சிறுத்தைகள் பிறந்து வெறும் 9 ஆண்டுகள் ஆகின்றன.... இவர்களால் தான் இன்னமும் சாதி இருக்கிறதென்றால் மேற்கு மாவட்டங்களில் பாமக,விடுதலைசிறுத்தைகள் நிழல் கூட பட்டதில்லை பிறகெப்படி அங்கே இன்னமும் சாதிகள் இருக்கின்றன.....
சரி கேரளாவில் எந்த சாதிக்கட்சி உள்ளது பிறகு அங்கெப்படி சாதிகள் உள்ளன, சாதிக்கட்சிகள் சாதிக்கு காரணம் என்ற முன்முடிவை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு சிந்தித்தால் காரணம் புரியலாம்....

ஒரு ஜென்கதை உண்டு சீடர்களிடம் போதிக்கும் முன் ஜென் துறவி ஒரு தேநீர் நிரம்பிய கோப்பையில் மேலும் மேலும் தேநீர் ஊற்றினாராம், ஊற்றப்பட்ட எல்லா தேநீரும் கீழே போனது, பிறகு கோப்பையிலிருந்து தேநீரை கீழே ஊற்ற சொன்னாராம், மற்றவர்கள் புரியாமல் கேட்ட போது உங்கள் முன் முடிவுகளை மனதிலிருந்து ஊற்றிவிட்டு பிறகு வாருங்கள் பேசலாம், காலியான கோப்பையில் தான் நிரப்ப முடியும் தேநீர் இருக்கும் கோப்பையில் அல்ல என்றாராம்... சாதிகட்சிகளும், அரசியலும் தான் சாதிமறையாமல் இருக்க காரணம் என்பதை சற்று விலக்கிவிட்டு யோசித்தால் இன்னும் காரணங்கள் என்ன என்று புரியலாம்....

நன்றி

1:35 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://muthuvintamil.blogspot.com/2006/05/blog-post_114665299026470346.html

சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட கிரிம்சன்லாஜிக் என்கிற IT நிறுவனம் அவர்களுடைய பெங்களூர் அலுவலகத்தில் உடல் ஊனமுற்றோருக்காக தனி ஒதுக்கீடு செய்து அதில் சிலருக்கு வேலைவாய்ப்பும் அளித்தது....

//பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு என்றவுடன் துள்ளிகுதிக்கும் பல முதலாளிகள்
//
பிரேம்ஜிக்கும், நாராயணமூர்த்திக்கும் அவர்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் திறமையற்று(?!) இட ஒதுக்கீட்டில் பொறியியல் படித்தவர்கள் என்பது அவர்களுக்கு தெரியாமலிருக்குமா?

நன்றி

4:42 AM  

Post a Comment

<< Home