Tuesday, August 15, 2006

ஆகஸ்ட்15-2006க்கு பிறகான பின்னூட்டங்கள்

ஆகஸ்ட்15-2006க்கு பிறகான பின்னூட்டங்கள்

173 Comments:

Blogger குழலி / Kuzhali said...

http://thulasidhalam.blogspot.com/2006/08/blog-post_15.html

//விருந்து சாப்பிடவந்தவங்க வீட்டையே அழிச்சமாதிரி, வெள்ளைக்காரர்கள் வந்து நாட்டையே பிடிச்சு எடுத்துக்கிட்டாங்க.
அழிச்ச வீட்டைப் புதுசா நிர்மாணிக்கிறவரை நமக்கு இனி ஓய்வே கிடையாது. இந்தக் காரியத்தை நாம் தொடங்கி
வச்சு, //
துளசியக்கா ஆரம்பிக்க வேண்டியது வெள்ளைகாரர்கள் அழிச்ச இடத்திலிருந்து அல்ல, அதற்கும் வெகு காலத்திற்கு முன்னிருந்து.... நான் சொன்னது புரியலைனா பெரியார் சொன்னதை படிச்சி பாருங்க, நாம சுத்தகரிப்பு வேலையை எங்கிருந்து ஆரம்பிக்கனும்னு புரியும், அது வரை சுதந்திர தினம் எம்மக்களுக்கு அல்ல.

நாம் திருமணம் செய்யலை என்றாலும் மற்றவர்கள் திருமண தினத்திற்கு வாழ்த்து சொல்வோமல்லவா அது மாதிரி வேண்டுமானால் உங்களுக்கு சுதந்திர தினத்திற்கு வாழ்த்து சொல்ல முடியுமே தவிர உண்மையான சுதந்திரம் இன்னமும் வரவில்லை, மற்றபடி உங்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள்.

//நம்முடைய தர்ம நியாயங்களை நிலை நாட்டுவோம்.
//
அய்யய்யோ வேண்டாங்க, இந்திய சமூகத்தின் தர்ம நியாயம், வெள்ளையர்களுக்கு முன்பும், பின்பும் மனு(வர்ணாசிரம)தர்மமாகத்தான் இருந்தது, வெள்ளையன் காலத்தில் மட்டும் தான் நெற்றியிலிருந்து பிறந்தவனும் காலிலிருந்து பிறந்தவனும் எல்லாம் சமம், எல்லாம் அடிமை என்ற சமதர்மம் இருந்தது.

6:38 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://thoughtsintamil.blogspot.com/2006/08/blog-post_16.html

பத்ரி, பதிவின் மூலம் நீதிமன்றங்களின் தீர்ப்பு பற்றி சொல்ல விழையும் செய்தியோடு எனக்கு மாறுதல்கள் உள்ளன, நீதிமன்றங்கள் புனிதபசுக்கள் அல்ல, நீதிமன்றங்கள் ஒரே பிரச்சினையில் எடுத்த பல்வேறு நிலைப்பாடுகள் நமக்கு தெரிந்ததே, அதுவும் குறிப்பாக No Work No Pay வில் AIMS க்கு ஒரு மாதிரியாகவும் மற்றவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் நீதிமன்றங்கள் நடந்துகொண்ட முறை அறிந்ததே, முடிந்தால் பிறகு விளக்கமாக பதிலிறுக்கின்றேன்.

சிதம்பரம் கோவில் தொடர்பான இடைக்காலத்தடையே முற்றிருதி தீர்ப்பானதே.

http://kuzhali.blogspot.com/2006/07/1.html

http://kuzhali.blogspot.com/2006/08/blog-post.html

1:00 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://tvpravi.blogspot.com/2006/08/blog-post_17.html

ரவி உங்கள் பதிவின் மீது மாறுபட்ட கருத்துகள் எனக்கு உண்டு... பிறகு விளக்கமாக எழுதுகிறேன், துளசி அவர்களின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்... இங்கேயும்.

http://thulasidhalam.blogspot.com/2006/08/blog-post_15.html

//விருந்து சாப்பிடவந்தவங்க வீட்டையே அழிச்சமாதிரி, வெள்ளைக்காரர்கள் வந்து நாட்டையே பிடிச்சு எடுத்துக்கிட்டாங்க.
அழிச்ச வீட்டைப் புதுசா நிர்மாணிக்கிறவரை நமக்கு இனி ஓய்வே கிடையாது. இந்தக் காரியத்தை நாம் தொடங்கி
வச்சு, //
துளசியக்கா ஆரம்பிக்க வேண்டியது வெள்ளைகாரர்கள் அழிச்ச இடத்திலிருந்து அல்ல, அதற்கும் வெகு காலத்திற்கு முன்னிருந்து.... நான் சொன்னது புரியலைனா பெரியார் சொன்னதை படிச்சி பாருங்க சொன்னதை படிச்சி பாருங்க, நாம சுத்தகரிப்பு வேலையை எங்கிருந்து ஆரம்பிக்கனும்னு புரியும், அது வரை சுதந்திர தினம் எம்மக்களுக்கு அல்ல.

நாம் திருமணம் செய்யலை என்றாலும் மற்றவர்கள் திருமண தினத்திற்கு வாழ்த்து சொல்வோமல்லவா அது மாதிரி வேண்டுமானால் உங்களுக்கு சுதந்திர தினத்திற்கு வாழ்த்து சொல்ல முடியுமே தவிர உண்மையான சுதந்திரம் இன்னமும் வரவில்லை, மற்றபடி உங்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள்.

//நம்முடைய தர்ம நியாயங்களை நிலை நாட்டுவோம்.
//
அய்யய்யோ வேண்டாங்க, இந்திய சமூகத்தின் தர்ம நியாயம், வெள்ளையர்களுக்கு முன்பும், பின்பும் மனு(வர்ணாசிரம)தர்மமாகத்தான் இருந்தது, வெள்ளையன் காலத்தில் மட்டும் தான் நெற்றியிலிருந்து பிறந்தவனும் காலிலிருந்து பிறந்தவனும் எல்லாம் சமம், எல்லாம் அடிமை என்ற சமதர்மம் இருந்தது.

2:02 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://ravisrinivas.blogspot.com/2006/02/blog-post_25.html

//ஆகம விதிகளைபின்பற்றுவது என்று வரும் போது அரசின் நோக்கம் நிறைவேறாமல் போயிற்று. ஆபரேஷன்வெற்றி, நோயாளி மரணம் என்ற கதைதான். உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதுஅதன் அதிகாரத்திற்குட்பட்டதே. அடிப்படை உரிமைகள் குறித்த சட்டம், வழக்குகளை முதலில்உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,
//

http://ravisrinivas.blogspot.com/2006/02/blog-post_25.html லில் இருந்து சில வரிகள் கீழே...

இத்தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது, தீர்ப்பின் கடைசிப் பகுதியில் சில விளக்கங்கள் தரப்படுகின்றன.மரபா, அரசியல் சட்டமா என்ற கேள்வி எழும் போது அரசியல் சட்டமே நீதிமன்றத்தின் கண்ணோட்டத்தில் எது சரி என்பதை தீர்மானிக்க மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. மரபு என்ற பெயரில் அரசியல் சட்டத்தின் விதிகள், நெறிகளுக்கு முரணான உரிமைகளை கோர முடியாது என்பதை இத்தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

இந்த பதிவையும் நீங்கள் சில மாதங்களுக்கு முன் எழுதிய பதிவையும் படிக்கும் போது ரவி எதற்கும் பதிவெழுதுவதற்கு முன் தன் முந்தைய பதிவுகளை மீண்டும் பார்ப்பது ஷேமமாயிருக்கும்.

7:42 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://manikoondu.blogspot.com/2006/08/blog-post_17.html

தொல்.திருமா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், சேரி மக்களின் துயர் போக்க இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து சாதிக்க வேண்டும்.

நன்றி

7:59 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://sivabalanblog.blogspot.com/2006/08/blog-post_18.html

50.5% இதரவகுப்புகளுக்கு அல்ல, சட்டப்படி அதுஎல்லோருக்கும் தான், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அனைவருக்கும் தான், ஆனால் அதில் உள்ள ஓட்டையால், அல்லது சரியாக வரையறுக்கப்படாததால் அது கடைசியில் இதர சாதியினருக்கு என்று மறைமுகமாக மாறிவிடும் இது தமிழகத்திலும் பொறியியல் படிப்பில் நடந்து காலம் காலமாக நடந்து வருகின்றது, கொஞ்சம் சிக்கலான கணக்கு இது, சட்டென்று எளிதில் விளங்காது, இரண்டுமாதங்களுக்கு முன்பே விளக்கப்படம் எல்லாம் தயார்செய்து முயற்சி செய்தேன், இன்னமும் எனக்கே திருப்தி வரவில்லை, இந்த ஆண்டு, மற்றும் முந்தைய ஆண்டுகளில் பொறியியல், மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்தவர்களின் பட்டியல் கிடைத்தால் (கட்-ஆஃப் விபரம் அல்ல, முழு விபரம்) என்னால் மிக எளிதாக விளக்க முடியும். இது தொடர்பான சுட்டிகள் ஏதேனும் இருந்தால் தந்துதவுங்கள்

6:44 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://holyox.blogspot.com/2006/08/139.html

//"தலித் கஷ்டப்படுகிறான்.பிற்பட்ட சாதியினர் ஒடுக்கப்படுகிறார்கள்.எதற்கு இந்த நாட்டுப்பற்று?"
//

ஒரு சிறிய ஒப்புமை உதாரணம், நன்றாக காசு, பணம், அந்தஸ்த்து இருக்கும் ஒருவர் குடும்பம் புதுத்துணி எல்லாம் வாங்கி தீபாவளியை சந்தோசமாக கொண்டாடும் போது வறுமையில் வாழும் பக்கத்து வீட்டுகாரர்களை பார்த்து என்னப்பா நீ தீபாவளி கொண்டாடலையா என்கிறார், ஆமாம் இங்க தெனம் சோத்துக்கே வழியில்லை, கிழிசல் தான் இருக்கு இதுல தீபாவளிதான் குறைச்சலா இருக்கோ தீபாவளியாம் தீபாவளி என்று அவர்கள் கூறினால் சே... என்ன இப்படி சொல்கின்றீர்? தீபாவளி என்பது என்ன தெரியுமா? அது ஒரு பண்டிகை அவதாரம் கிருஷ்ணன் நரகாசுரனை கொன்று நம்மையெல்லாம் காத்த நாள் என்று வியாக்கியானம் சொல்கின்றீர், அப்போது அவர் மீண்டும் சொல்கிறார் என்னத்த அவர் நரகாசுரனை கொன்னு என்னத்த கிழிஞ்சிது இங்க இன்னும் அக்கிரமம் ஒழியலை, அநியாயம் ஒழியலை என்று பேசுகின்றார்.....

இந்த உதாரணம் வரிக்கு வரி இந்திய சுதந்திரதினத்திற்கு பொருந்தும்.

நன்றி

6:10 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://holyox.blogspot.com/2006/08/139.html

//இந்த உதாரணம் கூட வரிக்கு வரி இந்திய சுதந்திர தினத்திற்கு பொருந்தும்.
//
எனக்கென்னமோ பொருத்தமா தோனலை ஏன் தெரியுங்களா? இப்போ அந்த சகோதரர்களில் ஒருவன் மட்டும் பணக்காரணாகவும், மற்றொருவன் ஏழையாகவும் இருக்க காரணம்? ஒரு வேளை அந்த காரணம் இந்த மாதிரி இருந்தால்.. அந்த சகோதரர்களுக்கு ஒருவனுக்கு மட்டும், பணம், சொத்து, படிப்பு என எல்லாவற்றையும் கொடுத்தார்கள் அவன் அம்மா எப்படி இன்னொரு மகனை படிக்க விடாமல் சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்பி அதன் மூலம் இன்னொரு மகனை படிக்க வைத்த அம்மாவின் பிறந்த நாளை பணக்கார மகன் வேண்டுமானால் கொண்டாடலாம், அதை ஏழை மகன் கொண்டாட முடியாது, இல்லை இல்லை அவள் உனக்கும் தாய் தான் ஆதலால் நீயும் கோவிலுக்கு போயாவது கொண்டாடு என்கிறீர்கள்....

இப்போ இதை அப்படியே இந்திய சுதந்திரத்திற்கு பொருத்தி பார்க்கலாம், செருப்பு போட்டுக்கொண்டு ஊரில் நடக்க கூட சுதந்திரம் இல்லாத தலித்துக்கு இந்தியா சுதந்திரம் வாங்கியதில் என்ன பெருமை இருக்க முடியும், இங்கே அடிப்படை சுதந்திரம் இல்லை.

சிதம்பரம் கோவிலில் பிறப்பால் தீட்சிதர் அல்லாத ஒருவர் தேவாரம் பாட முடியவில்லை என்றால் இந்திய சுதந்திரத்தை பற்றி என்ன பெருமை கொள்ள முடியும், இங்கே அடிப்படை சுதந்திரத்தோடு மொழி சுதந்திரமும் சேர்ந்து பறி போகின்றது.

இது மாதிரி ஆயிரம் ஆயிரம் சொல்லிக்கொண்டே போகலாம்.

பம்பாயில் 24மணி நேர கெடுவைத்து தமிழர்களை வெளியேற சொன்னபோது எப்படி அவர்கள் இந்தியர்கள் அல்லாமல் வெறும் தமிழர்கள் ஆகிப்போனார்கள், அதே போல பெங்களூரில் ராஜ்குமார் கடத்தப்பட்ட போதும், இறந்தபோதும் தமிழர்கள் ஏன் உயிருக்கு பயந்து நடுங்க வேண்டும், அப்படியே தமிழ்நாட்டில் மின்சாரம் எடுத்து சென்ட்ரல் கிரிட்டுக்கு அனுப்பி அதிலிருந்து தான் தமிழ்நாடு மின்சாரம் பெறவேண்டும், ஆனால் காவிரி நீர் கிடைக்காது, இது மாதிரி ஏன் இந்திய சுதந்திரம் போலி சுதந்திரம் என்று சொல்ல ஆயிரம் ஆயிரம் பேசலாம்.

இப்போ இந்திய சுதந்திர தினத்தை நீங்க நம்ம அம்மா அப்படிங்கிறாங்க, தமிழ் தேசிய ஆளுங்க இல்லை இல்லை அது எங்க அம்மா இல்லை எங்கம்மா வேற அதெப்படி நான் எங்கம்மா இல்லாதவங்க பிறந்த நாளை கொண்டாடுவோம் அப்படிங்கிறாங்க....

இது மாதிரி நிறைய இருக்கு செல்வன்... முடிந்தால் விளக்கமான பதிவிடுகின்றேன்.

7:40 PM  
Blogger குழலி / Kuzhali said...

செல்வன், நீங்கள் கொடுத்த அத்தனை விளக்கங்களும் 1947 ஆகஸ்ட் 15க்கு முன்பும் கூட கூட வெள்ளையன் இருக்கும் போதும் பொருந்தும்,
அம்மா இந்தியா என்பதை அம்மா பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என பொருத்தி பாருங்கள் சரியாக வரும், அப்போது இந்தியா என்ற நாடில்லை எனக்கொள்வோம்(கொள்வோம் என அது தான் உண்மை), வெள்ளையன் தனக்காக ஒன்றினைத்த நாடுதான் இந்தியா. பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அம்மாவிடமிருந்து இந்தியா என்ற அம்மாவை உருவாக்கிய அவசியம் என்ன?

8:52 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://holyox.blogspot.com/2006/08/139.html

//சேர,சோழ,பாண்டிய,பல்லவ,நாஞ்சில்,கொங்கு நாடுகளை இணைத்து தமிழ்நாடு என்ற அம்மாவை உருவாக்க வேண்டிய அவசியம் என்னவோ அந்த அவசியம் தான் இங்கும்.
//
செல்வன் இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்ல முயற்சிக்கிறேன், இப்போது இந்திய தேசியத்தில் மொழி உரிமை இல்லை, சாதிக்கொடுமையினால் அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது ஆனால் மொழி உரிமை இல்லை என்றால் வேறு யாருக்கோ இருக்கிறது அதாவது தமிழுக்கு இல்லாத உரிமை இந்திக்கும், சம்ஸ்கிரத்தத்திற்கும் உள்ளது, எனவே இந்திய சுதந்திரத்தை இந்தி, சம்ஸ்கிரத விரும்பிகள் கொண்டாடுவார்கள், அதே சமயம் மொழி உரிமை கிட்டாத மற்றவர்கள் உதாரணத்திற்கு தமிழ் தேசிய ஆதரவாளர்கள் தமிழர்கள் அதை எம் மொழிக்கு இங்கு சுதந்திரம் இல்லாத போது எம்மால் இந்திய தேசிய சுதந்திரம் ஒரு போலி என்பார்கள், ஆனால் இந்தி சமஸ்கிரத்திற்கு அது வெள்ளையனிடமிருந்து கிட்டிய சுதந்திரம்.

சரி தமிழ்தேசியம் கிடைத்துவிட்டதால் மொழி உரிமை கிடைத்து விடுவதாக கொள்வோம், அப்போது சாதிக்கொடுமையால் அடிப்படை உரிமைகள் கிடைக்கப்பெறாத ஒடுக்கப்பட்டவர்கள் என்ன சுதந்திரம் தமிழ்தேசிய சுதந்திரம் அடிப்படை உரிமையே இல்லை எப்படி எம்மால் சுதந்திரம் கொண்டாட முடியும் என்பார்கள், இல்லை இல்லை இது சுதந்திரம் அதை கொண்டாடு என்றால் அவர்களால் கொண்டாட முடியாது....
சரி அதுவும் இன்னொரு தேசியத்தில் கிடைக்கிறது அங்கே திருநங்கைகளுக்கு கிடைக்காத பாலின அங்கீகாரத்தினால் அவர்கள் சுதந்திரத்தை மதிக்கமாட்டார்கள், ஏனெனில் அது அவர்களுக்கான சுதந்திரம் இல்லை, ஆதலால் தனக்கு எல்லாம் கிடைத்தால் அது சுதந்திரம், இல்லையென்றால் அது சுதந்திரமில்லாதது, கொஞ்சம் யோசித்தால் இது புரியும்,

ஆனால் என்ன செய்வது நமது ஊடகங்களின் மூளைச்சலவையால் நம்மால் இதையெல்லாம் சட்டென்று ஏற்றுக்கொள்வது இயலாது நேரம் ஆகும், எனக்கும் நேரம் ஆனது... நிறைய ஆண்டுகள் ஆனது, நீங்கள் கேட்ட அதே கேள்விகளை நானும் கேட்டதுண்டு....

குறிப்பாக இந்திய சுதந்திரம் கொண்டாடுமளவில் இல்லை, ஏனெனில் உருவானது இந்திய தேசியம் அல்ல, "உருவாகாத இந்திய தேசியம், உருவானதோ இந்து பாசிசம்" தான்.

//ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்ன ஊர் நமது.எங்கே போயி முட்டிக்கணுமோ தெரியலை//
பாக்கிஸ்தானில், பங்களாதேசில் போய் முட்டிகலாமே, கோபப்படாதிங்க... ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை நாம் இந்திய எல்லைக்கோட்டோடு நிறுத்திவிடுகிறோம் பாருங்க, ஏன் அதையும் தாண்டி நம்மால் யோசிக்க முடியலை.... ஏனெனில் அங்கே நம்மை தடுப்பது நம் தேசியம் நம் நாட்டுப்பற்று என்று ஊட்டப்பட்டது....

சில சமயம் இந்த உயிருள்ள அம்மாவை உயிரற்றாதோடு உருவகப்படுத்தும் உதாரணங்கள் எசகு பிசகாக மாறிவிடும், விரிவாக பிறகு பின்னூட்டமிடுகிறேன்....

நன்றி

5:38 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://holyox.blogspot.com/2006/08/139.html

//இந்தியா கற்பிதம் என்றால் தமிழ் தேசியம் மட்டும் கற்பிதமில்லையா?புதுசேரியில் இருக்கும் தமிழன் ஏன் தமிழ்நாட்டோடு சேரவிரும்பாமல் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் இருக்க விரும்புகிறான்?காரைக்கால் தமிழன் ஏன் தமிழ்நாட்டோடு சேர விரும்பவில்லை?
//
செல்வன் இந்த கேள்விக்கு முந்தைய பின்னூட்டத்திலேயே தெளிவாக பதில் சொல்லியுள்ளேன், இப்போதிருக்கும் அதே சமூக நிலமையோடு தமிழ் தேசியம் உருவானால் அது சிலருக்கு சுதந்திரமாக இருக்கும், ஆனால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்கு அது சுதந்திர தினமாக இருக்காது, அது தான் நான் சொல்ல நினைப்பது.

//சாதிக்கூறுகள் இல்லாத தமிழ் தேசியத்தை சுதந்திரமென ஏற்றுக் கொள்வாரா. அந்த நிலையில் வட தமிழ் தேசம்,தென் தமிழ் தேசம் என வேண்டுமேன ஆரம்பிப்பாரா.
//
நிச்சயமாக, அப்போது நான் சுதந்திர தினம் மனமுவந்து கொண்டாடுவேன், வாழ்த்து சொல்வேன் எல்லோரிரிடமும் ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே என்பேன், SMS, MMS அனுப்புவேன், ஆனால் அப்போதும் கூட ஏதோ சில காரணங்களால் உரிமைகள் மறுக்கப்படும் சமுதாயம் தமிழ்தேசியத்தில் இருந்தால் அவர்கள் நிச்சயம் தமிழ் தேசிய சுதந்திர தினத்தை கொண்டாட முடியாது.

//குழலி,
தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். With reference to the discussion on this particular subject (ONLY!), I feel there is something basically faulty in your thinking !!! ஓர் எதிர்மறை அணுகுமுறையாகத் தோன்றுகிறது
//
நீங்களாவது இவ்வளவு மென்மையாக சொல்கின்றீர், சில ஆண்டுகளுக்கு முன் உங்களிடத்தில் நானும் என்னிடத்தில் புத்தகங்களும்,சில நண்பர்களும் இருந்த போது நான் இவ்வளவு மென்மையாகவெல்லாம் பேசவில்லை.

மற்றபடி ஆகா இந்தியாவில் பிரதமர் ஒரு சிறுபான்மை, குடியரசு தலைவர் ஒரு இசுலாமியர், etc. etc. எல்லாம் வழக்கமாக பலரும் சொல்வது தான், இதற்கு டெல்லி கலவரம், கோத்ராவில் ஆரம்பித்து பேசினால் பேசிக்கொண்டேதான் இருக்கலாம்.

//சொல்லப்போனால் தென் தமிழ்நாடு கேட்டு மதுரையில் சில இயக்கங்கள் தோன்றியுள்ளன.பாமக வடதமிழ்நாடு கேட்கிரார்கள்.கர்நாடகாவில் குடகுநாடு கேட்கிரார்கள்.ஆந்திராவில் தெலுங்கானா கேட்கிறார்கள்.மகராஷ்டிராவில் விதர்பா கேட்கிறார்கள்.உபியிலிருந்து உத்திராஞ்சலும்,மபியிலிருந்து சட்டிஸ்காரும் பிரிந்துவிட்டன.இங்கெல்லாம் மொழி தேசியம் ஏன் வேலை செய்யவில்லை?
//
தேசியம் இதன் அடிப்படை தான் என்று சொல்ல இயலாது
இன்றைய நிலையில் ஐ.நா. சபையில் 200க்கும் குறைவான நாட்டு கொடிகள் தான் பறக்கின்றன, இன்னும் வருங்காலத்தில்(உடனடியாக இல்லாமல் என்றாலும் என்றேனும் ஒரு நாள்) ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு கொடிகள் பறக்கலாம், அதற்கு இந்தியா முக்கியமான பங்களிப்பை செய்யும்.

anyway I made my point... இதற்கு மேல் என்னை பொறுத்தவரை இது தொடர்பாக தற்போதைக்கு பேச ஒன்றுமில்லை தொடர்ந்து விவாதித்தால் அது நீண்டு கொண்டே போகுமேயொழிய புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை இது ஒரு மாற்றுபார்வை ஏற்று கொள்ள வேண்டுமென்ற கட்டாயமெதுவுமில்லை, இந்திய தேசிய சுதந்திரத்தை இப்படியும் கூட அணுகுகிறார்களே என்ற எண்ணம் வந்தாலே போதும்.

நல்ல ஒரு விவாத தளம் அமைத்த செல்வனுக்கும் வசை வார்த்தைகள் இல்லாமல் இந்த விவாதத்தில் பங்கு கொண்டவர்களுக்கும் நன்றி.

5:54 PM  
Blogger குழலி / Kuzhali said...

போயிட்டு வர்ரேன்னு சொல்லிட்டு என்னைக்கு நாம உடனே கிளம்பி போயிருக்கோம், போயிட்டு வர்ரேன்னு சொல்லிட்டு அரைமணி நேரம் வாசப்படியில் நின்று பேசிக்கொண்டிருப்பது தானே நம் வழக்கம் :-) அதற்கு இங்கு மட்டும் விதிவிலக்கா என்ன? சரி ஒன்றிரண்டு வார்த்தைகள்...

//மனித சிந்தனை பரிமாண வளர்ச்சிக்கு உள்ளாவது. வறட்டு பிடிவாதம் இல்லாமல் ஆராயும் சிந்தனை உள்ளவராக நான் குழலியை நினைக்கிறேன். அவரது சிந்தனைகளும்
காலப்போக்கில் மாறலாம்.
//
கருத்துக்கு நன்றி, விடயம் என்னவென்றால் ஏற்கனவே நான் இந்திய சுதந்திரத்தையும், குடியரசு தினத்தையும் பள்ளி காலங்களில் வீட்டில் கொடியேற்றி கொண்டாடியவன், தேசிய கீதம் பாடும் பொழுது எழுந்து நிற்காத மாணவரிடம் கல்லூரியில் தகராறு செய்தவன் (இன்றைக்கும் அதை நினைத்து வெட்கப்படுகின்றேன்) பிற்காலத்தில் மாறிய சிந்தனைகள் தான் இன்று உங்களிடம் பேசிக்கொண்டிருப்பது... மனித சிந்தனை பரிமாண வளர்ச்சிக்கு உள்ளாவது என்பதில் நான் நம்பிக்கையுடையவன் உங்களின் மாற்றத்திற்காக காத்திருக்கின்றேன்.

//ஜாதி தமிழகம் மட்டுமல்ல,இந்தியா முழுவதும் இருக்கிறது.ஆக இது ஒரு இந்திய அளவிலான போராட்டமே அன்றி தமிழகம் தழுவிய போராட்டமல்ல.
//
வெறும் சாதியொழிப்பு மட்டுமல்ல தமிழ் தேசியம், எனவே சாதியொழிந்த இந்திய தேசியம் தமிழ் தேசியத்திற்கு மாற்றாக அமைய முடியாது, இது மிக விரிவானது சில வார்த்தைகளில் முடியாது, நேரம் கிடைத்தால் விளக்கமாக என் பதிவிலேயே எழுதுகிறேன்.

நன்றி

7:01 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://chinthanais.blogspot.com/2006/08/blog-post_115600896932648083.html

//ஐரோப்பாவில் புலிகள் வாங்கி கொடுத்த சாராயத்தை குடித்துவிட்டு போதையில் இந்தியா ராணுவத்தை தானே துரத்தியடித்ததாக உளறினவர் திருமா.
//
கலைஞர் பிரியன் என்ற பெயரில் வந்து உளறிக்கொட்டுபவருக்கு திருமா குடிப்பழக்கம் இல்லாதவர் என்றாவது தெரியுமா?

தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கும் கூட கருத்தளவு/பேச்சளவு ஆதரவு தரலாம் என சட்டம் சொல்கிறது, இந்த வாதத்தை வைத்து தான் வைகோ அவர்கள் பொடாவிலிருந்து பிணையில் வெளிவந்தார், எனவே காவல்துறையின் இந்த நடவடிக்கை சட்டப்பூர்வமானது அல்ல, கருத்து சுதந்திரத்தை தடை செய்யும் இந்த கைது கண்டிக்கத்தக்கது.

7:39 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://dharumi.blogspot.com/2006/08/171_17.html

தருமி அய்யா, வலைப்பதிவுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வெகுசன ஊடகமாக மாற ஆரம்பித்துள்ளது, அது வெகுசன ஊடகமாக மாறும் போது தற்போதுள்ள வெகுசன ஊடகங்கள்

எப்படியோ அது மாதிரியே மாறுகின்றது....

நானும் இதுப்பற்றி யோசித்திருக்கின்றேன்... குறிப்பாக சாதி பற்றிய பதிவுகளை நான் படிப்பதில்லை மதம் பற்றிய பதிவுகளை நான் படிப்பதில்லை சே.. சே... என்னப்பா இப்படி சண்டை

போட்டுக்கிறாங்க என்பது போன்று சமத்துவபுர ஜென்டில்மேன்கள் அதிகமாகிவிட்டனர் இவர்களால் இது மாதிரியான சமூகப்பிரச்சினைகள் பற்றிய பதிவுகள் மையஓட்டத்திலிருந்து

வில(க்)கி விடுகின்றனர்,

தற்போதைய வலைப்பதிவு நிலைமையை பார்த்தீர்களென்றால் அது அச்சு அசல் அப்படியே வெகுசன ஊடகத்தின் அத்தனை அம்சங்களோடு உருவாகி வருவது தெரிகின்றது, வெகுசன

ஊடகங்களில் இல்லாமல் சிறுபத்திரிக்கை என்ற சிறிய வட்டத்தில் சுருக்கிக்கொண்ட அல்லது சுருக்க வைக்கப்பட்ட கருத்துகள் வலைப்பதிவுகளில் வர ஆரம்பித்தது, ஆனால்

வலைப்பதிவுகள் அதிகரிக்க அதிகரிக்க இந்த மாற்று பார்வை பதிவுகள் சண்டை பதிவுகளாக பாவிக்கப்பட்டு ஒதுக்கப்படுகின்றன.

மேலும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலினால் வெளியிட தாமதமாகின்றது, வலைப்பதிவுகளில் முன்பு வலது சாரிகள் அவர்களினால் சாதிக்க முடியாததை இந்த போலி மற்றும் ஆபாச

பின்னூட்டங்களார்கள் அவர்களுக்கு சாதித்து கொடுத்துவிட்டனர், அதாவது வெகுசன ஊடகங்களில் வெளிவராத மாற்றுப்பார்வை கருத்துகள் வலைப்பதிவுகள் வந்ததும் அது தொடர்பான

விவாதங்களையும் முடக்கி போட முனைந்த வலது சாரிகளின் முயற்சி பலிக்காத போது நல்ல வாய்ப்பாக வந்து சேர்ந்தார்கள் போலிகள், இதனால் பின்னூட்ட மட்டுறுத்தலுக்கு

தள்ளப்படும் நிலமை, அதனால் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்பட்டு வெளியாகி அது தமிழ்மணத்தில் நிற்கும் நேரமும் குறைவாக இருக்கின்றது.

இடஒதுக்கீட்டு பதிவுகளில் இடஒதுக்கீட்டு நியாயங்களை அதன்ஆதரவாளர்கள் படித்து விவாதித்து தெரிந்து கொள்ளவேண்டுமென்பதில்லை, இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களுக்கும்

அப்படியே விலக்கி விட்டு சென்று விடுவார்கள், நடுநிலையாளர்கள் அய்யய்ய சீ.. என்னது இது இன்னொரு சாதிப்பதிவு என்று ஓடிவிடுவார்கள்....முன்பு வலைப்பதிவுகளில் இந்த நிலை

இல்லை, ஆனால் இப்போது உள்ளது, சரியாக பார்த்தால் இதே நிலை தான் வெகுசன ஊடக்த்திலும் நடந்துவருகின்றது.

தூர்தர்சன் என்ற ஒற்றை சானல் இருந்த போது தொடர்ந்தும் ஆரவத்தோடும் ஒளியும் ஒலியும் பார்த்தது இன்று கேபிள் தனியார் தொலைக்காட்சிகளில் நித்தம் நித்தம் பாடல்கள்

ஒளிபரப்பட்டுவிடுவதால் ஒலியும் ஒளியுமிற்கு வரவேற்பிருப்பதில்லை, அது போல புத்தகங்களை படிப்பது போல யாரும் வலைப்பதிவுகளை ஆழ்ந்து நிதானமாக முழுவதுமாக

படிப்பதில்லை, அதனால் நீளமான, தகவல்கள், புள்ளிவிபரங்கள் இருக்கும் பதிவுகளை ஆராய்ந்து படிப்பவர்கள் குறைவு அதனால் நீளம் சற்று அதிகமாக இருக்கும் பதிவுகள் சொல்ல

வந்தது முழுவதும் படிப்பவர்களுக்கு சென்று சேர்வதில்லை.

அடுத்ததாக பதிவர்களின் மீது விழுந்துள்ள முத்திரை, இவர்கள் இப்படித்தான் என்று குத்தப்பட்ட முத்திரையினால் பொது வாசகர்களும் ஒதுங்கி செல்கின்றனர்.

11:50 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://muthuvintamil.blogspot.com/2006/08/blog-post_20.html

//ஆனால் கலைஞரின் நிலைதான் பாவம் அதையும் சொல்லமுடியாமல் இதையும் சொல்லமுயாமல் எதாவது ஒன்று சொல்ல காங்கிரஸ் காரர்கள் இது தான் சாக்கு என (ஏற்கனவே மந்திரி பதவி தராததால் நொந்து போயிருக்கும் வேலையில்) சத்தம் போட்டு இங்கும் கவிழ்ந்து அங்கும் கவிழ்ந்து இரண்டும் கவிழ்ந்து
//
கலைஞர் பாவமாக எல்லாமில்லை, நல்ல வலுவாகத்தான் உள்ளார், மத்தியில் தான் கருணாநிதியின் ஆதரவு காங்கிரசிற்கு தேவை, ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரசு ஆதரவு இல்லையென்றாலும் ஏற்கனவே வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு ஆட்சியில் பங்கேற்க மாட்டோம் என்று கூறியுள்ள பாமக, கம்யூனிஸ்ட்கள் ஆதரவு மட்டுமே போதுமானது.... என்னார் அய்யா தினமலரில் இது உங்கள் இடம் பகுதியில் பிரசுரிக்கப்படும் கடிதங்களை அப்படியே நம்புவதை குறைத்துக்கொண்டாலோ அல்லது இ.உ.இ. பகுதி படிப்பதை குறைத்துக்கொண்டாலோ அவருக்கு இந்த குழப்பங்கள் ஏற்படுவது குறையலாம் :-) No offence please :-)

நன்றி

2:39 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://madippakkam.blogspot.com/2006/08/blog-post_21.html

லக்கிலுக் இந்த பதிவிற்கு என் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.... put your feet in customer shoes, அடிக்கடி என் முந்தைய துணைத்தலைவர் சொல்வது... இதை நீங்கள் இந்த விடயத்தில் முயற்சி செய்து பாருங்கள்...

11:22 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://pesalaam.blogspot.com/2006/08/blog-post_21.html

ஆஹா ஆஹா... பலே பலே.... சபாஷ் சபாஷ்...

//அரைச் சுதந்திரத்தில் பாதிக்கப்பட்டவன் கதறினால் காது கொடுங்கள். கண்ணை மூடிக் கொண்டு தேசபக்தியை முன் வைத்து வாந்தியெடுக்க வேண்டாம்.
//

இப்படி கட்டம் கட்டி மேற்கோள் காட்ட ஆரம்பித்தால் பதிவு முழுக்க காட்ட வேண்டும் எனவே இப்போதைக்கு இரண்டு வார்த்தை "நல்ல பதிவு"

4:42 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://karuppupaiyan.blogspot.com/2006/08/blog-post_23.html

//இப்பதிவின்மூலம் எதை நிரூபிக்க முயல்கிறீர்கள்?
//
எனக்கும் இதே கேள்வி தான், மொத்தத்தில் சொல்லப்போனால் இந்த பதிவு ஒரு இழுக்கு

9:51 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://pesalaam.blogspot.com/2006/08/blog-post_23.html

முதலிலேயே ஒன்றை சொல்லிவிடுகின்றேன், மிக அருமையான பதிவு... உங்களின் மகுடத்தில் ஒரு மணி...

சில சமயம் நாம் நினைப்பதை நமக்கு தோன்றியதை வேறு யாரேனும் சொன்னால் எப்படியிருக்கும் அப்படியிருந்தது இந்த பதிவை படித்தபின்

கவிதைகளுடன் தொடர்புள்ளவனுக்கு தொடக்கத்திலிருந்து நாளாக ஆக ஏற்படும் வளர்சிதை மாற்றத்தினை மிகச்சிறப்பாக எழுதியுள்ளீர்.

கவிதைகள் மீது ஒரு ஆச்சரியம் சிறிய வயதிலிருந்தே எனக்கும் உண்டு, முதலில் சந்தமும், சத்தமும் கவிதைகளில் பிடித்தது, அதே போல பலரையும் போல காதல் கவிதைகள் 'க'கர,'த'கர,'அ'கர சந்த சத்தங்கள் தான் கவிதையின் இலக்கணமாக தொடக்கத்தில் இருந்தது.

பிறகு ஏதேதோ மாறி
இப்போது எதுவும் கவிதைதான் அதற்கு எந்த இலக்கணமும் இல்லை, என்றளவில் வந்து நிற்கின்றது. கிட்டத்தட்ட இதைத்தான் நீங்களும் பதிவில் சொல்லியிருக்கின்றீர்.

//*தலித்தியக் கவிதைகளும், பெண்ணியக் கவிதைகளும் வெளிச்சம் பெறும் போதும், அதிர்வுகளற்று அவை விவாதத்திற்குள்ளாகும் போதும் கவிதைக்கான மாற்றமாக மட்டுமில்லாது அவை சமூக மாற்றத்திற்கும் கூட அடுத்த தளமா அமைகின்றன.
//
மிகச்சரி, குறிப்பாக சுகிர்தராணியின் கவிதைகள் ஒரே சமயத்தில் தலித்துகளின் பிரச்சினைகளையும் பெண்களின் பிரச்சினைகளையும் அலசுகின்றன.

பொதுவாக கதைகள், கட்டுரைகள் எல்லாம் எழுதியவர்களை கொஞ்சமேனும் பார்த்து படிக்கும் நான் கவிதையை மட்டும் அப்படி படிப்பதில்லை.

பொதுவாக மொழிபெயர்ப்பு கவிதைகளை அத்தனை விரும்பி படிப்பதில்லை, கவிதைக்கு சந்தமும், சத்தமும் முக்கியமென்று கருதியதின் எச்சமாகவும் இருக்கலாம், நமக்கு அந்த சூழ்நிலையை கற்பனை செய்வதில் ஏற்படும் சிரமமுமாக இருக்கலாம், ஆனால் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை அவரின் சிந்தனை, நம்பிக்கை மாற்றங்களை கவிதை மூலம் அறிந்ததென்றால் அது பாப்லோ நெரூதா கவிதைகள் தொகுப்பிலிருந்து.

இந்த மொழிபெயர்ப்பு கவிதைகளை பற்றி ஒரு வார்த்தை எழுதியிருந்தால் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்கியிருப்பீர்கள் இப்போது 100க்கு 99 மதிப்பெண்கள் தான் இந்த கட்டுரைக்கு.

6:13 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://pesalaam.blogspot.com/2006/08/blog-post_115632795667980732.html

//"நமக்கென்ன போச்சு?" என்னும் ஒதுங்கி வாழும் மனநிலை கிட்டத்தட்ட 'நல்லவர்களின் மனநிலை' ஆகிவிட்டது. அந்த 'நல்ல' மனநிலை பெரும்பான்மை இந்திய மனநிலை ஆனதுதான் வேதனை. சாலையில் அடிப்பட்டுக் கிடப்பவனை பார்ப்பதிலிருந்து, இன்னொரு நாட்டின் விவிவகாரம் வரையிலும் இதே மனநிலை தொற்றிக் கிடக்கிறது. தனக்கு வரும் வரையிலும் தலைவலி குறித்தான கவலையில்லை.
//
மணி நீங்கள் இத்தனை தெளிவாக சொல்லியிருப்பதற்கு இத்தனை நாட்கள் எனக்கு சரியான வார்த்தைகள் கிடைக்காமலிருந்தது, இன்று கிடைத்துவிட்டது, இன்னொரு விடயம் தெரியுமா மிகக்கொடுமையான நமக்குள்ளே சில போலி மதிப்பீடுகள் வைத்துக்கொண்டு நம்மை ஏமாற்றிக்கொள்கிறோம், அதில் ஒன்று கல்யாணத்திலிருந்து கருமாதி வரை எல்லாவற்றிலும் சாதியை வைத்துக்கொண்டு அதைப்பற்றி பொதுவில் மட்டும் பேசமாட்டோம், அதை பேசுபவர்கள் கெட்டவர்கள், சே...சே... என்ன இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்றொரு முத்திரை வேறு....

நட்சத்திர வாரத்தில் கலக்குகின்றீர் வாழ்த்துகள்...

6:20 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://kuzhali.blogspot.com/2005/04/blog-post_20.html

//பாகிஸ்தான் இன்று நம் மீது போர் தொடுக்காமல் இருப்பது நம் வல்லமையினால்தான்.//
குமரன் அவர்களுக்கு, போர்களின் முறை மாறி நிறைய நாட்களாகிவிட்டது, இனி மற்றவைகள் குமரனுக்கு மட்டுமல்லாமல் பொதுவில் சொல்வது...

இந்தியா பாக்கிஸ்தானை போர்களில் வென்றதற்கு ஏதேனும் அமானுஷ்ய சக்தியோ அல்லது இந்தியன் என்பதோ காரணம் என நினைக்கிறீர்களா? அப்படியென்றால் பாக்கிஸ்தானை வென்ற நம்மால் சீனா சீண்டிப்பார்த்தபோது அடிதானே வாங்கினோம், முன்பிருந்த போர் முறைப்படி அப்படியென்றால் இல்லை எங்கு கூட்டம் அதிகமோ அது வெற்றிபெரும்... ஆனால் இப்போது போர் முறை மாறிவிட்டது, அறிவிக்கப்பட்டது தான் போர் என்றில்லை, இரட்டை கோபுர இடிப்பும் போர்தான், பம்பாய் குண்டுவெடிப்புகளும் போர்தான், முன்பெல்லாம் கும்பல் இருக்கும் பக்கத்தில் போரின் வெற்றி இருக்கும், ஆயுதம் இருக்கும் பக்கத்தில் போரின் வெற்றி இருக்கும், இப்போது போர் முறை மாறிவிட்டதால் சிறிய சிறிய நாடுகள் கூட பெரும் சேதத்தை எதிரிக்கு விளைவிக்கலாம், சில ஆண்டுகளுக்கு முன் பாக்கிஸ்த்தானுடம் போர் அபாயம் ஏற்பட்டு நீங்கியதே, ஏன் இந்தியாவில் போரை ஆரம்பிக்க இயலவில்லை, ஏன் தயங்கினார்கள், அணு ஆயுதப்போரின் அபாயம் வரை சென்றது ஆனால் போர் நடக்கவில்லை, போர் ஆரம்பித்தால் இந்தியாவினால் பாக்கிஸ்தானுக்கு ஏற்படும் அழிவிற்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் இங்கேயும் ஏற்படும் அது தான் காரணம், பாக்கிஸ்தானின் அணு ஆயுத பலம் அது மேலும் ஒரு முறை இந்தியாவிடம் போரில் அடிபடுவதிலிருந்து தப்பித்தது...

பேச்சுவார்த்தை என்பது கிட்டத்தட்ட கட்டப்பஞ்சாயத்து தான், யார் பலவீனமானவர்களோ அவர்களுக்கு இழப்பு அதிகம், பேச்சுவார்த்தையில் இரு தரப்பிலும் உள்ள பலம் தான் யாருக்கு இழப்பு அதிகம், யாருக்கு இலாபம் அதிகம் என்பதை முடிவு செய்கின்றன...

ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான் என்ற தலைப்பில் இங்கே கிறுக்கியுள்ளேன்

7:00 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://lldasu.blogspot.com/2006/08/blog-post_23.html

//ஒரு கிறிஸ்தவனாக நான் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல நினைத்த ஒரு சட்டம் . கட்டாய மத மாற்ற சட்டம் . ஒரு போப் சொல்ல வேண்டியதை .. கிறிஸ்தவ மதகுருமார்கள் கடைபிடிக்க வேண்டியதை, ஜெயலலிதா செய்துள்ளார் .
//
எந்த சட்டத்தை ஜெயலலிதா அவர்கள் முறையானதற்கு மட்டும் உபயோகித்துள்ளார்?

நெடுமாறன், வைகோ மீதான பொடா வழக்கு.

நக்கீரன் கோபால் மீதான ஆயுததடைசட்டம், பொடா வழக்கு

செரீனா மீதான கஞ்சா வழக்கு

வளர்ப்பு மகன்.. ஓ அவர் இப்போ முன்னாளா அவர் மீதான கஞ்சா வழக்கு என எத்தனை எத்தனை வழக்குகள்.

பார்த்துங்க நீங்க அந்த நேரத்தில் ஊருக்கு போக உங்கள் பெயரில் நீங்கள் கையெழுத்து போட கிறுத்தவ பெயரை கையெழுத்தாக போட முயன்றதன் மூலம் கட்டாய மத மாற்ற பிரச்சாரம் செய்ததாக நீர் கூட உள்ளே போயிருந்திருப்பீர், உம்ம நல்ல நேரம் தப்பித்துவிட்டீர்...

7:32 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://holyox.blogspot.com/2006/08/142.html

ஏற்கனவே உங்களின் முந்தைய பதிவில் தேவையான அளவிற்கு பேசிவிட்டதால் இங்கே பேசுவதற்குக் ஒன்றுமில்லை, இருந்தாலும் கீழே நீங்கள் குறிப்பிட்டதற்கு மட்டும் ஒரு கருத்து

//அந்த சுதந்திரம் உலகில் எந்த நாட்டிலும் கிடையாது.நியூயார்க் 42ம் அவென்யூவில் நள்ளிரவில் பெண் அல்ல,ஆணே போனாலும் கற்பழிக்கபடுவான்.//
இந்த மாம்பழம் அழுகியிருக்கே இதை எப்படி வாங்குவது என்றால் அதோ பார் அந்த பலாப்பழம் கூடத்தான் அழுகியிருக்கிறது, இதோப்பார் இந்த வாழைப்பழம் கூடத்தான் அழுகியிருக்கின்றது என்கிறீர்கள், என் பிரச்சினை நான் வாங்காத பலாப்பழம் அழுகியிருப்பதோ, வாழைப்பழம் அழுகியிருப்பதோ அல்ல, என் பிரச்சினை நான் வாங்க வைக்கப்படும் மாம்பழம் அழுகியிருப்பது தான்...

//உலகில் அனைத்து மக்களும் நிம்மதியாக,சுதந்திரமாக வாழ்ந்த காலகட்டம் என எதுவுமே கிடையாது.//
மிகச்சரி

//போரிடுபவன் வாழும் உலகம் தான் என்றுமே இருந்து வந்திருக்கிறது.
//
எப்போது தான் சுதந்திரம் அடைந்துவிட்டோம், எனக்கு எல்லா உரிமைகளும் கிடைத்துவிட்டது என்று போலியாக கருத நினைக்கிறானோ அப்போது அந்த போரிடுபவன் போரிலிருந்து பின் வாங்குகிறான், அப்படி பின் வாங்கும்போது அவனை அடிமைப்படுத்துபவர்களுக்கு மிகவும் எளிதாக அமையும்.

முகமூடி என்ன நாரதர் கலகமோ?...

8:12 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://holyox.blogspot.com/2006/08/142.html
//இந்தியாவை உடைத்து தனித் தமிழ்நாடு கண்டு இதை எப்படி தீர்ப்பீர்கள்?//
கடுமையான குழப்பத்தில் நீங்கள் இருக்கின்றீர்...

இந்த பதில் ஏற்கனவே உங்களின் முந்தைய பதிவில் சொன்னது தான், மீண்டும் ஒரு முறை இங்கேயும்.

செல்வன் இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்ல முயற்சிக்கிறேன், இப்போது இந்திய தேசியத்தில் மொழி உரிமை இல்லை, சாதிக்கொடுமையினால் அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது ஆனால் மொழி உரிமை இல்லை என்றால் வேறு யாருக்கோ இருக்கிறது அதாவது தமிழுக்கு இல்லாத உரிமை இந்திக்கும், சம்ஸ்கிரத்தத்திற்கும் உள்ளது, எனவே இந்திய சுதந்திரத்தை இந்தி, சம்ஸ்கிரத விரும்பிகள் கொண்டாடுவார்கள், அதே சமயம் மொழி உரிமை கிட்டாத மற்றவர்கள் உதாரணத்திற்கு தமிழ் தேசிய ஆதரவாளர்கள் தமிழர்கள் அதை எம் மொழிக்கு இங்கு சுதந்திரம் இல்லாத போது எம்மால் இந்திய தேசிய சுதந்திரம் ஒரு போலி என்பார்கள், ஆனால் இந்தி சமஸ்கிரத்திற்கு அது வெள்ளையனிடமிருந்து கிட்டிய சுதந்திரம்.

சரி தமிழ்தேசியம் கிடைத்துவிட்டதால் மொழி உரிமை கிடைத்து விடுவதாக கொள்வோம், அப்போது சாதிக்கொடுமையால் அடிப்படை உரிமைகள் கிடைக்கப்பெறாத ஒடுக்கப்பட்டவர்கள் என்ன சுதந்திரம் தமிழ்தேசிய சுதந்திரம் அடிப்படை உரிமையே இல்லை எப்படி எம்மால் சுதந்திரம் கொண்டாட முடியும் என்பார்கள், இல்லை இல்லை இது சுதந்திரம் அதை கொண்டாடு என்றால் அவர்களால் கொண்டாட முடியாது....
சரி அதுவும் இன்னொரு தேசியத்தில் கிடைக்கிறது அங்கே திருநங்கைகளுக்கு கிடைக்காத பாலின அங்கீகாரத்தினால் அவர்கள் சுதந்திரத்தை மதிக்கமாட்டார்கள், ஏனெனில் அது அவர்களுக்கான சுதந்திரம் இல்லை, ஆதலால் தனக்கு எல்லாம் கிடைத்தால் அது சுதந்திரம், இல்லையென்றால் அது சுதந்திரமில்லாதது, கொஞ்சம் யோசித்தால் இது புரியும்,

இதற்கு நீங்கள் அப்துலகலாமை வைத்தெல்லாம் அளித்த பதிலுக்கு தான் அவர் பதிவில் முத்து விளக்கம் அளித்துள்ளார்... விதிவிலக்குகளே விதிகளாவதில்லை என்று.

//தமிழ் மொழிக்காக பல போராட்டங்களை செய்தோம்,இன்னும் பலவற்ரை செய்ய வேண்டியுள்ளது.அதை எல்லாம் மறுக்கவில்லை.ஆனால் மொழி உரிமை இல்லை,தமிழ் ஒடுக்கப்படுகிறது என்பதெல்லாம் மிக மிகைப்படுத்தப்ப்ட்ட கூற்று.
//
தமிழ்தேசியத்தில் இதற்காக போராடத் தேவையென்பதில்லை, அடிப்படையாக கிடைக்கும், அடிப்படையாக கிடைக்கும் உரிமைக்கே இன்று தமிழர்கள் இந்திய தேசியத்தில் போராட வேண்டியிருக்கின்றது,

தண்ணீர் தந்தால் தான் மின்சாரம் என்ற பண்டமாற்று முறைக்கு போகலாம் தமிழ்தேசியத்தில், இப்போதோ நீ மின்சாரம் தரணும் ஆனால் நான் தண்ணீர் தரமாட்டேன்... இது தான் இந்திய தேசியம், மேலும் இன்றைய நிலையில் எத்தனை பெரிய போர் வந்தாலும் பாக்கிஸ்தானுக்கும், பங்களாதேசுக்கும் நாம் தர வேண்டிய தண்ணீரை தந்தே ஆக வேண்டும் ஐ.நா. ஒப்பந்தப்படி, எதிரி பக்கத்து நாட்டுகாரனுக்கே இந்த நிலை, ஆனால் இந்திய(கன்னட) சகோதரர் உச்ச நீதிமன்றம் சொன்னாலும் தரமாட்டார், இப்போ சகோதரனா இருந்து தண்ணீர் இல்லாமல் சாவது முக்கியமா?...

ஓரிரு வார்த்தைகளில் தமிழ்தேசியத்தின் நியாயக்காரணிகளை விளக்குதல் இயலாது.... எனவே இப்போதைக்கு அப்பீட், மேலும் பங்கெடுத்தாலும் கூட முந்தைய பதிவில் எழுதியதை Copy & paste தான் செய்ய வேண்டிய நிலை... அதனால் அப்பீட்....

9:46 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://potteakadai.blogspot.com/2006/08/blog-post_24.html

சரியான நேர்மையான பதிவு

//அவர்கள் கைக்கஞ்சு வாய்க்குப்பத்து ஏன் கேட்கப் போகிறார்கள் அவர்களுக்கும் ஆண், பெண்ணைப் போன்று சமமாகப் பாவித்து தொழிற்கூடங்களிலோ அல்லது இன்ன பிற பணிகளிலோ வேலை கொடுத்தால்...
//
இடஒதுக்கீட்டிற்கு எதிரான உயர்சாதியினரை எதிர்த்து வைக்கும் அத்தனை வாதங்களும் இங்கே திருநங்கைகள் மற்றவர்கள் மீது வைக்கும் குற்றசாட்டிற்கு பொருந்தும், இது கருப்பு போன்றவர்களுக்கு ஏன் புரியவில்லை?

5:40 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://ravisrinivas.blogspot.com/2006/08/blog-post_25.html

ரவி கிரீமி லேயருக்கான வரையறை என்ன என்பது தெரிந்தால் சொல்லுங்கள், எனக்கு தெரிந்து 1998ல் ஆண்டுக்கு குடும்ப வருமானம் ஒரு இலட்சம் ரூபாயிற்கு மேல் இருந்தால் அந்த குடும்பம் கிரீமி லேயர்(அதாவது மாதம் ரூபாய் 8,333.33 அல்லது நாளொன்றுக்கு வருமானம் 277.77), அதே போன்று அப்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதாக கூறப்பட்டது ஆண்டு வருமாணம் 12,000 ரூபாய்க்கு குறைவாக அதாவது மாதம் ஒன்றிற்கு 1000 ரூபாய் அதாவது நாளொன்றுக்கு 33.33 ரூபாய், இன்றும் அதே அளவீட்டு முறை தான் கடைபிடிக்கப்படுகின்றதா கிரீமி லேயருக்கு? இன்று வரையறுக்கப்பட்டுள்ள கிரீமி லேயர் வரையறைகள் என்ன?

10:34 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://holyox.blogspot.com/2006/08/142.html

//தனித்தமிழ்நாடு என்போர் தமிழக மகக்ள் தொகையில் காலே-அரைகால் சதவிகிதம் கூட கிடையாது.
//
வெள்ளையர்களை எதிர்த்து சுதந்திர போராட்டத்திற்கான ஓரிரு முனகல் குரல்கள் வெளிவந்த ஆரம்பகாலங்களிலும் இதே போன்ற குரல்கள் எழுந்தன, யாரோ ஓரிருவர் தான் இப்படி பேசுகின்றனர் என்று, புதுச்சேரி ஆனந்தரங்கம்பிள்ளை அவர்களின் டயரியில் இது தொடர்பாக படித்ததாக ஞாபகம், கல்கி ஒரு நாவல் எழுதினாரே அதில் கூட இது மாதிரியான ஒரு உரையாடல் வந்ததாக ஞாபகம், ஆனந்தரங்கம்பிள்ளையின் காலம் கி.பி.1730, நெடுமாறனின் காலம் கி.பி.2006, என்ன 1730ல் ஓரிருவர் பேசியது 1947 ஆகஸ்ட் 15 ற்கு உண்மையானதற்கு ஆன காலம் இரண்டு நூற்றாண்டுகள், 2006லிருந்து இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் கூட ஆகலாம், என்ன அது நடக்கும் போது நீங்களும் நானும் இருக்க மாட்டோம்.

10:56 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://holyox.blogspot.com/2006/08/142.html

//தொலைநோக்கு பார்வை வேணும் தான்.அதுக்காக இப்படியா?:)))
//
கி.பி.1730-61 அன்று யாரோ சிலருக்கு இருந்த தொலைநோக்குப்பார்வை தான் 1947 ஆகஸ்ட் 15ல் உண்மையானது... 1730அன்று நகைச்சுவை என்று சிரித்திருப்பவர்கள் 1947ல் இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே...

11:38 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://thamizmanam.blogspot.com/2006/08/blog-post_23.html

இந்த விவாதங்கள் பதிவுகள் நீக்குதல் ஏன் இந்த பதிவை நீக்கவில்லை, அந்த பதிவை நீக்கவில்லை என்ன அளவுகோள் அது இது என்று விவாதிப்பதிலும் அது தொடர்பாக விளக்கமளிப்பதுவும் தமிழ்மண நிர்வாகிகளின் நேரத்தை விழுங்கும், மேலும் எல்லாவற்றிலும் வெளிப்படையாக செயல்படவேண்டுமென்கிற அளவிற்கு என் போன்ற சில(கவனிக்க சில என்கிற பதத்தை பயன்படுத்தியுள்ளேன்) பதிவர்களுக்கும் என் போன்ற சில வாசகர்களுக்கும் முதிர்ச்சியில்லை என்ற நிலையில் இது போன்ற விளக்கங்கள் விவாதங்கள் எத்தனை தூரம் தேவை என்பது எனக்கு புரியவில்லை...


தமிழ்மணம் எல்லாவற்றிலும் மிகவெளிப்படையாக செயல்படுகிறேன் அல்லது செயல்படவேண்டுமென்ற அளவிற்கு தமிழ்மணத்திற்கு எந்த கட்டயாமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை...

மேற்கூறியவை என் கருத்துகள் மட்டுமே, இதை தமிழ்மணநிர்வாகம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதும் இல்லாததும் அவர்களின் விருப்பம்.

நன்றி

9:53 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://imohandoss.blogspot.com/2006/08/blog-post_16.html

கதை வெளியான போதே சில பத்திகள் படித்துவிட்டு நீளம் கருதி இதை அவசரமாக படிக்க முடியாது, நிதானமாக படிக்க வேண்டுமென்று தள்ளி போட்டேன், இன்று தேடிப்பிடித்து மீண்டும் வந்து படித்தேன், மிக அருமையாக கதை வந்துள்ளது, நல்ல நடை, வித்தியாசமான கோணம், சரி தவறு என்று நீதிபதியாக மாறாத ஒரு நடை...

நன்றி

7:49 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://srisagajan.blogspot.com/2006/08/1.html

//அகதி என்றே தெளிவாக-உரமாகப் பிரகடனப்படுத்து!!இதிலிருந்துதாம் மற்றெல்லாவுரிமைகளும் வென்றெடுத்தாகவேண்டும்.//
இது எல்லாவிதமான அடக்குமுறைக்குட்பட்டவர்களுக்கும் பொறுந்தும், எப்பொழுது தம்மை உணராமல் தம் பிரச்சினைகளை மறைக்கின்றார்களோ அப்போது நிச்சயம் அடிமைத்தளையிலிருந்து விடுபடமுடியாது, இது தலித்,பெண் விடுதலையிலிருந்து எல்லோருக்கும் பொறுந்தும்....

7:41 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://srisagajan.blogspot.com/2006/08/2.html

நிறைய தகவல்கள் இந்த பதிவில்...
(பாருங்கள் மற்றவர்களின் துயரம் எனக்கு தகவல்களாக இருக்கின்றது... நிறைய புரியாத விடயங்களுள் எனக்கு இதுவும் ஒன்று)
தொடர்ந்து எழுதுங்கள்...

நன்றி

7:44 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://lldasu.blogspot.com/2006/08/blog-post_115686364401558426.html

//பூணூலை பதிலாக கழுத்தையே அறுத்திருந்தால் இந்த பிரச்சனை எப்போதோ முடிந்திருக்கும் என்பது என்போன்ற தோண்டர்களின் ஏகோபித்த கருத்தாகும்!!!
//
விடாதுகருப்புவிற்கு முற்றிவிட்டது என நினைக்கின்றேன், சொல்லவந்ததை மட்டும் சொன்னால் போய் சேரும், இது மாதிரியான பே(ஏ)ச்சுகள் நிச்சயம் நியாயமானது அல்ல...

6:55 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://mayavarathaan.blogspot.com/2006/08/378.html

சேகர்பாபு கருணாநிதி என்று பேசியதில் தவறு ஒன்றுமில்லை, ஆனால் சேகர்பாபு மனசில் முதல்வர் கருணாநிதி என்று கூறினால் கூட அவருக்கு முன்னாள் நடிகை அதாங்க முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவினால் ஆப்படிக்கப்படும்...

கடலூர் (தெற்கு என நினைக்கின்றேன்) மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட இருந்தவர் செல்வி ஜெயலலிதாவின் முன்னிலையில் கலைஞர் ஆட்சியில் போராட்டம் நடத்தி ஜெயிலுக்கு போய் வந்தேன் என சொல்ல ஆரம்பித்தவர் முடிக்க கூட இல்லை, என்னது கலைஞரா? கலைஞர்னா சொன்ன உக்காரு உக்காரு என கூறிவிட்டு மாவட்ட செயலாளர் பதவியை வேறு ஆளுக்கு தந்தவர்,(இது பத்திரிக்கையில் எல்லாம் வரலை என நினைக்கின்றேன், அந்த கூட்டத்தில் அவரோடு சென்ற நமக்கு வேண்டப்பட்டவங்க சொன்ன தகவல்) கலைஞர் என்று சொன்னதற்கே ஆப்பு வாங்கும் கட்சியில் இருக்கும் சேகர்பாபு வேறெப்படி பேசமுடியும்.

நன்றி

6:58 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://mayavarathaan.blogspot.com/2006/08/377.html

சொர்ணாக்கா கேரக்டருக்கும், முன்னாள் முதல்வர், முன்னாள் நடிகை, யாரோ செத்ததற்கு உடன்கட்டை ஏற முயலும் கேரக்டருக்கு, மூண்று பெண்களை உயிரோடு பேருந்தில் வைத்து கொளுத்தும் வில்லி கேரக்டருக்கு செல்வி.ஜெயலலிதா சரியா இருப்பாங்களே!!!

அப்புறம் தமிழ்நாட்டை ஆண்டவனும் காப்பாற்ற முடியாது அப்பாலிக்கா தைரியலட்சுமினு இப்பிடியும் அப்பிடியும் பல்டி அடிக்கும் இங்கே இருக்கும் போது ஒருதுளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு தமிழன்னைனு பேசிட்டு கர்நாடகால தமிழர்களை கொல்லும் கன்னட சலுவாலிய சங்கத்திற்கு இரண்டு லட்சம் நன்கொடை வழங்கி பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் கேரக்டருக்கு ரஜினிகாந்தையும் போட்டுடலாமே....

7:04 AM  
Blogger குழலி / Kuzhali said...

இப்போ மருத்துவர் இராமதாசுவிற்கு கொடுக்கலாம், ஆனால் என்ன பிரச்சினைனா சில பேர் கேட்பாங்க தேர்தலுக்கு தேர்தல் அவர்தான் கூட்டணி மாறுறாரு அதனால் அப்படி சொன்னா அவரை கூட்டணியில சேர்த்துக்குறாங்களே அவங்களை என்ன சொல்றதுனு கேள்வி எழும் ஆனாலும் கேள்வியே கேட்க முடியாதென்றால் தமிழனை கொல்லும் சங்கத்திற்கு அங்கே நிதி வழங்கிவிட்டு இங்கே தமிழன்னை என்று அய்யோக்கியத்தனம் செய்யும் கேரக்டருக்கு ரஜினியைவிட்டால் வேறு ஆளில்லை.... என்பதை இங்கே வலியுறுத்த விரும்புகிறேன்...

7:17 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://thoughtsintamil.blogspot.com/2006/08/69.html

தற்போதைக்கு தமிழகத்தில் 69% இடஒதுக்கீடே இல்லை, வெறும் 50% தான், 69% ஒதுக்கீடு செய்து பின் மீண்டும் OCக்கு மட்டும் இடங்களை அதிகமாக்கி கடைசியில் கிடைப்பது 50% இடஒதுக்கீடு மட்டுமே....

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் இயற்றப்பட்ட சட்டம் உச்சநீதிமன்றங்களினால் மாற்றப்படுமெனில் அல்லது நிராகரிக்கப்படுமெனில் அப்போது நடப்பது மக்களாட்சியா நீதிமன்ற ஆட்சியா?

இந்தியாவில் நடப்பது உச்சநீதிமன்ற ஆட்சியா? மக்களாட்சியா? (அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படவர்கள் ஆட்சியா) என்ற குழப்பம் எனக்கு பல நேரங்களில் வருகின்றது... தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யோக்கியதை தனிக்கதை....

3:28 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://ravisrinivas.blogspot.com/2006/08/69.html

பத்ரி பதிவில் இட்ட பின்னூட்டத்தின் ஒரு பகுதி இங்கேயும்...

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் இயற்றப்பட்ட சட்டம் உச்சநீதிமன்றங்களினால் மாற்றப்படுமெனில் அல்லது நிராகரிக்கப்படுமெனில் அப்போது நடப்பது மக்களாட்சியா நீதிமன்ற ஆட்சியா?

இந்தியாவில் நடப்பது உச்சநீதிமன்ற ஆட்சியா? மக்களாட்சியா? (அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படவர்கள் ஆட்சியா) என்ற குழப்பம் எனக்கு பல நேரங்களில் வருகின்றது... தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யோக்கியதை தனிக்கதை.... அதே போல நீதிபதிகளின் யோக்கியதையும் தனிக்கதை என்பது வேறுகதை...

நீதிமன்றம் என்றாலே எப்படியும் தீர்ப்பு இடஒதுக்கீட்டிற்கு எதிராகத்தானே வரப்போகின்றது பிறகெதற்கு பெஞ்ச், டேபிள் எல்லாம்....

5:27 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://thoughtsintamil.blogspot.com/2006/08/69.html

//ஆமா, மரம் வெட்டி கட்சி செஞ்சா, மக்களாட்சி, மத்தவன் செஞ்சா அது மக்களாட்சி இல்லை...போங்கய்யா போயி, காட்டுல காஞ்ச சுள்ளி பொருக்குறவண்ட போயி உங்க சமூக நீதியப் பேசுங்கய்யா.. //

நடப்பது மக்கள் ஆட்சியா? உச்சநீதிமன்ற ஆட்சியா? என்ற உண்மையை கேட்டால் பொத்துக்கொண்டு கிளம்பிவரும் ஆட்களே மரம்வெட்டி அப்படியே கஞ்சியும், சாராயமும் காய்ச்சி குடித்துக்கொண்டு இடுப்பில் துண்டைக்கட்டிக்கொண்டு இங்கே முதுகு வளைந்து அடிபணிந்து கூலிக்கு நின்று பின் அப்படியே சேரிப்பக்கம் போய் ஏய்.. என சத்தம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும், அப்போது தானே சேரியில் இருப்பவங்களையும் தட்டி வைத்த மாதிரி ஆனது மரம்வெட்டிகளையும் மட்டையாக்கியே வைத்த மாதிரி ஆனது அப்படியே வர்ணாசிரமத்தையும் காப்பாற்றிய மாதிரியும் ஆனது, மரம்வெட்டிகளெல்லாம் வேறுமாதிரி யோசிக்க ஆரம்பித்தால் வர்ணாசிரமத்தை காப்பாற்றும் காவல் நாய் வேலையை எவன் பார்ப்பது என்ற வருத்தமோ? பேச வந்துட்டாங்கய்யா...

சனநாயகத்தின் நான்கு தூண்களில் ஊடகத்தூணை 75%மேல் ஆக்கிரமித்து, நீதிமன்ற தூணை கிட்டத்தட்ட முழுவதும் ஆக்கிரமித்து வேணுகோபால்கள் மாதிரி ஆட்கள் அரசு இயந்திர தூணையும் ஆக்கிரமித்து சமூகநீதிக்கு எதிராக இருக்கும்போது வேறு வழியே இல்லாமல் சமூகநீதிக்கு ஆபத்பாந்தவன்களாக இருப்பது மரவெட்டி அரசியல்வாதிகளும், ஊழல் அரசியல்வாதிகளும் தான்.... என்னை பொறுத்தவரை மற்ற மூன்று உயர்சாதி வெறி ஆதிக்கம் கொண்டவர்களின் தூண்களை விட அரசியல்வாதிகள் நிரம்பியிருக்கும் தூண் எவ்வளோ பரவாயில்லை...

6:01 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://thoughtsintamil.blogspot.com/2006/08/69.html

//இட ஒதுக்கீடு கூட எல்லோரும் பெற்று தமிழ் சமூகத்து நீதி சிறப்பாய் வாழவேண்டும் என்று 9 நீதிபதிகள் சொல்வார்களா?
//
நீதிமன்றம் என்றாலே எப்படியும் தீர்ப்பு இடஒதுக்கீட்டிற்கு எதிராகத்தானே வரப்போகின்றது பிறகெதற்கு பெஞ்ச், டேபிள் எல்லாம்....

அரசியல்வாதிகளின் யோக்யதை எப்படி தனிக்கதையோ அதே போல ஏன் அதையும் விட நீதிபதிகளின் யோக்கியதையும் தனிக்கதை என்பது வேறுகதை...

6:09 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://periyaarr.blogspot.com/2006/08/blog-post_30.html

// சரித்திரத்தில் பார்ப்பனீயம் இப்படி சீர்திருத்தத்திற்காக போராடியவர்களை கடவுளின் அவதாரம் என பார்ப்பனீய தத்துவத்தில் உள்ளடக்கி நீர்த்து போக வைத்த வரலாறு மறந்திருக்கலாம். புத்தர், நந்தனார், நாராயணகுரு, முத்து குட்டி சாமி என அந்த மாமனிதர்களின் பட்டியல் நீளமானது. தனக்கு எதிராக புரட்சி செய்பவர்களை அவதாரமாக்கிவிட்டால் அவர்களது கொள்கை, போராட்டம் மறைக்கப்படும் என்பது பார்ப்பனீய தந்திரம். அந்த தந்திரத்தை பெரியார் விடயத்தில் சிறிது சிறிதாக நடைமுறைப்படுத்த முயல்கிறார்களா? அது பெரியார் விடயத்தில் வெற்றியடைவது அவ்வளவு எளிதானதல்ல என்பதை காலம் உணர்த்தும்.
//
எப்படிங்க... இரண்டு மாதங்களுக்கு முன் இதே கருத்தை வைத்து ஒரு உரையாடல் கட்டுரை எழுத ஆரம்பித்தேன், இன்னமும் அது முடியவில்லை அதே கருத்தை இங்கே சொல்லியிருக்கின்றீர்....

நன்றி

7:06 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://idlyvadai.blogspot.com/2006/09/8.html

4:05 AM  
Blogger குழலி / Kuzhali said...

நன்றிக்கு நன்றி இட்லிவடை, உங்களை மாதிரி 10 ஆளுங்க இருந்தா என்னை மாதிரி ஒரு ஆளு கூடவா இல்லாமலிருப்பாங்க.....

4:15 AM  
Blogger குழலி / Kuzhali said...

//இன்று மாலை ஒரு 'நன்றி துக்ளக்..." என்று அப்டேட் செய்கிறேன்.
//
ஓ இது துக்ளக் சரக்கா? ஆனாலும் இட்லிவடை 49.5% ல அந்த கலக்கு கலக்கியிருந்திங்களா... அதனால் துக்ளக்குக்கும் இட்லிவடைக்கும் வித்தியாசம் தெரியாம போயிடுச்சி இட்லிவடை அப்பவே துக்ளக் ரேஞ்சுக்கு போயிட்டிங்க :-)

4:22 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://srisagajan.blogspot.com/2006/09/blog-post.html

//நடுவீதியில் பத்திரிகைத் துண்டு பொறுக்கி,கழிவுக்குள் உணவு தேடித் தேசத்தின் குழந்தை அவலப்பட நாம் வல்லரசுக்கனவு காண்போமா?வந்திடுமா தன் நிறைவு?தந்திடுமோ இந்தத் தேசம் தக்கவொரு வேலை?கிடையாது!
//
எல்லோரும் கனவு காண்போம்... ஆம் கனவு மட்டுமே சுகமானது நிசம் சுடும், உண்மை சுடும், கனவு மட்டுமே சுகமானது ஆதலால் வல்லரசு கனவு காண்போம் குடியரசுதலைவர் கலாம் சொன்னது போல்...

3:38 AM  
Blogger குழலி / Kuzhali said...

உண்மை கசக்கும் ஆம் இந்த நட்சத்திர வார பதிவுகள் பல உண்மை பேசியதால் கசந்தது, சோகை இழையோடினாலும் கூட பல புதிய கோணங்கள் விடயங்கள் படித்தவர்களுக்கு கிடைத்திருக்கும்.... நட்சத்திர பதிவுகளுக்கு நன்றி

3:42 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://copymannan.blogspot.com/2006/08/blog-post_30.html

நெருப்பு சிவா மற்றும் வெட்டிப்பயல் அவர்களுக்கு, நீங்கள் இந்து மதம் பற்றி தெரிந்து கொள்ளவிரும்புவதால் என்னாலான ஒரு சுட்டி தருகின்றேன், அதில் 4 பாகங்களாக உள்ளது, அவர் 30 ஆண்டுகளாக தத்துவவியலில், அதாங்க ஒலகத்துல உள்ள எல்லா தத்துவங்களையும் (தத்துவங்கள் எனும்போது அதில் மதங்களும் உள்ளடங்கியதே) பேராசிரியராக பணியாற்றியவர், கொஞ்சம் பொறுமையாக எந்த முன் முடிவுகளும் இல்லாமல் கேட்டுப்பாருங்க.... ஏதாவது புரியலாம்...

அந்த சுட்டி இங்கே

6:47 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://thoughtsintamil.blogspot.com/2006/08/69.html

//நீதிமன்றங்களின் மறுபரிசீலனை (judicial review) அதிகாரம் ஒன்றே
//
பிரபு நீதிபதிகளின் நீதிபரிபாலனை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, சாதி வெறுப்பு விருப்பின்றி நடந்துகொள்ளப்படுமெனில் யாருக்கும் எந்த பிரச்சினையுமில்லை, உங்களது கருத்துபடி நீதிமன்ற நீதிபதிகள் புனிதர்களாக இருக்க வேண்டிகள், ஆனால் நீதிபதிகளும் நீதிமன்றமும் பச்சை சாதி வெறியோடு உயர் ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக இடஒதுக்கீட்டு, அதற்கு எதிரான எய்ம்ஸ் மருத்துவர்கள் வேலை நிறுத்தம், அர்ச்சகர் பிரச்சினையிலிருந்து பல தீர்ப்புகள் ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றதே... அப்படி இருக்கும் பட்சத்தில் மக்காளாட்சி மன்றங்களில் சமூகநீதிக்காக ஏற்படுத்தப்படும் சட்டம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும்போது நீதிமன்றங்களை நான் எந்த ஹிட்லருடன் எந்த நாஜிக்களுடன் ஒப்பிடுவது... மற்றபடி நீதிபதிகளின் நீதிமன்றத்தை தாண்டிய அதிகாரத்தை பற்றி எமக்கு கவலையில்லை....

6:11 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://kaalangkal.blogspot.com/2006/09/blog-post.html

//இதில் சன் டிவி 4 வதாக சேர்க்காமல் விட்ட தலைப்பு 'குடும்பப் பெண்களை குறிவைக்கும் மெகா தொடர்கள்' என்பதை சமயோஜிதமாக விட்டுவிட்டது
//
கோவி.கண்ணன் உங்களுடைய இந்த பதிவில் இந்த வரிகளுடன் உடன்படுகின்றேன், அரட்டை அரங்கம் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டே இருக்கும் நான் அப்படியே கேட்டுக்கொண்டே மற்ற வேலைகளை செய்துகொண்டிருப்பேன், அப்படி தொடர்ந்து கொண்டிருந்த போது சாலமன் பாப்பையா, ராஜா நடத்திய அரட்டை அரங்கம் விசுவின் அரட்டை அரங்கத்தோடு இணைசெய்து பார்க்கும்போது perfection சற்று குறைவாக இருந்தது, ஆனால் சில catching அந்த அரட்டை அரங்கத்தில் இருந்தது, மேலும் சன் டிவியின் செலக்டிவ் அம்னீசியா பற்றியும் இன்னும் விசுவின் அரட்டை அரங்கத்திற்கும், சாலமன் பாப்பையா அரட்டை அரங்கத்திற்கும் மற்றும் சில விடயங்களையும் பதிவாக எழுத இருந்தேன், இங்கே பின்னூட்டத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் நான் என்ன ஆவது? அதான் பிறகு பதிவு போடுகின்றேன்.

11:07 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://thoughtsintamil.blogspot.com/2006/09/et-al.html

//1. பஞ்சாயத்துக்கு சரியான தேர்தல் நடந்து தலித் ஒருவர் தொடர்ந்து தலைவராக இல்லாவிட்டால் இந்த கிராமங்களில் எந்தவிதமான வசதிகளையும் அரசு செய்து கொடுக்காது. ஏற்கெனவே கொடுத்துவந்த வசதிகளை அரசு நிறுத்திவிடும்.

தண்ணீர் வசதிகள் கொடுக்கப்பட்ட மாட்டாது. ரேஷன் கடைகளில் நியாய விலைப் பொருள்கள் கிடைக்காது. அரசுப் பேருந்துகள் இந்தப் பக்கம் வரமாட்டா. வேளாண்மைக்கு அரசு இலவச மின்சாரம் கொடுக்காது. விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்யாது.

மொத்தத்தில் economic embargo.//
நிச்சயமாக இது செய்தால் நன்மை கிடைக்கும், இதே மாதிரியான தீர்வைத்தான் நானும் நண்பர்களுடன் பேசும்போது சொல்லியிருந்தேன்....

5:44 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://thoughtsintamil.blogspot.com/2006/08/69.html

//He sounds like
a PMK worker who worships Ramadoss
and his family. Edit
//
கடைசியாக இங்கே தான் வந்து நிற்பார்கள், மறுத்து பேச நியாயங்கள் எதுவுமில்லாத போது....

நன்றி

5:50 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://thoughtsintamil.blogspot.com/2006/09/vs.html

//தமிழகத்தைப் பொருத்தவரையில் திருமாவளவன், கிருஷ்ணசாமி ஆகியோர் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பற்றி என்னென்ன கருத்துகளை முன்வைக்கிறார்கள் என்று எங்காவது வெளியாகியுள்ளதா?
//
திருமா அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உள்ளதாகவே தெரிகின்றது, சமீபத்தில் நடைபெற்ற கூட்டங்களில் அவர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை ஆதரித்து பேசியுள்ளார், ஏதோ ஒரு தினசரியின் இணையதளத்தில் தான் படித்தேன், முடிந்தால் தேடி சுட்டி தருகின்றேன், மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களின் கருத்து பற்றி எனக்கு தெரியவில்லை, நீங்கள் அளித்த சுட்டிகளை இன்னும் படித்து முடிக்கவில்லை, பொறுமையாகத் தான் படிக்க வேண்டும், 27% இடஒதுக்கீடு என்பதே OBC பட்டியலில் உள்ள சாதிகள் எண்ணிக்கையை பார்க்கும்போது குறைவுதான் என்றபோதும் ஒப்பீட்டளவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடு அளவிற்கு குறைவாகவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது, இது சரியானதும் கூட என எனக்கு தோன்றுகின்றது... ஏனெனில் வர்ணாசிரம அடுக்குமுறை சமூகத்தில் தலித்களைவிட மேலே தான் பிற்பட்டவர்கள் இடம் உள்ளது, அவர்களும் தலித்களுக்கு இணையாக கேட்கக்கூடாது, அதே போல் உடனே அவர்களை முற்பட்டவர்களுடனும் இணை வைத்து பார்க்க கூடாது... ஏற்கனவே என் பதிவில் இட்ட ஒரு பின்னூட்டம் கீழே

http://www.dinamalar.com/2006aug22/general_tn28.asp

தினமலர் செய்தியில் பொறியியல் படிப்பில் காலியாக உள்ள 16,440 இடங்களில் பெரும்பாலும் MBC, SC, ST யாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

http://www.annauniv.edu/tnea06/rama21.doc

CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434

இலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது, 31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி 20% MBC யிலோ 3804 இடங்கள் காலி 18% SC யிலோ 4569 இடங்கள் காலி,

இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் MBCயைவிட குறைவு.

வர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.

7:03 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://thoughtsintamil.blogspot.com/2006/09/et-al.html#comments

//இந்தியா என்ன ஹிட்லர் ஆட்சி புரியும் நாடா, தன் மக்கள் மீது ராணுவத்தை ஏவி விட?
//
தன் மக்களின் மீது அரசாங்கம் அடக்குமுறையை ஏவுவதற்கு ஹிட்லர் தான் ஆட்சி செய்ய வேண்டுமென்பதில்லை, 1987ல் காவல்துறை வடமாவட்டங்களில் வன்னியசங்க போராட்டத்தின் போது நடத்திய வெறியாட்டங்கள், வாச்சாத்தி கிராமத்தில் நடந்த அரச வன்முறை இவைகள் தமிழ்நாட்டில், காஷ்மீர், பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்கள் இங்கெல்லாம் தம் மக்கள் மீதுதான் இராணுவம் ஏவப்பட்டது, அப்போதெல்லாம் ஹிட்லர் ஆட்சி புரியவில்லை

//விவசாய கூலிகளாக இருப்பதால் தானே அவர்கள் பயப்படுகிரார்கள்?தலைக்கு இரண்டு ஏக்கர் தருகிரேன் என்ற அரசு,இந்த கிராமத்து தலித்துகளுக்கு மட்டும் 10 ஏக்ரா நஞ்சை நிலமாக தரட்டும்.தலித் குழந்தைகளுக்கு இலவச உயர்கல்வி அளிக்கட்டும்.10 ஆண்டுகளில் தலித்துகள் மேலே வந்துவிடுவார்கள்.அப்புரம் நிரந்தரமாக அவர்கள் தான் ராஜா.
//
செல்வன் மேலவளைவு கேள்விப்பட்டிருப்பீர்கள், அங்கே முருகேசன் உட்பட 6 தலித்கள் ஆதிக்க சாதியினரால் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டனர், காரணம் தலித்தான அவர்கள் அங்கே பஞ்சாயத்து தலைவராக இருந்தார் என்பதுவே, கொலைசெய்யப்பட்ட இவர்கள் பிழைப்புக்காக அந்த ஊர் ஆதிக்க சாதியினரை நம்பி இருந்ததில்லை.... பிரச்சினை வெறும் பொருளாதாரத்தில் மட்டுமில்லை....

6:46 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://madhumithaa.blogspot.com/2006/09/save-india.html

திறந்தவெளி சந்தை மற்றும் திறந்த வெளி பொருளாதார கொள்கையினால் பொருட்கள் தாராளமாக கிடப்பதாகவும், இந்தியாவின் பொருளாதாரம் உச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பலர் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் இப்படியெல்லாம் நீங்கள் எழுதுவது உள்நோக்கம் கொண்டது :-)

11:06 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://wethepeopleindia.blogspot.com/2006/09/blog-post.html

//ராக்ஷ்ச ராஜாவான மஹாபலி ஊழல், திருட்டு, பசி, பட்டினிசாவு என எந்த ஒரு கஷ்டங்களும் இல்லாமல் கேரளாவை ஆண்டுவந்த ராஜா
//
இத்தனை சிறப்பு மிக்க நல்ல ஆட்சி அளித்த ராஜாவை ஏன் விஷ்ணு வாமன அவதாரம் கொண்டு அழிக்க வேண்டும்? நல்லாட்சி அளிக்கும் ராசாவே ஆனாலும் அவன் ராட்சச வம்சத்திலிருந்து வந்தவனெனில் விஷ்ணு அவதாரம் எடுத்து அழிப்பார்... ஏனெனில்

ராட்சச வம்சம் = ______

fill up the blanks

சொல்ல மறந்துட்டேனே தமிழர்களுக்கும் பொங்கல் என்றொரு பண்டிகை உண்டு, அது எல்லோருக்கும் பொதுவானது

2:03 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://gilli.in/2006/09/05/september-guest-column-by-idly-vadai/

//* ஈழம், பெரியார், குஷ்பு, திராவிடன், பார்பான் போன்ற உசுப்பி விடும் பதிவுகளை யார் எவ்வளவு நன்றாக எழுதினாலும் சேர்க்கக்கூடாது.//
அது சரி.... ஆக மொத்தத்திலே எப்படியானாலும் சில விடயங்கள் பொதுத்தளத்தில் வரவேக்கூடாது.... பொதுதளத்தில் விவாதிக்கப்படக்கூடாது, இதைத்தானே இன்று வெகுசன ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன...

நான் பார்த்தவரையில் இட்லிவடை சொன்ன இதை ஏற்கனவே கில்லி.இன் கடைபிடித்துவருகிறது என்றே நான் கருதுகிறேன்.

5:40 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://gilli.in/2006/09/05/september-guest-column-by-idly-vadai/

//(All opinions expressed here are personal views of the author). //
என்று தெளிவாகவே சொல்லியிருப்பதால் வைக்கப்பட்ட விமர்சனம் கில்லி.இன் மீதானது அல்ல, கட்டுரையில் உள்ள கருத்தின் மீது…

//குழலி, ஒரு விஷயத்தைப் பேசினாலோ/எழுதினாலோ/சுட்டிக் காட்டினாலோதான் அந்த விஷயத்தின் மீது அபிப்ராயம் இருக்கிறது என்று அர்த்தமில்லை. கண்டுகொள்ளாமலிருத்தலும் ஒரு சங்கேதம் தான்.
//
பிரகாஷ், கில்லி.இன் எதை கண்டுகொள்ள வேண்டும், எதை கண்டுகொள்ளக்கூடாது என்பதை நான் சொல்வதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை, கண்டுகொள்வதும் கண்டுகொள்ளாததும் தனிப்பட்டவர்கள் / நிறுவனங்களின் நம்பிக்கை, கில்லி.இன் எப்படி செயல்படலாம் என இந்த கட்டுரையாளர் சொன்னதில் ஒரு விடயத்தை நான் கில்லி.இன் னில் மேய்ந்ததை வைத்து என் மனதிற்கு பட்டதை சொல்லிவிட்டேன், அவ்வளவே…. தமிழ்மணத்திலேயே இது ஏன், அது ஏன் இது எதற்கு இப்படி, அது எதற்கு எப்படி என்று எல்லோரும் கேள்விகேட்பதை என்னளவில் விரும்பவில்லை அதானாலேயே கட்டுரையாளரின் கீழ் கண்ட கருத்தை முழுமையாக ஏற்கிறேன்.

//வலைப்பதிவுகளை நீக்கவும்/சேர்க்கவும் கில்லி கோஷ்டிக்கு முழு அதிகாரம் இருக்க வேண்டும். ஜனநாயகம் என்று ஜல்லி இருக்கவே இருக்க கூடாது.//

நன்றி

6:58 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://aaththigam.blogspot.com/2006/09/blog-post_05.html

இதை எழுதியதற்கு எழுதாமலே இருந்திருக்கலாம்,... மனுதர்மத்திற்கும், சாதிய சாக்கடைக்கும் வக்காலத்து வாங்கும் இந்த பதிவிற்கு என் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்...

6:22 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://aaththigam.blogspot.com/2006/09/blog-post_05.html

//வா! புதியதோர் உலகம் காண்போம்!
பகையுணர்வின்றி அங்கு வாழ்வோம்!//

நிச்சயமாக ஆனால் அதற்கு முன் சாதியும் வர்ணாசிரமும் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு நிவாரணம் இல்லாமல் ஏற்படுத்தப்படும் புதிய உலகம் எப்படி இருக்கும்... உதாரணமாக நன்றாக சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து கொழுத்த ஒருவன், அவனுக்கு அடிமை சேவகம் செய்து நோஞ்சானாக மற்றொருவன், திடீரென ஒரு நாள் இருவரும் ஒன்று இரண்டுபேரும் ஓட்டப்பந்தயத்தில் ஒன்றாக ஓடுங்கள், இது புதிய உலகம் என்று சொன்னால் என்னாவது? முதலில் நிவாரணம் வேண்டும், இல்லையென்றால் புதிய உலகம் ஒருதலைபட்சமான உலகம்...

//மேல்சாதியனரும், ஒடுக்கப்பட்டசாதியினரும் ஒருவருக்கொருவர் இன்றைய நாளில் பேசிக்கொள்வது போல உருவகப்படுத்தி இருக்கிறேன்.
//
//அவரவர்க்கு இதுவென
நீயே சாத்திரம் அமைத்தாய்!
ஆம்! மனுவும் நம்மில் ஒருவனே!
அவரவர் தத்தம் கருமம் செய்தால்
நானிலம் பயனுற வாழும் என்னும்
விதியினை வகுத்ததும் நாமன்றோ!
நாமனைவரும் இந்துவன்றோ!
//
நானிலம் பயனுற வாழுமா? ஒரு கேவலமான மனிதர்களை சுரண்டும் மனுதர்மத்திற்கு, சிலரை உயர்த்தி சிலரை தாழ்த்தி சிலருடைய நன்மைக்காக உருவான மனுநீதிக்கு இந்த வரிகள் வக்காலத்து வாங்குவதாகவே நான் கருதுகிறேன்.

//அந்தக் காலத்தில் ஒரு சில சமூகத் தேவைகளுக்காக எழுதி வைத்தது அது.//
இது உங்கள் பின்னூட்டத்தில், மனுதர்மத்தை எதற்காக அந்த காலத்தில் சில சமூகதேவைகளுக்காக எழுதி வைத்தது என்று வக்காலத்து வாங்க வேண்டும்??

இப்போதும் சொல்கிறேன், இந்த கவிதை மென்மையான வார்த்தைகளால் மனுநீதிக்கு வக்காலத்து வாங்கிய கவிதை, இப்படியான எல்லாவிதமான சகல வித்தைகளையும் கடைபிடித்துதான் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாகியும் புத்தன் முதல் எத்தனையோ பேர் போராடியும் இன்னும் வர்ணாசிரமத்தின் ஒரே ஒரு முடியை கூட பிடுங்க முடியவில்லை...

6:03 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://aalamaram.blogspot.com/2006/09/blog-post_06.html

//புரட்டுக்கதைகளில் மயங்கி
தொலைத்த தலைமுறைகள் போதும்
பொல்லாதவற்றை சொல்லாதே
இன்னும் மதமென்று!
நாங்களும் இந்துவென்று
எம்மையும் சேர்த்து வைத்து
சாக்கடையில் நிறுத்தாதே!
போதும் இந்த பொல்லாத நாடகம்!
//
சாட்டையடி வரிகள்

எப்படி இத்தனை நாள் வர்ணாசிரமம் நிலைத்துள்ளது என்ற பல முறை நான் ஆச்சரியப்பட்டதுண்டு, அது எப்போதும் தனக்கான் புதுப்புது வேடங்களையும், உத்திகளையும் பூண்டு தம்மை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது தெள்ளத்தெளிவாக புரிந்துகொண்டேன்

7:11 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://piditthathu.blogspot.com/2006/09/blog-post_07.html

//பின் தொடரும் நிழலின் குரல் என்ற தலையணை பருமனில் ஒரு நாவல். முழுக்க கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நாவல். வெளிப்படையான மூர்க்கமான தாக்குதல். கூச்சநாச்சமற்ற வெட்கமற்ற முரட்டுத் தாக்குதல்.
//
இந்த நாவல் தொடர்பான இந்த வார்த்தைகள் முழுக்க முழுக்க உண்மை, பல நேரங்களில் கதாப்பாத்திரத்தை தாண்டி(overlap) ஜெயமோகன் வெளிப்படுகிறார், ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கதாபாத்திரம் பேசுகிறது "நம் கீதையில்" சொல்லியிருக்கிறதே என்று, கம்யூனிசத்தின் லேசான தாக்கம் உள்ளவன் கூட நம் கீதை என்று சொல்ல மாட்டான், இந்த நாவலை படிக்கும் போது எனக்கு இன்னொரு புத்தகம் நினைவுக்கு வந்தது, அந்த புத்தகத்தின் பெயர் "எங்கே பிராமணன்?" துக்ளக். சோ. ராமசாமி அவர்கள் எழுதியது, அதிலும் முழுக்க முழுக்க slimy logic, அதே போலத்தான் இந்த புத்தகமும் இருந்தது, சோ அவர்கள் கம்யூனிசத்தை விமர்சித்து சொல்ல சொல்ல ஜெயமோகன் அவரின் வார்த்தைகளில் எழுதினால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கும் பின் தொடரும் நிழலின் குரல்.

9:20 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://kumizh.blogspot.com/2006/09/blog-post.html

//குழலியின் பதிவு ஒன்றில் முகமூடியின் பதிவைப் புறக்கணிக்கச் சொல்லி நான் எழுதிய பின்னூட்டத்திற்கு பதிலாக//
அன்று சுந்தரமூர்த்தி அவர்கள் சொன்னது எத்தனை உண்மை என்பது பிற்பாடு புரிந்தது, அலைகழித்து ஆற்றலை வீணாக்கும் தந்திரங்களும்உத்திகளும் பல காலங்களாக நடந்து கொண்டிக்கின்றது, தந்திரங்கள் என்னும் போதே புதியவர்களுக்கு யாரேனும் சொன்னால் உடனே தெரியும் இல்லையென்றால் கொஞ்சம் காலமாகும் பட்டு தெரிந்துகொள்ள, அது ஆட்டுக்குட்டியாக இருந்தாலும் சரி குழலியாக இருந்தாலும் சரி, இந்த இடத்தில் சுந்தரமூர்த்தி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்....

//ஓர் அமைப்பில் இருந்த ஒருவர் சட்டச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார் என்பதற்காக அந்த அமைப்போடு சம்பந்தப்பட்டவர்கள், அவர்களுக்குத் தெரிந்தவர்கள் என்று மெக்கார்த்தித்தனமாக யாராவது பட்டியல் போட விரும்பினால், //
இதெல்லாம் புதுசா என்ன? என்னை பொறுத்தவரை புரிந்தவர்களுக்கு உங்களுடைய இந்த பதிவே தேவையில்லை, நீங்கள் சுட்டுபவர்களுக்கு இன்னுமெத்தனை பதிவெழுதினாலும் புரியாது ஆனாலும் குட்டையை குழப்பி மெக்கார்த்தியிசம் செய்பவர்களைக் கண்டுகொள்ளவாவது இந்த பதிவு தேவையே....

நன்றி

9:45 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://balaji_ammu.blogspot.com/2006/09/3.html

//சற்று பின்னோக்கிப் பார்ப்போம். ஐஐடிகளில் 1973-இல் (டோண்டுவை பொருத்தவரை, சமீபத்தில்!) SC / ST மாணவர்களுக்கு 22.5% இடஒதுக்கீடு அமலுக்கு வந்தபோது , JEE தேர்வில் பத்துக்கும் குறைவான மதிப்பெண்கள் வாங்கியவர்களுக்கும், Chandy கமிட்டியின் பரிந்துரைப்படி,
//
பின்னோக்கி பார்ப்பது இருக்கட்டும், இன்றைய நிலை என்ன? இப்போதும் ஒன்றுமே தெரியாது மக்குகளை இட ஒதுக்கீட்டில் சேர்ப்பதில்லை, சூழல் குடும்ப சூழல், மற்றைய சூழல்களினால் உயர்சாதி மாணவர்களுக்கு கிடக்கும் அந்த எக்ஸ்ட்ரா மதிப்பெண்கள் இருக்கு பார்த்தீர்களா அதை சமன் செய்யவே இடஒதுக்கீடு, இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் மருத்துவர்களில் 20% மேற்பட்டவர்கள் SC/STகள், 50% மருத்துவர்கள் பிற்பட்ட மிக பிற்பட்டவர்கள், வெறும் 30% மட்டுமே இதர, அதிலும் BC,MBC,SC,ST கள் உண்டு இப்படி பார்த்தால் இன்றைய நிலையில் எத்தனை கல்லூரிகளில் இட ஒதுக்கீடு மாணவர்கள் படிப்பை முடிக்கவில்லை, ஆனால் நீங்கள் 25 ஆண்டுகளுக்கு முந்தைய கதையை பேசுகிறீர்கள், இது எந்த காரணத்தினாலும் எப்படியிருந்தாலும் இடஒதுக்கீடு அமல்படுத்தியே ஆகவேண்டும்

12:31 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://balaji_ammu.blogspot.com/2006/09/4.html

//இடஒதுக்கீடு (மட்டுமே!) சமூக நீதிக்கு தீர்வாக அமைய முடியாது//
நிச்சயமாக ஆனால் இடஒதுக்கீடு இல்லாமல் சமூக நீதி அமையவே முடியாது.... வேண்டுமென்றால் சமூக நீதியின் முதல்படி இடஒதுக்கீடாது இருந்து போகட்டும் அதை ஏன் எதிர்க்க வேண்டும்...

//அதே நேரத்தில், இடஒதுக்கீட்டுக்குள் இருக்கும் / இருக்க விரும்பும் எல்லா தரப்பினரும் ஒரே மாதிரியான அளவில், சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவிப்பதில்லை என்பதும் உண்மை தானே !//
அதனால் தான் இடஒதுக்கீட்டில் SC,ST, BC, MBC என்று பிரிவுகள் உள்ளன, இன்னும் சில மாநிலங்களில் SCயில் கூட class-1,class-2,class-3 என உட்பிரிவுகள் உள்ளன.

//சாதி அரசியலும் மென்மேலும் பலமடைந்து வருகிறது.//
சாதியரசியல் எப்போதுமே இருந்து வருகின்றது, என்ன முன்பு உயர்சாதியரசியல் இருந்தது அப்போது அதெல்லாம் யார் கண்ணுக்கும் தெரியாது, இப்போது பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரிடம் அரசியல் சென்றுகொண்டுள்ளது, அரசியலில் சாதி என்பதை பற்றி தொடர் எழுதிக்கொண்டுள்ளேன், அதன் இரண்டாம் பாகத்தில் லபக்குதாசு ஒரு பின்னூட்டமிட்டிருப்பார் அதை இங்கே தரவிரும்புகிறேன்

// வட மாவட்டங்களில் பல தொகுதிகள் முன்பு முதலியார் தொகுதிகள், ரெட்டியார் தொகுதிகள் என அடையாளப்படுத்தப் பட்டிருந்தன. ஆனால் இன்று அவைகள் எல்லாம் வன்னியர் தொகுதிகள், தலித் தொகுதிகள் என்று வகைபடுத்தப்படும் நிலையை எட்டியுள்ளது,//

(மேல் உள்ள வரிகள் நூறு சத உண்மையென்னும் பட்சத்தில் )முதலியார் தொகுதிகள், ரெட்டியார் தொகுதிகள் பற்றி அலட்டிக்கொள்ளாத நம் சமூகமும், ஊடகமும் வன்னிய தலித் தொகுதிகளாகும்போது சாதீய ஆபத்து என அலட்டிக்கொள்கிறதோ என எண்ணத்டோன்றுகிறது .


//அரசியல் தரகர்களால், தற்போது எண்ணிக்கை விளையாட்டாய் மாறி விட்டது கொடுமை தான் ! //
பத்ரியின் ஒரு பதிவில் இட்ட பின்னூட்டம் இதற்கு பதில் சொல்லும்

சனநாயகத்தின் நான்கு தூண்களில் ஊடகத்தூணை 75%மேல் ஆக்கிரமித்து, நீதிமன்ற தூணை கிட்டத்தட்ட முழுவதும் ஆக்கிரமித்து வேணுகோபால்கள் மாதிரி ஆட்கள் அரசு இயந்திர தூணையும் ஆக்கிரமித்து சமூகநீதிக்கு எதிராக இருக்கும்போது வேறு வழியே இல்லாமல் சமூகநீதிக்கு ஆபத்பாந்தவன்களாக இருப்பது மரவெட்டி அரசியல்வாதிகளும், ஊழல் அரசியல்வாதிகளும் தான்.... என்னை பொறுத்தவரை மற்ற மூன்று உயர்சாதி வெறி ஆதிக்கம் கொண்டவர்களின் தூண்களை விட அரசியல்வாதிகள் நிரம்பியிருக்கும் தூண் எவ்வளோ பரவாயில்லை...

1:38 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://balaji_ammu.blogspot.com/2006/09/3.html

டோண்டுவும் நீங்களும் மீண்டும் ஒருமுறை நான் எழுதிய இடஒதுக்கீடு தலைமுறை தலைமுறையாகவா? என்கிற பதிவை படித்து பாருங்கள், தொடர்ந்து பரப்பப்பட்டு வரும் பொய்களுள் ஒன்று இந்த கிரீமிலேயர் பிரச்சினை...

8:42 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://paarima.blogspot.com/2006/09/blog-post_115782207190136238.html

சூப்பர் உள்குத்தா இருக்கு, எனக்கு தெரியும் அது யாருனு, ஆனா மத்தவங்களுக்கு தெரியனுமே, அதனாலா அவிங்க மாதிரியே அய்யோக்கியத்தனமாக சூசகமா சொல்லுங்க இல்லைனா வம்பு வழக்குனு நிக்கனுமே

11:24 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://kumizh.blogspot.com/2006/09/blog-post.html

சுந்தரமூர்த்தி அவர்கள் சொன்னதை குசும்பனுக்கும் பொறுத்தி குசும்பனின் பின்னூட்டத்திற்கு பதில்சொல்லாமல் போகின்றேன் :-) என்ன குசும்பா ஓ.கே.வா :-)))))

7:15 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://kilumathur.blogspot.com/2006/09/blog-post_11.html

இந்த பதிவு ஹைஜாக் செய்யப்படுவதாக கருதுகிறேன், செல்வன் கம்யூனிஸ்ட்கள் ஏன் அழுகிறார்கள் என பதிவு போட்டார், அதாவது இந்தியா முன்னேற்ற பாதையில் செல்கிறது விக்கிப்பீடியாவின் புள்ளிவிவரத்தோடும் :-) உலக வங்கியின் புள்ளிவிவரத்தோடும் வறுமைக்கோட்டுக்கி கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது ஆனாலும் கம்யூனிஸ்ட்கள் அழுகிறார்கள் என்பது போன்ற பதிவிட்டிருந்தார், அதற்கு பதில்சொல்லும் விதமான பதிவு இது, ஆனால் இது இந்தியதேசிய அபிமானிகளினால் கம்யூனிஸ்ட்களை திட்டுவதற்கு கடத்தப்படுகின்றது

7:01 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://holyox.blogspot.com/2006/09/159.html

செல்வன் இது தினமலரில் வழக்கம்போல வாசகர்கடிதத்தில் வந்தது, அதற்கு அடுத்த நாளே சம்பந்தப்பட்டவர்கள் விளக்கமளித்திருந்தனர் அதே தினமலரில் அதுவும் வந்திருந்தது, அதாவது தம் கம்யூனிச கொள்கையை தம்முடன் தான் வைத்திருக்க முடியும் அதை மாப்பிள்ளை வீட்டரிடமெல்லாம் தினிக்க முடியாது, அப்படி செய்தது மாப்பிள்ளை வீட்டாரின் விருப்பம் என்று விளக்கமளித்திருந்தார், செல்வனுக்கு தினமலரில் சுட்டி தேடிப்பார்த்தால் கிடைக்கும், செல்வன் வர வர செலக்டிவ்வான விசயங்கள் தான் உங்கள் கண்ணுக்கு தெரியுது போல no offence :-)

5:28 PM  
Blogger குழலி / Kuzhali said...

திருமண விவகாரத்தில் கொள்கையை கடைபிடிப்பதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன, பலவிதமான சமரசங்களுக்குட்பட்டுதான் (கொள்கை சமரசங்கள்) உட்பட திருமணம் நடைபெறும், யாருடைய கொள்கையையும் திணிக்க முடியாது, மற்ற பட்டு சால்வை விசயத்தை சொல்லவில்லை அந்த அக்னி கொளுத்தி செய்ததை சொல்கிறேன், உங்கள் கொள்கைகளை உங்கள் திருமணத்தில் நடத்த முயற்சி செய்யுங்கள் எவ்வளவு தூரம் எத்தனை பேரை சமாளிக்க வேண்டுமென தெரியும்.

மாற்றம் மட்டுமே உலகில் மாறாதது செல்வன் மட்டும் விதிவிலக்கா என்ன?

6:14 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://sivabalanblog.blogspot.com/2006/09/blog-post_12.html

பத்திரிக்கைகளை அப்படியே நம்பியும், வெகுசன ஊடகங்களால் மூளைச்சலவையும் செய்யப்பட்டிருந்த காலம் வெகுசன ஊடக மதிப்பீடுகளையும் நம்பிய காலகட்டத்தில் அம்பேத்கார் அவர்களின் சிலையின் கீழ் எழுதப்பட்டிருந்த வாசகம்.

என்னை விட என் நாட்டு நலன் முக்கியம்

என் நாட்டைவிட என் சமூக நலன் முக்கியம்

புரட்சி பாரதம் கட்சியினர் வைத்த சிலை என நினைக்கிறேன், சென்னையின் புறநகர் பகுதியில் பார்த்திருந்தேன், அப்போது நான் அர்ஜீனாக இருந்தவன், அதாங்க தேசபக்தி அப்படியே உடம்பெல்லாம் பீறிடும், பேருந்தில் போற வாக்கில் இதை படித்தப்போது அப்படியே தேசபக்தி பீறிட்டு என்ன தலைவர் இவர் நாட்டை விட என் சமூக நலன் பெரிது என்கிறார் என்று கோபமும் ஆத்திரமும் வந்தது, நாளாக நாளாக திருமா , அம்பேத்கார் , பெரியார் ஆகியோர் புரிய ஆரம்பித்தவுடன் அன்று எனக்கு அம்பேத்கார் மீது வந்த கோபம் எத்தனை தவறானது என்று புரிந்தது.

அம்பேத்காரின் பொன்மொழிகளை இட்டதற்கு நன்றி ஆனால் சூழலில் பெரிய முன்னேற்றமில்லாமல் அப்படியே இருக்கிறது என்ற வருத்தமும் உள்ளது.

நன்றி

6:45 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://imohandoss.blogspot.com/2006/09/blog-post_14.html

வேலை கணிணி துறையில் என்று முடிவெடுத்தால் கன்னடமும், தெலுங்கும் தான் இந்தியை விட முக்கியமாக தெரிந்திருக்க வேண்டும், ஏனெனில் கணிணிதுறையில் இந்தி மாநிலங்களைவிட வேலை கொட்டி கிடப்பது பெங்களூரிலும், ஹைதராபத்திலும் தான், ஒரு வேளை இந்தி தெரியாமலிருந்திருந்தால் லால்பாக் எக்ஸ்பிரசையோ, கோல்கொண்டா எக்ஸ்பிரசையோ பிடித்திருந்திருப்பீர் உங்களுக்கு ஒவ்வொருமுறையும் பயன நாளாவது இரண்டு நாட்கள் மிஞ்சியிருக்கும் :-)

புரிந்திருக்குமே நான் என்ன சொல்ல வர்றேன்னு :-))))

12:37 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://imohandoss.blogspot.com/2006/09/blog-post_14.html

//நானும் ஒரு வருடம்முழுவதும் கர்நாடகத்தில் வேலை செய்திருக்கிறேன் தலைவரே.
//
நான் கிட்டத்தட்ட 5 வருடங்கள்

//நான் டெல்லியிலோ இல்லை புனேயிலோ கூட உயிர்வாழ்வதற்கு பயப்பட்டதில்லை அங்கே பயந்திருக்கிறேன். இதை(விஷயத்தை) அந்தப் பக்கம் இழுத்துப்போக விரும்பவில்லை.
//
இது வேற அது வேற... தற்போதைக்கு வேலை கிடைப்பதை வைத்து மட்டும் பேசுவோம், பெங்களூர் மாதிரி புனேயில் நாளை அது மாதிரி நடந்தால் கஷ்டப்பட்டு இந்தி படிச்சது வீணாப்போயிடுமே :-)

//பெங்களூரில் கிடைத்ததை விட 50% சம்பளம் அதிகம் கிடைத்தது புனேவில், அதனால் மாறிவிட்டேன், இதைவிட சம்பளம் 30% அதிகமாகக் கிடைக்குமென்றால் டெல்லிக்கு மாறிவிடுவேன் நிச்சயமாய்.//

இன்னமும் அதிக சம்பளம் அளிக்கும் நிறைய நிறுவனங்கள் இருப்பது பெங்களூரில் தான் என நினைக்கின்றேன், 2003ல் மூன்று அல்லது நான்கு வருட அனுபவம் உள்ள ஜாவா மென்பொருளாளர்களுக்கு சர்வ சாதாரணமாக அரைலட்சம் மாத சம்பளம்(ஆண்டுக்கு 6 இலட்சம்) தந்த நிறுவனங்கள் பெங்களூரில் இருந்தன ஆனால் PCS, மற்றும் சில புனே நிறுவனங்கள் ஆண்டுக்கு 4.5 இலட்சத்திற்கே மூக்கால் அழுத கதையெல்லாம் உண்டு. வெகு சில நிறுவனங்களை தவிர மற்ற நிறுவனங்களில் சம்பள நிர்ணயம் உங்களின் முந்தைய சம்பளத்தை பொறுத்தே அமையும், சில நிறுவனங்களில் மட்டுமே சம்பள band உண்டு அந்த மாதிரியான நிறுவனங்களில் சம்பளம் கேட்டதை விட அதிகமாக கொடுத்து அதிர்ச்சி ஏற்பட்ட கதையெல்லாம் நண்பர்களுக்கு உண்டு.

எனக்கென்னமோ இந்தி படிப்பதைவிட கன்னடமும், தெலுங்கும் தெரிந்தால் நிறைய வசதியாக இருக்கும் கணிணி ஆட்களுக்கு,

மான்ட்ரின் படித்திருந்தால் எனக்கு இங்கே சிங்கப்பூரில் வசதியாக இருந்திருக்கும், இதே இந்தியென்றால் கீதா சாம்பசிவம் மாதிரி என்னை இந்தி படிக்கவிடாமல் செய்த அரசியல்வாதிகள் என அரசியல்வாதிகளை திட்டி விட்டு சென்றிருப்பேன், என்ன செய்ய இந்த ஊரில் இந்தி இல்லையே.... :-)

சும்மா லுலுலாயி :-)

5:31 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://suvanappiriyan.blogspot.com/2006/08/blog-post_31.html

சுவனப்பிரியன் உங்களுடைய பல பதிவுகளை மௌனமாக படித்து வருகின்றேன், இந்த பதிவிற்கு பதிலாக இந்த சுட்டியை படியுங்கள் http://ezhila.blogspot.com/2006/09/blog-post_115836346972707202.html

உலகில் மாறாதது எதுவுமில்லை, எந்த மதமும், எந்த போதனைகளும், எந்த ஒழுக்க குறியீடுகளும், எந்த நியாயங்களும் அந்த அந்த காலகட்டத்திற்கு அந்த அந்த மக்களுக்கு பொறுத்தமாக இருக்கும், ஆனால் அது தான் எல்லா மனிதர்களுக்கும் எல்லா நேரத்திற்கும் எல்லா இடத்திற்கும் சரி என்பதில்லை...

மற்றபடி உங்கள் பதிவுகள் நிறைய தகவல்கள் தருகின்றன.

6:47 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://vittudhusigappu.blogspot.com/2006/09/1509.html

செவப்பு முதலில் உயர்சாதி க்ரீமிலேயர் அரசு கல்விநிறுவனங்களில் ஆக்கிரமிக்கும் இடங்களை வேண்டாமென்று சொல்ல சொல்லுங்கள் அதாவது உங்க கணக்குப்படி மாதம் இருபதாயிரம் சம்பாதிக்கும் உயர் சாதி க்ரீமிலேயர் ஆட்களின் பிள்ளைகள் குறைந்த கட்டணத்தில் அரசு மற்றும் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் ஆக்கிரமிப்பு செய்வதன் மூலம் உயர் சாதி ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறார்களே, ஏன் இவர்கள் அரசாங்கத்திடம் மானிய பிச்சை எடுக்கிறார்கள்?

பேச வேண்டியதெல்லாம் நிறைய இந்த சுட்டியில் http://kuzhali.blogspot.com/2006/09/blog-post_10.html பேசியிருக்கோம், உமக்கு புரியுதோ இல்லையோ இவைகள் உமக்காக எழுதப்படவில்லை, வெகுசன ஊடகத்தாலும், உம்மை போன்றவர்களாலும் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களுக்கு தான் எழுதுகிறோம்.

7:11 PM  
Blogger குழலி / Kuzhali said...

வணக்கம்,
அன்புடையீர்,
எனது பெயர் ........... தந்தையார் பெயர் .............. எங்கள் சொந்த ஊர்/கிராமம் ............................

நான் தற்போது ஒரு கணினி நிறுவனத்தில் கன்சல்டண்டாக இருக்கிறேன்/பாங்க் ஆப் பரோடாவில் சீப் கேஷியராக இருக்கிறேன்/ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். நான் வசிக்கும் ஊர் துலுக்கனாம்பட்டி/மலேசியா/செவ்வாய் கிரகம்/பெங்களுர். என் மாத வருமானம் நாற்பதினாயிரம் இந்திய ரூபாய். என் மனைவி குடும்பத்தலைவி.

என் தந்தையார் என்னைக் படிக்க வைத்தார். ஓடி ஓடி எங்களுக்காக பணத்தை சேர்த்தார். நானும் ஓரளவிற்கு நன்றாகவே படித்தேன். என் திறமையாலும் இந்திய அரசின் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் நல்ல கல்லூரியில் இடம்கிடைக்கப்பெற்றென். அதன் பொருட்டு நல்ல நிறுவனத்திலும் வேலை கிடைத்து நன்றாகவே வாழ்ந்து வருகிறேன். எனக்கென்று ஒரு சொந்த வீடும், ஓரேயொரு காரும், வீட்டில் ஒரு ஏஸியும் மற்றும் இன்னபிற அத்தியாவசியப் பொருட்களும் இருக்கின்றன. நிற்க.

என் மகன் எஸ்.பி.ஓ.ஏ பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் __% சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளான். அரசு கல்லூரிகள் போன்று அரசு பள்ளிகள் இலவசமாக, தரமான கல்வியளித்தாலும் தனியார் பள்ளிகளுக்கு நான் பணம் அழுது என் மனைவிக்கு 234வது பட்டுப்புடவை வாங்கித்தரமுடியாகிவிட்டது ஆனால் அரசு கல்லூரிகள் இலவசமாகவும் தரமாகவும் கல்வியளிப்பதால் என் மனைவிக்கு 32வது தங்க வைர நெக்லஸ் வாங்கித்தர வேண்டியிருப்பதாலும் நான் குடும்பத்துடம் ஐரோப்பா டூர் போகவிருப்பதாலும் அதற்கான பணத்தை சேமிக்க தனியார்கல்லூரிகளில் சேர்க்குமளவிற்கு பணமிருந்தாலும் மேற்கண்ட என் முக்கிய செலவுகளுக்கு பணம் தேவைப்படுவதால் என் சொந்தகார ஏழைகள் தனியார் கல்லூரியில் சேருமளவிற்கு பணமில்லாமலிருந்தாலும் அதை விட முக்கியமான செலவுகள் எனக்கிருப்பதால் அரசாங்கம் தயவு கூர்ந்து இலவச/குறைந்த கட்டணத்தில் என் மகன்/மகளுக்கு மானியத்தில் இடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நீ இருபதாயிரத்துக்கு மேல சம்பாதிக்கிறாயே என்ற கேள்விக்கு பதிலாய், கைக்கு வர காசு எல்லாம் செலவாகிப்போய்விடுகிறது என்பதையும், அரசாங்கமே என் கைச்செலவிற்கும் மாதம் ஒரு அமவுண்ட் போட்டு, கூடவே அரிசி வாழைக்காயும் கொடுத்தால் புண்ணியமாகப் போகுமென்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேற்குறிப்பிட்டதெல்லாம் உண்மையென்றும், சுய நினைவுடன் எழுதியது என்பதுடன் நான் ஒரு பிச்சைக்காரன் என்பதனையும் அழுத்தந்திருத்தமாக ஒப்புக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்,

இப்படிக்கு
வெட்கம் கெட்ட ஜென்மம்,
பிற்படுத்தப்பட்ட/ தாழ்த்தப்பட்டவர்கள் இடஒதுக்கீட்டில் மட்டும் க்ரீமிலேயர் கேட்கும், மனைவிக்கு 234வது பட்டுப்புடவையும், 32வது தங்க நெக்லசும், 15 நாள் குடும்பத்துடன் ஐரோப்பாடூர் போகவும் அரசாங்கத்தின் கருணையை எதிர்பார்க்கும் க்ரீம் இல்லாத லேயர்

7:25 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://dharumi.blogspot.com/2006/09/176.html

இந்த மாங்கா மடையர்கள் பற்றி நிறையவே பேசலாம்.... முதலில் நீதித்துறை சரிசெய்யப்படவேண்டும்.

நன்றி

11:50 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://yemkaykumar.blogspot.com/2006/09/blog-post_26.html

எம்.கே.குமார் இது மிக வருத்தமான கண்டிக்கத்தக்க செயல், இந்த புத்தகத்தை சென்னையில் வாங்க முயன்றேன் அப்போது இந்த விடயத்தை நண்பர் கூறினார், ஆனால் அந்த புள்ளி நீங்கள் தான் என தெரியவில்லை, இன்று படித்த பிறகுதான் தெரிகின்றது அது நீங்கள் என்று.

நன்றி

தேவையற்ற திசை திருப்பும் பின்னூட்டங்களை அழித்துவிடுங்கள் அனுமதிக்காதிர்கள்.

நன்றி

1:59 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://masivakumar.blogspot.com/2006/09/blog-post_25.html

மா.சிவக்குமாரா இப்படி? அய்யய்யோ என்ன இப்படி எழுதிட்டிங்க, மிக வருத்தப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்... ஓ... சிவக்குமார் வேறு வருத்தம் தெரிவித்துவிட்டார், கிண்டல்களை தன்னளவில் மட்டுமே நிறுத்திக்கொள்வதாக சொல்லிவிட்டார்... சமூக அவலங்களை கிண்டல் செய்ய வெளிவந்த ஒரு ஆளின் தலையை தடவி மடக்கிப்போட்டாச்சி..... அந்த விதத்தில் சந்தோசமே....

//அனாதை இல்லங்களுக்கோ, இல்லை ஆதரவு இல்லாத ஏழைகளுக்கோ கூட தருமம் செய்றவங்களும்
இருக்கமாட்டாங்களா//
துளசியக்கா நீங்க சொன்னது மாதிரி தான் செலவு செய்வாங்களா? ஏன் சிவக்குமார் சொன்னது மாதிரி செலவு செய்யமாட்டார்கள் என்கிறீர்களா?

ஓகை மற்றும் துளசி அவர்களுக்கு, இலவசமின்சாரத்தையும், இரண்டு கிலோ அரிசியையும் கிண்டல் செய்பவர்கள் ஏன் நூறு ரூபாய்க்காக அரசாங்கத்திடம் மானிய பிச்சை எடுக்க வேண்டும்? அதை சிவக்குமார் கிண்டல் செய்ததில் என்ன தவறு? அப்படி மானியபிச்சை எடுப்பவர்களை தானே கிண்டல் செய்கிறார் அதை செய்யக்கூடாதா? இப்படியெல்லாம், பொதுப்புத்தியில் அடைக்காதீர்கள், பாருங்கள் சிவக்குமாருக்கு குற்ற உணர்ச்சியே வந்துவிடும் போலிருக்கு...

2:24 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://vettri.blogspot.com/2006/09/blog-post.html

//நீ . ஆரிய கூட்டத்தின் வாரிசு நீ. பார்ப்பனன் நீ என்று திட்டி அட்டோ அனுப்ப ஆள் எடுக்கும் வேலையில் இறங்குவதற்க்கு முன்னர் //

சமுத்ராவிற்கு இதுவரை எத்தனை முறை ஆட்டோ வந்துள்ளது, ஈழத்தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும், திராவிடர்களையும் காழ்ப்புணர்ச்சியோடு விமர்சிக்கும் 'சோ' விற்கு எத்தனை முறை ஆட்டோ வந்தது? ஏன்யா இந்த அலப்பறை, ஜெயலலிதாவை விமர்சித்ததற்காக நக்கீரன் கோபால் பொடாவிலேயே உள்ளே போய் வந்தார், ஆனால் எந்த திராவிடகுஞ்சுகளை விமர்சித்ததற்கு எத்தனை ஆட்டோ யார் யார் வீட்டிற்கு வந்தது? சும்மா இந்த மாதிரி டகால்ட்டி வித்தை காமிக்காதிங்கோ....

8:39 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://thekkikattan.blogspot.com/2006/09/blog-post_29.html

இப்படியெல்லாம் படத்தை வலைப்பதிவில் போட்டு ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் இருக்கும் இந்தியாவின் ஏழ்மையை (அமெரிக்காவில் சாக்கடை சுத்தம் செய்பவர்கள் இல்லையா?, அங்கே படிக்காதவர்கள் சதவீதம் தெரியுமா?, பணக்கார நாடான துபாயில், சவுதியில் தண்ணீர் கிடைக்காமல் அரச குடும்ப வாரிசுகளே செத்திருக்கிறார் தெரியுமா?) படமெடுத்து போட்டு காசுபார்க்கும் கூட்டத்திற்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லை என்ற பதிவுகள் கூடிய சீக்கிரத்தில் இந்த பதிவிற்கு எதிர்வினையாக எதிர் பார்க்கலாம் :-))))

7:12 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://tamilbar.blogspot.com/2006/09/blog-post_30.html

//லவ் அண்ட் லவ் மாலா : எல்லோரும் எல்லாரையும் லவ் பண்ணுங்க, யாரும் யாரையும் நகைச்சுவையா பேசாதீங்க, திட்டாதிங்க, நான் மட்டும் அப்ப அப்ப சைட் பீட்டா நம்மவா எல்லோரும் நல்லவா அப்படின்னு பிட்டு ஓட்டிடறேன்
//
ஹைய்யா இது யாருனு எனக்கு தெரியுமே எனக்கு தெரியுமே :-))))

9:28 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://balaji_ammu.blogspot.com/2006/10/blog-post.html

//இன்று அனானி ஒருவர் மின்மடலில் தான் எழுதி அனுப்பியதை (அவர் வலைப்பதிவர் இல்லை என்பதால்) என்னுடைய வலைப்பதிவில் இடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
//
அடேடே பாலா உங்களுக்கு ஏன் இத்தனை சிரமம் கொடுத்தார் அந்த அனானி, என் பதிவிலேயே பின்னூட்டம் போட்டிருந்திருக்கலாமே, நான் வேறு அனானி பின்னூட்ட வசதியெல்லாம் செய்து தந்திருக்கிறேன், பாவம் உங்களை சிரமப்படுத்திட்டார் அனானி, என் பதிவினால் விளைந்த பின் விளைவு தான் இது என்றால் அதற்காக உங்கள் சிரமத்திற்க்கு வருந்துகிறேன்.

பாலாவிற்கு மடல் அனுப்பின அனானி, நீங்கள் எனக்கும் கூட அனுப்பலாம், நானே என் பதிவில் போடுவேன், என் பதிவில் அனானி பின்னூட்ட வசதி கூட இருக்கே.

//மொதல்ல தெரியாது...வராது...முடியாது...நல்லால்லை அப்படீன்னு சொல்லிக்கிடுல்ல திரிஞ்சானுங்க...இப்ப காசுன்னதும் டக்குனு மாறிட்டானே..அப்ப மொதல்ல சொன்னது பொய்தானெ...பொய் சொன்னவன் மூஞ்சில கரிதான?"
//
அக்காங்... அது அது... அதே தான்....

6:06 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://www.blogger.com/comment.g?blogID=26850826&postID=116010947403532049

தயவு செய்து இந்த புகைப்படத்தை நீக்குங்கள்.... அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் படங்களையெல்லாம் வெளியிடுதல் அநாகரிகம்...

4:06 AM  
Blogger குழலி / Kuzhali said...

என் பதிவு இந்த சுட்டியில்

ஒரே ஒரு கேள்வி, நீங்கள் இந்த பதிவில் போட்டிருக்கும் படத்திலிருப்பவர்கள் தான் பாராளுமன்ற தாக்குதலை செய்தார்களா? பின் ஏன் இந்த படம் இங்கே?

11:53 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://holyox.blogspot.com/2006/10/185.html

//It is better to keep your mouth shut, and be thought a fool than to open your mouth and prove it.
//
ஹி ஹி கருத்து சொதந்திரம்....

12:59 AM  
Blogger குழலி / Kuzhali said...

//It is better to keep your mouth shut, and be thought a fool than to open your mouth and prove it.
//
அப்பாவி: கருத்து சுதந்திரம்னா என்னாண்ணே...

அண்ணாசாமி: அதுவா... எனக்கு பிடிச்ச கருத்த சொல்றதுக்கு உனக்கு சுதந்திரம் உண்டுன்னு அர்த்தம்.

முகமூடி ஆனாலும் உங்க அண்ணாசாமி சரியாத்தாங்க சொல்லியிருக்கார்

1:39 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_116020914804334117.html

//குற்றத்தை நாம் எப்படி பார்க்கிறோம்,எங்கிருந்து பார்க்கிறோம் என்பதை பொறுத்து வழக்கின் தன்மைகள் மாறுகின்றன என்பது ஒரு பார்வை
//
அதே அதே, நான் கூட என்பதிவில் சரி தவறு என்று எதுவுமே சொல்லவில்லை...

//ஏனெனில் செல்வன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் (அல் கொய்தா ) படங்களை போட்டு நம்மை அசிங்கப்படுத்திவிட வாய்ப்பு உள்ளது:)).//
ஹி ஹி அதெல்லாம் கருத்து சுதந்திரம் கண்டுக்காதிங்க, அதுக்கு ஒரு கருத்து சுதந்திர காவலாளியும் ஒத்து ஊதுவார்

1:50 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://wethepeopleindia.blogspot.com/2006/10/blog-post.html

//இங்கு சப்(ப)போர்ட்டுக்கு வரும் குழலி போன்றவர்கள், தங்கள் வீட்டில் தீவரவாதிகளில் செயல்கள் எட்டும் வரை ஆதரிப்பார்கள். தன் வீட்டில் ஒருவரை இந்த தீவிரவாதி கொண்டிருந்தால் என்ன செய்திருப்பார்? அப்பொழுதும் குழலி, இந்த அப்சலை ஒரு சுதந்திர போராட்ட வீரர் (தியாகி) என்று சொல்வாரா?
//
ஜெய் இப்படி என் மீது கேள்வி வைக்கப்படும் என்று அறிந்தே இருந்தேன்,இது ஒரு சப்பை கேள்வி. என் பதிவிலியே கடைசியாக பதில் சொல்லலாம் என இருந்தேன் இருந்தாலும் இங்கே இதற்கு மட்டும் சொல்கிறேன்.

ஒருவன் வீட்டில் இந்திய இராணுவம் புகுந்து தீவிரவாதிகளை தேடுகிறேன் என்று அவன் மனைவியையும் தங்கையையும் ஏன் 60 வயது தாயையும் கற்பழித்து, கொன்று தூக்கி எறிந்துவிட்டு வந்தால் அவனுக்கு இந்திய தேசபக்தி பீறிட்டெழுமா? இங்கு நீங்கள் என்று குறிப்பிடாததற்கு படிக்கும் போது இடறல் வரக்கூடாது என்பதற்காகவே.

9:13 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://muthukumaran1980.blogspot.com/2006/10/blog-post_09.html

ஏகப்பட்ட உள்குத்தா இருக்கே, 3 வரியில் இத்தனை பொருள் இருக்கா, கவிதையின் பலமே அது தான்.

கும்பிட மட்டுமல்ல
அரசு கட்டிலை
பிடிக்கவும் தேவைப்படுகிறார்
ராமர்
-------------
பாபர் மசூதியை
சேதப்படுத்தி
வளர்க்கின்றார்கள்
தேசபக்தியை
--------------
குஜராத் கொலை
பத்தாயிரமாம்
ஆட்சி கலைத்து
தேர்தல் வை
இன்னும் ஐந்து
வருட ஆட்சிக்கு

கார்கில் போர்
ஜெயிச்சாச்சி
ஆட்சி கலைத்து
தேர்தல் வை
இன்னும் ஐந்து
வருட ஆட்சிக்கு

வச்சாங்க ஆப்பு
ஐந்து வருசத்துக்கும்
சேர்த்து

4:26 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://robinhoot.blogspot.com/2006/08/blog-post_21.html

இந்த பதிவை நீக்கவும், அனுமதியின்றி பிறரின் குடும்பத்தினர் படங்களை இப்படி வெளியிடுவது அநாகரிகம்.

நன்றி
குழலி

4:42 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://tamilbar.blogspot.com/2006/10/blog-post_116048571964396899.html

செல்வன் தான் நினைப்பதை எழுதிக்கொண்டிருக்கின்றார் மற்ற சிலரைப்போல சூது வாது அறியாதவர், அவர் பச்சை புள்ள மாதிரி, அவர் தான் நினைப்பதை எழுதுபவர், இப்படி பட்ட செல்வனுக்கும் எங்களுக்கும் இடையில் பிரச்சினையை உருவாக்கும் சதி வேலையே பார் டெண்டரின் இந்த பதிவு :-))

//செல்வன காப்பாற்ற தேசியவியாதிகள் யாருமே இல்லையா ? தேசியவியாதிகளே ...ஓடி வாங்க,
//
சூதுவாது அறியா செல்வனுக்கு அவர்கள் சும்மா இருந்தாலும் இப்படி ஏற்றிவிட்டு இந்நேரம் எல்லாவற்றையும் சொல்லிகொடுக்க ஸ்பெசல் கிளாஸ் ஏற்பாடு செய்து கொடுக்கும் ஐடியாவை தூண்டுவது போல் உள்ளது இந்த வரிகள் :-)))

தேசியவாதிகள் யாரேனும் வந்து ஐந்தறிவு கொண்ட மிருகங்களே என திட்ட வேண்டுமென்று சதி செய்தே இவர் இப்படி திராவிட சிங்கங்கள் என குறிப்பிட்டுள்ளார் :-)))

நன்றி

8:05 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://vittudhusigappu.blogspot.com/2006/10/blog-post_11.html

//குழலிங்கறது அவிங்க அம்மா அப்பா வச்ச பேரா?
//
சாருநிவேதிதா, சுஜாதா இவிங்களுக்கெல்லாம் இது பொருந்துமா?

//குலத்தளவே ஆகுமாம் குணம்.
//
அசிங்கமா இல்லை இப்படி சொல்ல. தூ....

8:54 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://sreegopi.blogspot.com/2006/10/blog-post.html

//கிராமத்து மக்களிடம் இருந்த ஒற்றுமையை அழிக்கும்//
எது ஒற்றுமை என்கிறீர்கள்? ஒருவன் ஓங்குவது ஒருவன் ஒடுங்கிப்போவதுமா? இன்னும் கேட்டால் இந்த உள்ளாட்சி தேர்தல்கள் வீச்சமெடுத்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் போன்ற மேலுக்கு ஒற்றுமையாகவும் உள்ளுக்குள்ளே ஒடுக்கியும் வைத்திருந்தது தெரியவந்தது, இன்றைய தேதியில் எந்த கிராமத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள், போட்டியின்றி தேர்வு செய்கிறார்கள் என்றால் அங்கே யாரோ யாருக்கோ அடிபணிகிறார்கள் என்று அர்த்தம், இதற்காகவெல்லாம் உள்ளாட்சி தேர்தல் வேண்டாமென்றால் நாட்டில் எந்த தேர்தலுமே நடக்க முடியாது.

5:49 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://robinhoot.blogspot.com/2006/10/blog-post.html

உங்களுடைய அக்கறை போலிப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதில் இல்லை போலிருக்கு. சதயத்தின் இந்த பதிவில் பொன்ஸ் மற்றும் சதயம் சொன்னது கீழே...

3. நண்பர் ஆப்புவின் பதிவினை தமிழ்மண திரட்டியிலிருந்து நீக்குவதற்கு எத்தனை நியாயம் இருக்கிறதோ அதற்கு சற்றும் குறையான தகுதியுடையது நண்பர் ராபின்ஹீட் மற்றும் அவரைத் தாங்கிப்பிடிக்கும் நண்பர்களின் பதிவுகள்.

- பதிவர்களின் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு மிரட்டும் கலாச்சாரத்தைத் தொடங்கியது இந்தப் பதிவர் தான் என்பதை நாம் இந்தச் சமயத்தில் நினைவு கூறவேண்டி இருக்கிறது.


//அவன் டோண்டுவுடன் சண்டை போடட்டும் போடாமல் இருக்கட்டும் அது அவர்களின் தனிப்பட்ட விசயம்.
//
அது சரி... இப்போ தான் தெரியுதா தனிப்பட்ட விசயமென்று.... அய்யா சாமிகளா? அப்படியென்றால் உம்ம பிரச்சினையையும் மூர்த்தி பிரச்சினையும் தனிப்பட்ட விசயமென நாம் கருத வாய்ப்பிருக்கின்றதே...

ஒவ்வொருமுறையும் யாரேனும் முயற்சியெடுத்து அமுங்கி வரும் பிரச்சினையை கிளப்பிவிடுவதே உம்மை போன்றவர்கள் தான், இந்த முறை டோண்டுவே முயற்சியெடுத்துள்ளார்.

உண்மையிலேயே நீர் மூர்த்திக்கு தகவல் சொல்ல நினைத்தால் மூர்த்திக்கு நேரடியாக சொல்லலாமே? ஏன் சொல்லவில்லை, பின்னே போலி பிரச்சினை முடிந்துவிட்டால் எதன் பின் ஒலிந்து ஓலமிடுவது என்ற அச்சமா?

இப்போ இந்த பின்னூட்டத்துக்கு எதிர்வினையாக என்னென்ன செய்யப்போகிறீர்கள்? எனக்கும் போலிக்கும் தொடர்பு, நான் போலியின் ஆதரவாளன், போலியின் செயல்களை சரியென்பவன் என்று என் மீது பெயிண்ட் அடிப்பீர்களோ?

பொன்ஸ் மற்றும் சதயமின் கருத்தே என் கருத்தும்.
3. நண்பர் ஆப்புவின் பதிவினை தமிழ்மண திரட்டியிலிருந்து நீக்குவதற்கு எத்தனை நியாயம் இருக்கிறதோ அதற்கு சற்றும் குறையான தகுதியுடையது நண்பர் ராபின்ஹீட் மற்றும் அவரைத் தாங்கிப்பிடிக்கும் நண்பர்களின் பதிவுகள்.

1:27 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://wethepeopleindia.blogspot.com/2006/10/blog-post_18.html

//ஒரு சராசரி ஏழு வயது சிறுவனுக்கு தற்கொலை என்றால் என்ன வென்று தெரிவதே பெரியவிசயம், அப்பறம் தானே தற்கொலை முயற்சி.
//
5 வயதில் தற்கொலை முயற்சி செய்த ஒரு ஆள் இருக்காருங்க...

7:39 AM  
Blogger குழலி / Kuzhali said...

//ஒரு 5 வயது குழந்தை தற்கொலைக்கு முயற்ச்சி பண்ணியிருக்கிறது """ என்று பின்னூட்டுவது தவிர வேறு மறுப்பில்லாததலிருந்தே தெரிகிறது //
யாரு சொன்னது மறுப்பில்லையென்று, அதான் எழுத வேண்டியதையெல்லாம் எழுதியாச்சி,மேலும் தேசபக்தி பீறிட்டு ஊற்றிக்கொண்டிருக்கும் ஜெய் மாதிரி ஆட்கள் அந்த தேச பக்தியை மற்றவர்கள் மீதும் அடித்து கண்ணை மூடவைக்கும் போது இங்கே பேசி ஒரு புண்ணியமும் இல்லை அதான்...

//குழலிக்கு ஒரு கேள்வி.....5 வயசு குழந்தை எதுக்குண்ணா தற்கொலைக்கு முயற்சி பண்ணுச்சு...//
வீட்டில அடிப்பாங்கன்னு தான், ஆளு யாருன்னு தெரியனுமென்றால் தனி மடல் அனுப்புங்க சொல்றேன்...
//
//உங்க பதிவு ஏதாவது படிச்சு பாத்துருக்குமோ ???
//
என் பதிவை படித்து பலரும் உயிரோடு இருக்கிறார்களே :-)

8:21 AM  
Blogger குழலி / Kuzhali said...

//அது போகட்டும் தாராசிங் தூக்கு தண்டனை கொடுக்கும் போது உங்கள் பதிவு எப்படி இருந்தது. //
அப்சலை நான் பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபடவில்லை என்று சொல்லவில்லையே, என்னை பொறுத்தவரை அவன் நேரடியாக அல்லது மறைமுகமாக பங்கேற்றிருப்பான் என்பதை பற்றியெல்லாம் கவலையில்லை, மேலும் அப்சல் நிரபராதி என்றெல்லாம் பேசவேயில்லை, நீங்கள் அப்சல் தீவிரவாதி என்பதோடு நிற்கின்றீர், என்பதிவு அதைத் தாண்டி ஏன் அப்சல் தீவிரவாதி(தேசபக்தர்களுக்கு தீவிரவாதி) ஆனான் என்பதற்கான மாற்றுப்பார்வை, இதை உங்களால் பார்ப்பது முடியாது தான், ஏனெனில் உங்கள் கண்களை மறைத்திருப்பது தேச பக்தி.... கொஞ்சம் என் பதிவை படித்துவிட்டு நீங்கள் பேசலாம், அதே மாதிரி எதற்கெடுத்தாலும் சாதிய அடைப்பில் என்னை அடைக்கும் முயற்சியையும் நீங்கள் முயற்சித்தால் கைவிடமுடியும், அதை விடுத்து எதற்கெடுத்தாலும் சாதிய அடையாளத்தில் அடைப்பதும் விமர்சிப்பவர்களின் பதிவை அரைகுறையாக படித்து குற்றம் சாட்டுவதும் தொடருமானால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

9:10 AM  
Blogger குழலி / Kuzhali said...

//நாளை தனி தமிழ்நாடு கேட்டு பெற்றுவிட்டாலாவது நாட்டுப்பற்று வருமா?? இல்லை அதிலிருந்து தனி வட மாவட்டங்களை கொண்ட நாடு கிடைத்தாலாவது உங்களுக்கு தேசப்பற்று வருமா? இல்லை இன்னும் மாவட்ட வாரியா நாடு பிரிந்தால் வருமா??
//
ஏன் இந்தியா என்று பிரிந்தீர்கள், அப்படியே இலங்கை, பர்மா, கீழைநாடுகள் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மாநிலங்களாக இருக்க வேண்டியது தானே?

9:12 AM  
Blogger குழலி / Kuzhali said...

//எப்ப தான் உங்களுக்கு தேசிய உணர்வு வரும்??
//
தேசபக்தி என்றால் என்ன என்று சொல்லுங்கள் முதலில், அதாவது எந்த இனக்குழு எப்படி அழிந்து போனாலும் சரி, எந்த மொழியின் மீது பெரும்பான்மை மொழி ஆதிக்கம் செலுத்தினாலும் சரி, எவன் கலாச்சாரத்தை எவன் அழித்தாலும் சரி, இந்தியன் என்று சொல்லிக்கொண்டே பம்பாயில் தமிழனை(தமிழன் என்பதற்காக) அடிடா என்றும், பெங்களூரிலே அடிடா என்றும், பீகாரி காரனை பம்பாயில் அடிடா ஆனால் எல்லாம் இந்தியா? இப்படியான போலி தேசியத்தை தான் நீங்கள் தேசப்பற்று என்றால் சத்தியமாக எனக்கு தேசப்பற்று வராது வராது வரவே வராது.

9:18 AM  
Blogger குழலி / Kuzhali said...

இனி தேசப்பற்று பற்றி பேசுவதற்கு முன் தேசபக்தி என்றால் என்ன என்று சொல்லுங்கள், முதலில் தேசபக்தியை வரையறுங்கள் பிறகு பேசலாம் எதுவென்றாலும்...

இதற்கான வரையறையை சொல்லாமல் நீங்கள் என்ன பேசினாலும் நான் இதற்கான வரையறை உங்களிடமிருந்து வரும்வரை நான் பேசத்தயாரில்லை.

9:24 AM  
Blogger குழலி / Kuzhali said...

//ஒரு வாதத்துக்காக Accepted. அதுக்கு அப்புறம் சண்டைப்போட்டு தனி தமிழ்நாடு வாங்கிட்டீங்கன்னு வச்சுக்குங்க, அட்லீஸ்ட் தனி தமிழ் நாடு மேலயாவது வருமா? இல்ல அப்பவும் வட மாவட்டக்காரங்களை மதுரைல ஓதைக்கராங்க? கன்னியாகுமரில ஓதைக்கறாங்க? எப்படிங்க தேசப்பற்றுவரும்னு கேட்ப்பீங்களா?? இது எங்க வரைக்கும் போகும்ன்னு நினைக்குறீங்க!!??
//
பிரிட்டிஷ்காரன் உதைத்ததை வாங்கிக்கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் குடிமகனாக இருக்க வேண்டியது தானே? என்னத்துக்கு முதல் இந்திய சுதந்திரபோர், லொட்டு லொசுக்கு எல்லாம்?

அது சரி ஜெய் முதலில் உங்கள் வரையறையில் தேசம் என்றால் என்ன? தேசப்பற்று என்றால் என்ன? அதை முதலில் என்போன்றவர்களுக்கு வரையறுங்கள், விளக்குங்கள் பிறகு பேசிக்கொள்ளலாம் மற்றதை.

6:39 PM  
Blogger குழலி / Kuzhali said...

//முதல்ல உங்க பதில் அடுத்து என் பார்வையில் தேசப்பற்று சொல்லப்படும். //
நீங்கள் தேசப்பற்று என்பது எனக்கு அபத்தமாக தெரியலாம், அதேபோல என்னுடையது உங்களுக்கு அபத்தமாக தெரியலாம், ஆதலால் முதலில் தேசப்பற்று எது என்பதை நீங்கள் வரையறுங்கள், அதிலிருந்து பேசலாம், அதை விடுத்து நீங்கள் ஒரு முனையிலிருந்து பேச நான் வேறு முனையில் இருக்க, இருவருக்கும் ஒரு பொதுப்புரிதல் வர முதலில் சொல்லுங்கள் எதை நீங்கள் தேசப்பற்று என்கிறீர்கள் என்பதை

10:36 PM  
Blogger குழலி / Kuzhali said...

ரியோ உங்கள் தேசப்பற்று வரையறைக்கு நன்றி, மற்றவர்களிடமிருந்தும் தேசப்பற்று வரையறைகளுக்காக காத்திருக்கின்றேன்...

//நாம் உள்ளுக்குள் அடித்துக்கொள்வது இருக்கட்டும், முதலில் வெளியே இருந்து ஒருவன் நம்மை அடிக்கிறான், அவனை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டாமா?//
அப்சல் இந்திய குடியுரிமை பெற்றவர்தானே? ஒரு சந்தேகத்துக்கு கேட்டேன், அவர் வெளியாள் இல்லையே? அப்போ அவர் வெளியிலிருந்து அடிக்கவில்லையே, உள்ளிருந்து தானே அடித்திருக்கிறார்? இல்லை அப்சல் என்ற முஸ்லீம் பெயர் கேட்டவுடன் வெளியாள் என்று முடிவு செய்துவிட்டீர்களா? ஒரு வேளை இந்திய குடியுரிமை பெற்ற முஸ்லீம்கள் எல்லாம் வெளியாளா உங்கள் பார்வையில்?

11:42 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://mahendranmahesh.blogspot.com/2006/10/blog-post_18.html

//உண்மையிலெயே தமிழ் மீது கலைஞருக்கு பற்று இருந்திருந்தால் பிற மொழி கலப்பு இல்லாத வசனங்களோடு வரும் படங்களுக்கு வரி விலக்கு என்று அறிவித்து இருக்கலாம். ஐந்து ஆண்டுகள் பிற மொழிக்கலப்பு இல்லாத படங்கள் வெளிவந்தால் பல ஆங்கில வார்த்தைகள் சாதாரணப் பேச்சு வழக்கில் இருந்து அழிந்து போகும். தமிழுக்குப் பல புது வார்த்தைகளும் கிடைக்கும். //

எண்ணக் குதிரைகள் நன்றாக ஓடியிருக்கிறது !

நீங்க இப்படி சொல்றிங்க, அதையே மருத்துவர் இராமதாசு சொன்னபோது ரஜினி ராம்கியோ, இட்லிவடையோ அவங்க வலைப்பதிவில் சைடு பாரில் போட்டு நக்கல் அடித்தார்கள்....

6:12 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://wethepeopleindia.blogspot.com/2006/10/blog-post_18.html

//குழலி ஏன் திரும்ப வரவேயில்லை என்று புரியவில்லை??!!!
//
சொல்லி சில மணிநேரங்கள் தானே ஆகின்றது, ஏனென்றால் இதையும் விட குழலிக்கு வேறு முக்கிய வேலை இருக்கலாம் அல்லவா?

//தேசியம் என் பார்வையில்:

ஒற்றுமையாய் இந்தியா என்னும் ஒரு குடைக்கு கீழே மத, இன, மொழி பாகுபாடின்றி வாழ நினைப்பதே தேசியம்!//
அதாவது நினைக்கிறது மட்டும் தான் தேசியமா?

சரி நீங்க நினைக்கிற மாதிரியா இருக்கு இந்திய தேசியம், நெஞ்சைத்தொட்டு சொல்லுங்க...

உங்களுக்கு நினைப்பு மட்டும் போதும் போல... சரி உங்க நினைப்புக்கு மாறாக இருக்கிற இந்திய தேசியத்தை என்ன செய்யலாம்...

சே... உங்ககிட்ட கேட்டேன் பாருங்க அது தான் நீங்க ஏற்கனவே சொல்லிட்டிங்களே.... இங்கே இலங்கைக்கானது தானே இந்தியாவிற்கும், அந்த பின்னூட்டம் இங்கே மற்றவர்கள் பார்வைக்கும், ஈழம் பற்றிய ஒரு கவிதைக்கு நீங்கள் எழுதியது
////

உன் உதிரமும்
உயிரை உலுக்குதேடா
//

இதற்கு முடிவில்லை குழலி.

இருவரையும் ஒன்று சேர்க்க பாலமில்லை. அவர்களுக்கு கூட்டாய் வாழ எண்ணமும் இல்லை.

இது ஒரு இனத்தின் அழிவிலே தான் அடங்கும் என்றே என்க்கு தோன்றுகிறது!

இது ரத்தவெறி யுகம்!!!
//
அதாவது கூட்டமைப்பிலே அடங்கி ஒடுங்கி வாழ்வெதென்றால் வாழ் இல்லையென்றால் ஒரு இனம் அழிந்து அடங்கட்டும் ஆனால் பிரிந்து மட்டும் வாழமுடியாது, என்ன எழவுங்க இது?

சரி நேராவே கேட்குறேன் நீங்க நினைப்பது மாதிரியான இந்தியா என்னும் ஒரு குடைக்கு கீழே மத, இன, மொழி பாகுபாடின்றி தான் இந்திய தேசியம் இருக்கின்றதா? அப்படியில்லாத இந்தியாவில் என்ன செய்யலாம், ஈழத்துக்கு சொன்னிங்களே அந்த மாதிரி ஏதாவது ஒரு இனத்தின் அழிவில் தான் முடியும் என்று நினைக்கிறீர்களா?

அப்புறம் ஆன்னா ஊன்னா இந்திய ஊடகங்களில் வலைப்பக்கங்களிலிருந்து ஆதாரங்களை அள்ளிதெளிக்கின்றீர், இது எப்படித்தெரியுமா? பெரியார்தாசன் ஒரு பேச்சில் கிண்டலடித்திருப்பார், ஒரு கிறுத்துவர்அவரிடம் பிரசங்கம் செய்தபோது பெரியார்தாசன் அவரிடம் இதை எப்படி நம்புவது என்று கேட்டாராம் அதான் பைபிள்ல போட்டிருக்கேன்னாராம், சரி பைபிளை எப்படி நம்புறது அப்படின்னதுக்கு சொன்னாராம், பைபிள் தான் எல்லாம், அதனால் பைபிளை நம்பு அப்படின்னாராம்... அது போல ஆன்னா ஊன்னா இந்திய ஊடக காஷ்மீரக்கட்டுகதைகளை அள்ளிவிட்டுகொண்டிக்காதீர், கூகிளில் தேடினால் எத்தனையோ கிடைக்கின்றது, இந்தியா காஷ்மீர பிரச்சினையில் செய்த அய்யோக்கியத்தனங்கள் உட்பட, நீங்களும் அந்த கிறுத்தவர் போல, அவருக்கு பைபிள் என்றால் உங்களுக்கு இந்திய ஊடகங்கள்... முதலில் கண்மூடித்தனமான இந்திய பற்றை கொஞ்ச நேரம் தள்ளிவைத்துவிட்டு யோசியுங்கள், இல்லையென்றால் உங்களின் இந்திய பைபிளையே கட்டிக்கொண்டு இருங்கள்...

8:38 AM  
Blogger குழலி / Kuzhali said...

உங்களின் இந்த பதிவில் உள்ள பல அபத்தங்களை எழுத தற்போது நேரமில்லை,. உங்கள் வாதங்களில் உள்ள ஒரு சில ஓட்டைகள் இங்கே...மற்றவை நேரம் கிடைக்கும் போது

//தாங்க முடியாத பிரச்சனை வரும்போது ஏன் கோர்ட்டுக்கோ அல்லது போலீஸிடமோ ஏன் போய் புகார் செய்யவில்லை!!
//
சென்னையில் உள்ளாட்சி தேர்தலில் அடிவாங்கியவர்கள் ஏன் சாலைமறியல் செய்தனர், போலிசிடம் தகராறு செய்தனர்? புகார் கொடுத்துவிட்டு இருக்க வேண்டியது தானே? இத்தனை பெரிய கட்சியே போலிசிடம் ஒன்னும் செய்யமுடியவில்லையாம்

//எதுக்காக தன் பெயரில் பாராளமன்ற தாக்குதலுக்கு உபயோகப்படுத்திய காரை(DL-03 CJ-1527, purchased by Afzal from Lovely Motors in Karol Bagh, Delhi) வாங்கினார், //
பாராளுமன்றத்தை தாக்குவதற்கு எந்த லூசாவது தானே தன் பெயரில் கார்வாங்கித்தருவானா? சும்மா திரைப்படத்தில் கூட காரை திருடிக்கொண்டு வந்து கடத்துவது என்று காண்பிக்கும்போது பெரிய திட்டம் போட்டு அதன் பின் பாரளுமன்றத் தாக்குதலுக்கு மட்டும் தன் பெயரில் வாங்கிய காரை தர்றாராம்,,, அந்தளவுக்கு அப்சல் என்ன பப்பாவா? கேட்கும்போதே உங்களுக்கு கேணத்தனமா தெரியலை?

//தாக்குதலுக்கு முன் அப்சல் முகமதுக்கு ஏன் பல முறை போன் செய்தார், போதாகுறைக்கு சரியாக ஒரு நிமிடத்துக்கு முன் தாக்குதலில் ஈடுப்பட்ட ஒரு தீவிரவாதி அப்சலுக்கு போன் செய்திருக்கிறார், அதே போல் அப்சலும் அந்த தீவிரவாதியை தன் செல்போனிலிருந்து அழைத்திருக்கிறார்!!! சும்மா டைம் பாஸ்க்கு கால் பண்ணியிருப்பரோ??!!//
எல்லா ஆதாரங்களையும் விட்டுட்டுதான் செய்வாங்க பாராளுமன்றத்தை தாக்கும் அளவிற்கு கிரிமினல்ங்க, ஏன் தெரியாதா கடைசியாக எந்த எண்ணை கூப்பிட்டார்கள் என்று பார்ப்பார்கள் என்று? மாறன் அப்படினு ஒருத்தர் தமிழர் விடுதலைப்படை தலைவர், அதான் கன்னட ராஜ்குமார் கடத்தல் மூளை, அவரை சுற்றி வளைத்து பிடித்த போது முதலில் அவர் உடைத்தது சிம்கார்டை தான்.

இப்போதும் சொல்கிறேன் மேலே நான் இதை சொன்னதால் அப்சலுக்கு இதில் தொடர்பில்லை என்று ஆணித்தரமாகவெல்லாம் சொல்ல வரவில்லை, ஆனால் கேக்குறவன் கேணப்பயலா இருந்தா என்ற அளவிற்கு இருக்கும் இந்த வாதங்களையெல்லாம் படிச்ச சிரிப்பு தான் வருது...

8:49 AM  
Blogger குழலி / Kuzhali said...

//குழலி ஒரு 20 பேர் இருக்கும் கூட்டு குடும்பத்துலயே ஆயிரத்து எட்டு பிரச்சனைகள் வருது. 100 கோடி மக்கள் உள்ள இந்திய நாட்டில சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதை நாம் தான் சரி செய்யனும். அதுக்கு தனி குடிதனம் போனா வேலைக்கு ஆகுமா??//
ஏன் இந்தியா என்ற குடும்பம் பிரிட்டிஷ் குடும்பத்திலிருந்து பிரிந்தது? இப்போ 20 பேர் குடும்பமென்றால் பிரிட்டிஷ் குடும்பம் 40 பேராச்சே?

//இன்னைக்கு அடங்கி ஒடிங்கியா வாழறீங்க குழலி??!! ஓவரா திங்க் பண்ணறீங்க போல! இன்று தமிழன் நினைப்பது தான் இந்தியாவின் சட்டம்! தமிழன் நினைத்தால் இந்தியாவில் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும் என்ற நிலைதான் உள்ளது!! இதை மறுக்க முடியாது என்று நினைக்கிறேன். ஒரு தமிழனுக்கு கிடைக்கும் மதிப்பு மற்ற மாநிலத்தாருக்கு கிடைக்குதா குழலி??!!
//
ஆகா காஷ்மீரிலிருந்து தமிழ்நாட்டுக்கு தாவியாயாச்சா? அப்போ பெங்களூர்ல கன்னட ராஜ்குமார் செத்தப்ப தமிழங்க பயந்து செத்தாங்களே ஏன்? உடனே பேசி சரிபண்ணனும்னு சொல்லாதிங்க...அது சரி... அப்போ காவிரித்தண்ணியை அனுப்பி வைங்களேன்... பேசிக்கிட்டே தான் இருக்காங்க, உச்சநீதிமன்றம் தீர்ப்பே கொடுத்தது தண்ணி வந்துச்சா,அதுக்கு பதில் ஆயிரம் தமிழர்களின் உயிரற்ற உடல்களும் ஆயிரம் தமிழ்பெண்கள் வன்புணரப்பட்டும் தான் வந்தார்கள், anyway I made my point அதனால் படிக்கிறவங்க முடிவு செய்துக்கிடட்டும்

9:40 AM  
Blogger குழலி / Kuzhali said...

//அழும் பிள்ளைக்குத்தானே சாப்பாடு?? நம்ம தலைவர் அழவில்லை, தண்ணி கிடைக்கல... பதவி இருந்தும் பேசாம இருந்தது ஏன்??
//
நியாயமாக சேரவேண்டியதைக்கூட அரசியல் மிரட்டல்கள் செய்துதான் பெறவேண்டுமோ இந்திய தேசியத்தில், அரசியல் மிரட்டல்கள் செய்ய முடிந்தவர்கள் செய்கிறார்கள் அரசியல் மிரட்டல்கள் செய்ய முடியாதவர்கள் ஆயுதங்களை தூக்குகிறார்கள்.

//கடந்த 7 வருடங்களா மத்தியில் ஒரு முக்கிய தலையா இருந்தும், ஒரு தடவை கூட தட்டிக்கேட்காத தலைவர்கள், மத்திய மந்திரிகள்!! (சரியா? தவறா??)
//
அதிகபட்சமாக ராஜினாமா தான் செய்ய முடியும், இப்போது கூட்டணி ஆட்சியிருப்பதால் சொல்கிறீர்கள், சிறிது ஆண்டுகளுக்கு முன் மத்தியில் தனிக்கட்சி ஆட்சி இருந்ததே அப்போது என்ன செய்யமுடிந்தது, அதிகபட்சமாக வாழப்பாடி ராமமூர்த்தி தன் பதவியை ராஜினாமா செய்தாரே அவ்வளவுதான் செய்யமுடியும்.

மத்திய ஆட்சியில் பிடிமானம் இல்லாத காஷ்மீர் கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?

7:09 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://thoughtsintamil.blogspot.com/2006/10/2006.html

//1. மாநிலத் தேர்தல் ஆணையம் - இந்த அமைப்பின்மீது நாம் நம்பிக்கை வைக்க முடியாது. உள்ளாட்சித் தேர்தல்களையும் மத்திய தேர்தல் ஆணையமே நடத்தவேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டுவருமாறு நாம் போராடவேண்டும்.
//
பத்ரி, இது கொஞ்சமே கொஞ்சம் மீதியிருக்கும் மாநில அதிகாரங்களையும் பறிப்பது போலாகும், மாநில தேர்தல் ஆணையும் தவறு செய்கிறது என்பதற்காக அதன் அதிகாரத்தை பிடுங்கி மத்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்தால் மத்திய தேர்தல் ஆணையமும் அதையே செய்தால் அதன் அதிகாரத்தை பிடுங்கி எதனிடம் அளிப்பது? இன்றைய மத்தியதேர்தல் அதிகாரிகள் பக்க சார்பில்லாமல் இருக்கிறார்கள், வருங்காலத்தில் பக்க சார்புள்ள அதிகாரங்கள் வந்தால் என்ன செய்யமுடியும்? அதற்கு பதிலாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் குறுக்கீடற்ற அதிகாரங்கள் வழங்கப்படுதல் வேண்டும்.

//2. மின்னணு வாக்குப்பதிவு - மேற்படி மாறுதல் நடக்கிறதோ இல்லையோ, சட்டத்திருத்தம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு நடத்தவேண்டும், அதற்கு செலவுகள் அதிகம் ஆனாலும் பரவாயில்லை என்பதை முன்வைத்துப் போராடவேண்டும். இதன்மூலம் வாக்குச்சீட்டு களவாடுதல், கொத்து கொத்தாகக் கள்ள வாக்கு போடுதல், எதிர்க்கட்சி வாக்குகளை செல்லாததாகச் செய்தல் போன்ற குற்றங்கள் குறையும்.
//
ஆமோதிக்கிறேன்

//3. மீண்டும் மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் முறையைக் கொண்டுவரப் போராடவேண்டும்.
//
இதை என்னளவில் ஏற்க இயலாது, சென்ற இரண்டு முறைகளாக உள்ளாட்சி அமைப்புகளில் நடந்தேறிய கூத்துகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள், கவுன்சிலர்கள் பெரும்பாண்மை வேறு கட்சிக்கிருக்க, தலைவர்கள் வேறு கட்சியை சேர்தவர்களாக இருந்த போது அத்தனை நகராட்சியின் அத்தனை தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டு பல நகராட்சி பேரூராட்சிகள் எந்த வேலையும் நடைபெறவில்லை, கரூர் போன்ற நகராட்சி இதற்கு மிகச்சிறந்த உதாரணம், முதல்வர் ஜெயலலிதா இருக்க, பெரும்பாண்மை சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவாக இருந்தால் என்ன கூத்து நடக்குமோ அது தான் நடந்தேறியது இந்த முறையினால், எனவே நேரடியாக மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுப்பதை நீக்கியது சரியானதே.

நன்றி

11:45 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://badnewsindia.blogspot.com/2006/10/blog-post_23.html

//A/C ல் அமர்ந்து கொண்டு, பொழுது போவதர்க்காக, கோர்வை தமிழில் எழுதினால் மட்டும் போதாது நண்பர்களே.
முடிந்தவர்கள் களம் இறங்கி field-work செய்ய வேண்டும். முடியாதவர்கள், field-work செய்பவர்களுக்கு முடிந்த உதவி செய்ய வேண்டும்.
//
இந்த பதிவெழுதி அதில் இப்படியான அறிவுரைகளை அள்ளி வழங்கும் நேரத்தில் இதற்கான நேரத்தையும், இதற்கு ஆன செலவையும் நீங்கள் சொன்ன ஃபீல்ட்-ஒர்க்கை செய்திருக்கலாமே? நீங்கள் ஏற்கனவே ஃபீல்ட்-ஒர்க் செய்பவரென்றால் இதை எழுதிய நேரத்தில் வலைப்பதிவில் செலவழிக்கும் நேரத்தில் இன்னும் கொஞ்சம் கூட ஃபீல்ட்-ஒர்க் செய்திருக்கலாமே?

நீங்கள் யார் எவரென்றெல்லாம் எனக்கு தெரியாது, சில பிரச்சினைகளை வெகுசன ஊடகங்கள் ஒதுக்கி வைத்துள்ளன, வெகுசன ஊடகங்களில் உள்ள உயர் சாதி ஏகாதிபத்தியத்தினால் வரையறை செய்யப்பட்ட சில எல்லைகளை இன்று தமிழகத்திலும் உயர்சாதியினரின் ஆதிக்கம் இல்லாத பத்திரிக்கைகளிலும் எதிரொலிக்கின்றன, இந்த பிரச்சினைகளை பொது தளத்தில் பேசவே கூடாது, கல்யாணத்திலிருந்து கருமாதி வரை சாதியை வைத்து தேய்த்துக்கொண்டு சாதிப்பற்றி பொதுவில் பேசுவது கேவலம் என்று உருவாக்கி வைத்துள்ள புனித பிம்ப முயற்சிகள் இங்கே உடைத்தெறியப்படும் போது இங்கு அந்த பிரச்சினைகளைப்பற்றி பேசுபவர்களை விலக்க வேறு மாதிரியான உத்திகள் கையாளப்படுகின்றன, அதில் நீங்கள் மேலே சொன்ன ஒன்றும் கூட, நீங்கள் வேண்டுமென்று கையாண்டீர்களா அல்லது ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் புனித மயக்கத்தில் வந்ததா என்பது எனக்கு தெரியாது...

6:08 AM  
Blogger குழலி / Kuzhali said...

கட்டுரை நன்றாக வந்திருக்கிறது, வாழ்த்துகள்.

//"அங்க தண்ணி பிரச்சனை ஆச்சே??!!" என்று பயப்படுத்துவது அதிகம் இருந்தது. இப்ப அந்த பிரச்சனை ஓர் அளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது.
//
நெசமாவா? போன முறை பதிவில் இது மாதிரி நீங்க சொன்னிங்களே என்று வேளச்சேரியில் இருந்த நண்பனை என்னடா தண்ணி பிரச்சினையை அம்மா தீர்த்துட்டாங்களாமே என்று கேட்டபோது எவன் சொன்னது, என்ன நக்கலா என்று எகிற ஆரம்பித்துவிட்டான், இப்போ எனக்கு சென்னையில் தண்ணீர் பிரச்சினை தீர்ந்ததா? இல்லையா? சரியான ஒரு முடிவா சொல்லுங்க....

6:33 PM  
Blogger குழலி / Kuzhali said...

// உள்ளே நுழைந்தவர் சுற்றி அமர்ந்திருக்கும் எல்லோரையும் பார்த்தவுடன் அவசரமாக நெற்றியில் இருக்கும் விபூதியை அழித்தார். கருணாநிதியின் அருகில் அமர்ந்து "எல்லாரும் இருக்காங்க உஷார்னு ஒரு SMS அனுப்பக் கூடாதா? நம்ப மட்டும் தான்னு நெனச்சு வர வழில சிவன் கோயிலுக்கு போய் அர்ச்சன பண்ணி சுண்டல் கொண்டு வந்துட்டேன்" என்று அசடினார்.
//
தோடா வந்துட்டாரு வீரமணிக்கு விபூதி எடுத்துக்குடுத்தவரு.... இன்னா இது காமெடி தானேனு சொல்ல போறிங்க, ஏன் அப்படியே காஞ்சி காமக்கோடிக்கு கஞ்சாவோ வேற ஏதோ ஒரு எழவு வாங்கித் தந்ததா காமெடி எழுத முடியாதோ?

4:31 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://badnewsindia.blogspot.com/2006/10/blog-post_26.html

// உள்ளே நுழைந்தவர் சுற்றி அமர்ந்திருக்கும் எல்லோரையும் பார்த்தவுடன் அவசரமாக நெற்றியில் இருக்கும் விபூதியை அழித்தார். கருணாநிதியின் அருகில் அமர்ந்து "எல்லாரும் இருக்காங்க உஷார்னு ஒரு SMS அனுப்பக் கூடாதா? நம்ப மட்டும் தான்னு நெனச்சு வர வழில சிவன் கோயிலுக்கு போய் அர்ச்சன பண்ணி சுண்டல் கொண்டு வந்துட்டேன்" என்று அசடினார்.
//
தோடா வந்துட்டாரு வீரமணிக்கு விபூதி எடுத்துக்குடுத்தவரு.... இன்னா இது காமெடி தானேனு சொல்ல போறிங்க, ஏன் அப்படியே காஞ்சி காமக்கோடிக்கு கஞ்சாவோ வேற ஏதோ ஒரு எழவு வாங்கித் தந்ததா காமெடி எழுத முடியாதோ?

4:32 AM  
Blogger குழலி / Kuzhali said...

//நீங்க வீரமணி சார், கொள்கையை பின்பற்றவரா? தீபாவளி கொண்டாடி போடோ போட்டிருந்தீங்க?
//
இதான் இதான் பிரச்சினையே, வீரமணியை கிண்டல் அடிப்பதை கேட்டால் உடனே நான் அவர் கொள்கையை பின்பற்றுபவனா என்று கேட்கின்றீர்? ஏன் கொள்கையை பின்பற்றாமல் தவறாக செய்யப்படும் கிண்டலை கேட்கக்கூடாதா?
//குழலி சார்,
எப்பவுமே ஒரு 'hyper state' ல தான் இருப்பீங்களா?
சும்மா டமாசு சார்.
//
நீங்க வீரமணியை செய்திருப்பதற்கு பெயர் டமாசா? டமாசு எல்லோருக்குமே வரும் எனக்கும் வரும்.

9:51 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://thoughtsintamil.blogspot.com/2006/10/blog-post_28.html

//கல்யாணம் நடத்துவதற்கும் போலீஸ் அனுமதி தேவையா.//
கல்யாணம் நடத்த அனுமதி தேவையா என்று தெரியாது, ஆனால் கல்யாண ஊர்வலம் நடத்த கண்டிப்பாக காவல்துறை அனுமதி வேண்டும், இதை 99% பேர் அனுமதி வாங்காமல் தான் செய்கின்றனர், ஆனால் அதை காவல்துறை கண்டுகொள்வதில்லை... உள் அரங்கு விழாக்களுக்கும் அனுமதி வாங்கவேண்டுமென்று தான் நினைக்கிறேன், பெரும்பாலான நேரங்களில் அதை யாரும் எடுப்பதில்லை, ஆனால் சரியாகத்தெரியவில்லை



//திமுகவுக்கோ அதிமுகவுக்கோ சார்பில்லாமல் இதைப் பற்றி பேசவே கூடாது என்ற விதத்தில்தான் இந்த விஷயம் அணுகப்படுகிறது.//
என்ன செய்வது சுந்தர் அண்ணே, எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சிலரின் யோக்கியதை அப்படி இருக்கின்றது, 2006ல் உள்ளாட்சி தேர்தல் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க கருத்தரங்கு நடத்த தெரிந்த 'சோ' போன்றவர்களுக்கு 2001ல் நடத்த தெரியலையே(எனக்கு தெரிந்து அப்படி எந்த கருத்தரங்கும் 'சோ' நடத்தவில்லை), அப்படி பார்த்தால் இவர்களுக்கெல்லாம் உள்ளாட்சி தேர்தல் வன்முறை பிரச்சினையில்லை, ஆனால் அந்த வன்முறையை திமுக நடத்துவது தான் பிரச்சினை என்னும் பொழுது எதிர்ப்பாளர்களின் மீதும் ஒரு அலுப்பு வருவது சகஜம்தான் விடுங்க....

//மக்களுக்கு இலவச திட்டங்களை அள்ளி வழங்கி விட்டு அரசியல்/அதிகார துஷ்பிரயோகம் செய்தால் ஓட்டுக்கு பாதிப்பில்லை என்று நினைத்து இருந்தால், பாவம் கருணாநிதி, அதற்கெல்லாம் மச்சம் வேண்டும். //
ஜெயலலிதாவிற்கு 2006 சட்டசபை தேர்தலில் சென்னையில் இருந்த மச்சம் கருணாநிதிக்கு இல்லாமலா போய்விடும்? விடுங்கண்ணே....

4:50 AM  
Blogger குழலி / Kuzhali said...

கருணாநிதி என்ற மனிதனின் இருப்பே சிலருக்கு இத்தனை எரிச்சல் என்றால் அதற்காகவேனும் இந்த மனிதன் நூறாண்டுகள் வாழவேண்டும். அந்த மனிதன் இன்னும் சாகவில்லையே என்ற ஒரு மட்டமான சிந்தனை இந்த பதிவில் வஞ்சப்புகழ்ச்சியாக வெளிவருகின்றது, இந்த பதிவிற்கு பின்னூட்டமிட்டவர்களுக்கு இதுவாவது புரிந்ததா? ஹரிகரா உனக்கு மனசாட்சியே இல்லையா?

12:32 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://harimakesh.blogspot.com/2006/10/37_29.html

12:32 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://cdjm.blogspot.com/2006/10/blog-post_31.html

மிகவும் துக்ககரமான செய்தி, உங்கள் நண்பரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

உலகிலேயே மிக ஆபத்தான தொழில் என்பதில் கட்டுமரம் மற்றும் படகுகளில் மீன் பிடித்தல் முதலிடத்தில் இருப்பதாக எங்கேயோ படித்தேன், மீன் பிடித்தல் என்பதை இன்னும் நிறைய முறைபடுத்த வேண்டியுள்ளது என்று அந்த கட்டுரையில் படித்தேன், தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளில் இலங்கை இராணுவத்தை எதிர்கொள்வதும் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கின்றது.

4:26 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://balaji_ammu.blogspot.com/2006/11/blog-post.html

ஏற்கனவே இந்த சுட்டிகள் இதே பதிவரின் பதிவில் கொடுக்கப்ப்டிருந்தாலும் தற்போது மீண்டும் தரவேண்டியதாக இருக்கின்றது, ஏனெனில் சலிக்காமல் பொய்கள் பரப்பப்படும்போது அதை சலிக்காமல் எதிர்க்கும் சக்தி தேவைப்படுகின்றது ஆனாலும் ஒரு சந்தோசம் இப்போதாவது பார்ப்பனீயம், இடஒதுக்கீட்டின் நியாயங்கள் அதை எதிர்ப்பவர்களின் வாயாலே வருவதே இடஒதுக்கீட்டு ஆதரவாளர்களின் தொடர்முயற்சிக்கான வெற்றி...

இட ஒதுக்கீடு - தலைமுறை தலைமுறையாகவா?

மற்றவர்களின் க்ரீமிலேயருக்காக குரல் கொடுப்பவர்கள் உயர்சாதி க்ரீமிலேயர்கள் உயர்சாதி ஏழைகளை அமுக்கும் அய்யோக்கியத்தனத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது செலக்டிவ் அம்னீசியா போல

உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா?

8:10 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://etamil.blogspot.com/2006/11/kalki-cartoon.html

2001ல் கல்கி போட்ட கார்ட்டூன் எதுனா இருந்தா எடுத்து போடுங்க, அதுக்காக 2006ல் நடந்தது நியாயம்னு சொல்லலை, 2001க்கு 2006 கணக்கு சரிதான் போ என்றும் சொல்லவில்லை, ஆனால் நடுநிலைவாதிகளின் யோக்கியதையை தெரிந்து கொள்ளலாமே அதற்கு தான்.

8:31 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://tamilamudhu.blogspot.com/2006/11/blog-post.html

"பொற்காலங்களும் இருண்டகாலங்களும்" என்ற நூலில் (ஆசிரியர் பொ.வேல்சாமி, காலச்சுவடு பதிப்பகம்) களப்பிர்ர்களின் காலம் பற்றியும் களப்பிரர்களின் எழுச்சி அவர்களின் காலம் எப்படி வரலாற்றை எழுதியவர்கள் திரித்து எழுதியிருக்கிறார்கள் என்பது பற்றி உள்ளது, நிலவுடமை சமூகத்தில் விளிம்பு நிலை மக்களின் எழுச்சிதான் களப்பிரர்கள் காலம், அது உண்மையில் விளிம்பு நிலை மக்களுக்கான பொற்காலம், நிலவுடமையாளர்களுக்கும் பார்ப்பனியத்தை தாங்கி பிடித்தவர்களுக்கும் இருண்டகாலமென்று காரணிகளுடன் விவரித்திருப்பார், இது பற்றி விரிவாக பதிவிட வேண்டுமென நினைத்துள்ளேன்.

நன்றி

10:27 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://muthuvintamil.blogspot.com/2006/11/blog-post.html

ஹரிகரரே, வீரன் சுந்தரலிங்கம் பிரச்சினை பற்றி எரிந்த போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன், அந்த நேரத்தில் நடந்த சம்பவம் இது, தேனீர் கடையில் ஒரு பெரிசு பேசியது கட்டபொம்மனுக்கு குதிரை கழுவியவன் பெயரைல்லாம் பஸ்க்கு வைக்கிறான் **** கருணாநிதி(அந்த **** கருணாநிதியின் சாதி) என்று ஆக்ரோசமாக பேச ஒரு நாலைந்து ஆட்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள், அப்படி ஆக்ரோசமாக பேசிய ஆளின் தோற்றம் பஞ்சப்பராரி மாதிரி இருந்தது, மேலே சட்டை இல்லை, பார்த்தால் சிங்கிள் டீக்கு சிங்கி அடிக்கிற மாதிரி (இது மாதிரி இருப்பவர்களின் நிலையை கிண்டலடிப்பது என் நோக்கமில்லை, ஆனால் இவரின் நிலைக்கு என்ன மசுரு சாதிப்பெருமை வேண்டிக்கிடக்குது, நல்ல நிலைமையில் இருந்தா பேசலாமானு எகனை மொகனையா கேட்ககூடாது, எந்த விதத்தில் இவர் சாதியில் கீழாக நினைப்பவர்களை விட உயர்ந்தவர் என்ற ஆத்திரமே) இருந்தவர் அன்று இன்னும் எத்தனையோ கேவலமாக பேசினார், இந்த ஆட்களையும் சேர்த்தே மாற்ற வேண்டியதுள்ளது, பாவம் கருணாநிதியை மட்டும் தாக்கோ தாக்குனு தாக்குறாங்க....

5:48 AM  
Blogger குழலி / Kuzhali said...

அந்த பெரிசு மாதிரியான ஆட்களால் வீரன் சுந்தரலிங்கம் போன்றோரின் வீரச்செயல்களை கூட ஏற்றுக்கொள்ள இயலவில்லை....அது போல சிலர் இங்கே பேசிக்கொண்டிருக்கிறார்கள்

5:50 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://nunippul.blogspot.com/2006/11/blog-post_07.html

//சாதி, அதன் உட்பிரிவுகள் என்று இந்துமதத்தில் ஆயிரம் வகைகளைக் கண்ட எனக்கு, இவர்கள் இந்த சண்டைகள் எங்கும் மனிதர்கள் ஒன்றே என்ற புரிதலை தந்தது.//

//மனிதர்கள் எல்லாருமே ஒண்ணுதான்னு இப்ப நல்லாப் புரிஞ்சுருச்சு:-) //

ஆமா துவேசம் எல்லா மதத்திலும் இருக்குது, மனுசங்க எல்லோரும் ஒரே மாதிரிதான், அதனால சும்மா இந்து மதத்தில் சாதியிருக்கே, ஆனால் எப்போ பாரு இந்து மதத்தில் சாதியிருக்கே சாதியிருக்கேனு அலட்டிக்கிறாங்க ரொம்பத்தான், என்னங்க உஷா மற்றும் துளசியக்கா நான் சொன்னது சரிதானுங்களே...

என்ன எழவு பெந்தகோஸ்தே நாளைக்கே மனசு மாறினா கத்தோலிக்கரா மாறிடலாம், கத்தோலிக்கர் மனசு மாறினா ஏழாவது சர்சு, எட்டாவது சர்ச்சுனு மாறிக்கலாம், ஆனா மனசு மாறி மதம் மாறினாலும் எழவு பொறக்கும்போது ஒட்டிக்கிட்டு வந்த சாதி மட்டும் மாறாது ஆனா இதுக்கெல்லாம் அலட்டிக்க கூடாது மனுசங்க எல்லா இடத்திலேயும் ஒரே மாதிரிதான்னு எனக்கு புரிஞ்சிடுச்சி

எதுக்கு வம்பு நானும் போட்டுடறேன் :-)))))

நன்றி

11:15 PM  
Blogger குழலி / Kuzhali said...

//இது வருத்தமே தவிர இதுக்கெல்லாம் அலட்டிக்கக்கூடாது என்ற தொனி என் பதிவிலேயோ, துளசியின் பதிலிலேயோ எங்கும் என் ஊனக்கண்களுக்குப் படவில்லை.
//
ஹி ஹி நான் என்ன செய்றது அதுக்கு, நானும் கூட நீங்க அப்படி சொன்னதா சொல்லலையே, நானே தானே சொன்னேன்

//சாதி, அதன் உட்பிரிவுகள் என்று இந்துமதத்தில் ஆயிரம் வகைகளைக் கண்ட எனக்கு, இவர்கள் இந்த சண்டைகள் எங்கும் மனிதர்கள் ஒன்றே என்ற புரிதலை தந்தது.//
//குழலி,
பிரிவினையும் துவேஷமும் எல்லா மனிதர்களிடமும் ஒன்று போலத்தான் இருக்கிறது என்பது நான் சொல்ல வந்தது.//
அட விடுங்க இதில் என்ன இருக்கு அலட்டிக்க, இப்போ ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒன்னுதான்னு பொதுமைபடுத்தி சொல்லும்போதே வளர்ப்புமகன் திருமணமும் கருணாநிதி குடும்பத்தின் திருமணம் ஒன்றாகிவிடுகிறதல்லவா? ஜெயலலிதாவின் ஊழலும், கருணாநிதியின் ஊழலும் ஒன்றாகிவிடுகிறதல்லவா? தர்மபுரி பஸ் எரிப்பும் கருணாநிதியின் அட யாராவது எடுத்து குடுங்கப்பா.... அதுமாதிரிதான் விட்டு தள்ளுங்க....

//உட்பிரிவுகளிலும்
பிறருக்கு புரியாத தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் என்பது எல்லா இடங்களிலேயும் இருக்கிறது என்பதை மறுப்பீர்களா? //
அட விடுங்க உட்பிரிவுகளிலேயே தாழ்ச்சி உயர்ச்சி இருக்கும்போது வேற்று சாதிகளுக்கிடையே இல்லாமலா இருக்கும், இதெல்லாம் மனித இயல்பு, என்னங்க சரிதானா?

சரி ஏன் சீரியஸ் ஆயிட்டிங்க? நான் தான் ஸ்மைலி போட்டிருந்தேனே கவனிக்கலையா? :-)))

1:05 AM  
Blogger குழலி / Kuzhali said...

//துளசி, உழக்கில் கிழக்கு மேற்கு பார்க்கும் சமாச்சாரம்தான் இது :-) //
அடடே நான் ஏதோ ஒரே கல்லுல ரெண்டுமாங்கா, வாழைப்பழத்தில ஊசி கதையோனு நினைச்சேன் :-)

1:19 AM  
Blogger குழலி / Kuzhali said...

சரிங்க யாரும் தூங்கி எந்திரிச்சி வர்றதுக்கு முன்னாடி நான் அப்பீட் ஆயிடறேன், வேறொரு நாள் சந்திப்போம்...

நன்றி

1:36 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://sivabalanblog.blogspot.com/2006/11/blog-post_09.html

//அவருடைய பிறப்பை மட்டும் வைத்து அவரிடம் பெரியார் பற்று இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர் பிராமணீயத்தை முழுமையாக உள்வாங்கிக்கொண்ட நவபிராமணர். //

இந்த பதிவையும் அதிலுள்ள எல்லா பின்னூட்டங்களையும் பொறுமையாக படித்தேன், என் கருத்து எங்கே எதிலே பச்சக்கென்று ஒத்துவருகின்றது என்று பொறுமையாகவே படித்தேன், மேற்கண்ட வரிகள் நீண்ட காலமாக இளையராசா மீது எனக்கு இருந்த கருத்தை அப்படியே கூறியது. இங்கே இளையராசா மட்டுமல்ல, பலரும் நவீன பிராமணர்களாக மாறத்தான் துடிக்கிறார்கள்.

10:47 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://idlyvadai.blogspot.com/2006/11/blog-post_11.html

//எந்த தமிழ் பத்திரிக்கை சூப்பர்//
ஒரு வாக்குபதிவு வலது பக்கத்தில் இருக்கே, அதில் இது எதுவுமில்லை என்று ஒன்றையும் சேர்க்கவும்...

அப்புறம் துக்ளக்குக்கு புரமோஷன் போலிருக்கு, புரமோஷன் துக்ளக்குக்கு மட்ட்டும் தானோ? :-)

நன்றி

//எந்த தமிழ் பத்திரிக்கை சூப்பர்//
ஒரு வாக்குபதிவு வலது பக்கத்தில் இருக்கே, அதில் இது எதுவுமில்லை என்று ஒன்றையும் சேர்க்கவும்...

அப்புறம் துக்ளக்குக்கு புரமோஷன் போலிருக்கு, புரமோஷன் துக்ளக்குக்கு மட்ட்டும் தானோ? :-)

நன்றி

10:51 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://aalamaram.blogspot.com/2006/11/blog-post_116316878461481430.html

// வலைப்பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் வருகிற பார்ப்பனீய சிந்தனைகளின் வடிவங்களும் அவதாரங்களும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையின் விளைவு. எத்தனை விதமான பதிவுகள்? சாதி, மதவெறியை ஆதரித்து சொந்த பெயரில், புனைபெயரில், பின்னூட்டமிட போலிபெயரில் என எத்தனையோ வலைப்பதிவுகள். அப்பப்பா எவ்வளவு பெரிய பார்ப்பனீய தற்காப்பு முயற்சிகள். சாதியாதிக்க பார்ப்பனீய எதிர்ப்பு விவாதங்களின் போது வழக்கமான திசை திருப்பல்கள்களாக கருணாநிதிXஜெயலலிதா அரசியலை இழுப்பது இதில் ஒரு வகை. திராவிட ஆட்சியால் தான் எல்லாம் கெட்டுப்போனது அதற்கு முன்னர் எல்லா மக்களும் சமமாக வாழ்ந்தனர் என்பது போன்ற மாய(மடத்)தோற்றம் உருவாக்கும் பதிவுகள் இன்னொரு வகை. இது எப்போதோ நடந்தது இப்போது காலம் மாறிவருகிறது எதற்கு சாதி மதம் பற்றிய சர்ச்சை என எத்தனை கூப்பாடு என எத்தனை முயற்சிகள் அடடா. இந்த பார்ப்பனீய ஆதரவு பணியை "படித்த" வலைப்பதிவாளர்கள் செம்மையாக செய்து வருகிறார்கள். //
திரு இப்படிப்பட்ட ஆட்களை சமாளிப்பது கூட பரவாயில்லை, ஆனால் எல்லோருக்கும் நல்லவர்கள் வேடம் போட்டுக்கொண்டு வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல நஞ்சை கலந்து எழுதுபவர்களை சமாளிப்பது மிகக்கடுமையாக இருக்கின்றது, இவர்களாக நடுநிலைவாதிகள் போன்ற தோற்றத்தினை உருவாக்கி பொதுத்தளத்தில் சத்தம்போடாமல் நேரடியாக இல்லாமல் மனிதர்களுக்குள் பிரிவினைகள் சகஜம் தான் என்று சாதீயத்துக்கு சப்பை கட்டுகட்டுபவர்களை சமாளிப்பதில்தான் பிரச்சினை, இவர்களை அம்பலப்படுத்த தீவிரமாக இயங்கும்போது மிகஎளிதாக நம்மை சண்டைகாரர்களாக காண்பித்து புறந்தள்ளும் சாத்தியங்கள் இருப்பதால் இது மாதிரியான இந்து மதத்தையும் அதன் மனுதர்மத்தையும் மறைமுகமாக தூக்கிபிடிப்பவர்களின் முகங்களை கிழிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது, இந்த வலைப்பதிவிற்கு வந்த பின் எப்படி மனுதர்மம் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் வாழ்கின்றது என புரிகின்றது, இந்துமத மனுதர்மத்திற்கு தீவிர ஆதரவு, நடுநிலை என்ற போர்வையில் ஆதரிப்பது, மென்மையாக வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல ஆதரிப்பது என எல்லா விதங்களிலும் இவர்களின் ஊடுறுவலை பார்த்தபோதுதான் எப்படிடா ஆயிரம் ஆயிரம் காலமாக புத்தன், பெரியாரை எல்லாம் தாண்டி உயிரோடு இருக்கின்றது என புரிந்துகொண்டேன்

//ஒரு பிரச்சனையை பொது தளத்தில் வைத்து விவாதிப்பது மாற்றத்திற்கு மிக அவசியம். பிரச்சனைகளையும் அதற்கான காரணங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர விடாமல் தடுப்பது ஒரு வித வன்முறை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை கிடைக்க காரணமாக எழுகிற குரல்களை அடக்கும் அகங்கார ஆதிக்க முயற்சி இது
//
வெகுசன ஊடகங்கள் வகுத்தது இதோ இன்று வலைப்பதிவு வரை வந்துவிட்டது.

11:07 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://idlyvadai.blogspot.com/2006/11/blog-post_11.html

//குழலி - ஐயோ நான் எது செய்தாலும்... :-).//
என்னங்க க.சு.வே இல்லயா?
//அப்புறம் துக்ளக்குக்கு புரமோஷன் போலிருக்கு, புரமோஷன் துக்ளக்குக்கு மட்ட்டும் தானோ? :-)
//
இதை வைத்துதானே சொல்கிறீர், துக்ளக் இந்த வரிசையில் Odd man out ஆக இருக்கிறதே, அதாவது மற்ற நான்கும் முழு அரசியல் பத்திரிக்கை அல்ல, ஆனால் துக்ளக் முழு அரசியல் பத்திரிக்கை, துக்ளக் இருந்தால் ஜீ.வி, ரிப்போர்ட்டர், தமிழன் எக்ஸ்பிரஸ், நக்கீரன் இருந்தால் தானே சரியாக இருக்கும் .... என்ன சரிதானே நான் சொல்றதூ?

// மாற்றுவிட்டேன்.//
க.சு.விற்கு செவிசாய்த்ததற்கு நன்றி

11:13 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://vanthiyathevan.blogspot.com/2006/11/blog-post.html

//அதுவும்கூட Static IP போலிருக்கிறது. எப்போதும் இது மாறுவதேயில்லை. தமிழ்சசிதான் Dynamic'காக வீரவன்னியன், தமிழ் பார்டெண்டர் என்று பட்டையைக் கிளப்பிய போதிலும் IP மட்டும் ஸ்டேடிக்காக இருப்பது வினோதமே...
//
எனக்கு தெரிந்து வீரவன்னியனும், பார்டெண்டரும் எந்த பதிவுகளிலும் பின்னூட்டமிடுவதில்லை, பின்னூட்டமிடாமல் தாங்கள் எப்படி IPaddress கண்டுபிடித்தீர்கள்?,

வீரவன்னியன் வேறுபதிவுகளில் பின்னூட்டுவதில்லை என்பதை அவர் பதிவிலேயே சொல்லியிருக்கிறார், மேலும் உம்மை மாதிரி குசும்பன் என்ற பெயரில் வந்தியத்தேவனாக மறுமொழி எழுதி மாட்டிக்கொள்ளவுமில்லை, தமிழ்பார்டெண்டர், தமிழ்சசி என்பதில் தமிழ் இருக்கிறது என்பதற்காக இருவரும் ஒன்று என்றால் கொடுமைடா சாமி.

மக்களே பின்னூட்டமிடாமல், யாருடைய IP address ம் கண்டுபிடிக்க முடியாது, அதுவும் bloggerல் பின்னூட்டமிட்டாலும் கண்டுபிடிக்க முடியாது, IP tracker வைத்து பின்னூட்டமிட்ட நேரத்தை வைத்து ஒரு மாதிரி குன்சாக கண்டுபிடிக்கலாமே தவிர பின்னூட்டமிடாமல் தலை கீழாக நின்றாலும் IP கண்டுபிடிக்கமுடியாது, குசும்பன் (எ) வந்தியத்தேவன் தானே மாட்டியது மாதிரி மாட்டினாத்தான் உண்டு.

//அந்நியன் படம் பார்த்த மாதிரி இருக்கிறது. யப்பா :-(((((((((((((
//
ஓகோ..... அப்புறம்...
அப்படியே http://special-aappu.blogspot.com/ போங்க, அங்கே ஏகப்பட்ட அன்னியன்களும் அம்பிகளும் இருக்காங்க....

6:18 PM  
Blogger குழலி / Kuzhali said...

//வலைப்பதிவு வாசகர்களே, தமிழ் சசியும் அவர் ஆதரிக்கிற திராவிடம், விடுதலைப் புலிகள், ஜாதி கட்சிகளை ஆதரிக்கிறவர்களும் அவர்களுடன் உடன்படாதவர்களைப் புனித பிம்பம் என்றும், அனானியாக வந்துத் தாக்குகிறார்கள் என்றும், மேலும் அபாண்டமாகவும் குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால், இதுவரை இப்படிப் போலிப் பெயர்களில் அடுத்தவர்களைப் பற்றி மோசமாகவும் கீழ்த்தரமாகவும் எழுதி மாட்டிக் கொண்டவர்கள் அனைவரும் இந்த அணியைச் சார்ந்தவர்களே.//

தடித்த எழுத்தில் உள்ள வார்த்தைகள் உம் பதிவின் நோக்கத்தையும் நீர் சேறுவீசுவதன் நோக்கத்தையும் தெரிவிக்கின்றது குசும்பன் (எ) வந்தியத்தேவன் (எ) ஞானசம்பந்தரே... விழுந்துபோன இமேஜை தூக்கி நிறுத்தும் ஸ்டண்ட்டோ

6:22 PM  
Blogger குழலி / Kuzhali said...

உஷா அவர்களுக்கு,

//எனக்கு மனம் ஒவ்வாதவைகளை நான் படிப்பதில்லை என்பது சில காலமாய் நான் எடுத்த முடிவு. ஆபாசம், சாதி பெருமை/ காழ்ப்புணர்ச்சியை காட்டும் பதிவுகள் பக்கம் என்றுமே சென்றதில்லை.//
அப்போ குசும்பன் பதிவுகளை மனம் ஒப்பிதான் படிக்கின்றீர்கள் அப்படித்தானே?

//ஆபாசம், சாதி பெருமை/ காழ்ப்புணர்ச்சியை காட்டும் பதிவுகள் பக்கம் என்றுமே சென்றதில்லை.
//
குசும்பனின் பதிவில் முதல் ஆளாக அட்டெண்டன்ஸ் கொடுக்கின்றீர்களே, உங்களை பொறுத்தவரை மேற்சொன்ன கேட்டகிரியில் குசும்பன் வரவேயில்லை போல.... :-)

11:02 PM  
Blogger குழலி / Kuzhali said...

//குழலி விளைவுகள் பயங்கரமா இருக்கும் என எச்சரிக்கை வேற விடுரார்.. பயமா இருக்கே.......
..பதிவுலகிலிருந்து துரத்திடுவாங்கன்னு

பதிவு எழுதலேன்னா கைகால் ஒதறுமே:)

அவர் பேசரதே பார்த்தா அவிங்க பயங்கர desparate ஆ face savings கேம் ஆடற மாதிரி தெரியுது.
//
அய்யோ பாவம் கால்கரிசிவா.... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.... ரொம்ப desparate ஆக இருக்கிங்க போல.....

5:38 PM  
Blogger குழலி / Kuzhali said...

//அசந்த இந்தியாவை கூறு போட்டு வித்துறுவானுங்க, அவிங்க சொல்றத நம்புறீங்களா, அல்லது ஒரு நேர்மையான முன்னாள் கப்பற்படை அதிகாரியின் பேச்சை நம்புறீங்களா ?
//
ஆகா இழுத்துட்டாங்கடா தேசபக்தி வியாபாரத்தை....எப்போலாம் உங்க இமேஜ் பஞ்சராகுதோ அப்போவெல்லாம் தேசபக்தி வியாபரம் துணையாயிருக்கு உங்களுக்கு....

7:36 PM  
Blogger குழலி / Kuzhali said...

//விளைவுகள் பயங்கரமாய் இருக்கும் என சொன்னீங்களா? இல்லையா? அப்படி சொல்லிட்டா பயந்துருவாங்க என தெனவாட்டுதானே
//
கால்கரி சிவா அவர்களே, தமிழ் படிக்க தெரியுமா? மேலே என் பின்னூட்டங்கள் அப்படியே உள்ளன! படித்து பாருங்கள் எங்கேயாவது விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று சொன்னேனா என்று, எங்கே அதெல்லாம் படித்து பார்க்க நேரம் இருக்கு, பேரை பார்த்தோமா சேறு வாரி அடிச்சோமானு போறிங்களோனு தோனுது.


//இது கருத்துகள் சொல்லும் தளம் இதில் தப்பு என்ன இருக்கு. இங்கே கெட்ட வார்த்தைகளில் வந்த பின்னூட்டம் பார்த்தீங்களா?
//
ஏன் இதை சரிந்து போன இமேஜை தூக்கி நிறுத்த, மற்றவர்களை அய்யோக்கியர்களாக காட்ட தனக்கு தானே இட்ட பின்னூட்டமென்று சந்தேகப்படவும் வாய்ப்பிருக்கிறது.

5:05 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://nunippul.blogspot.com/2006/11/usha-style.html

என்னங்க உஷா "பேட்ச் ஒர்க்கா(patch work)" சும்மா லுலுலாயி கண்டுக்காதிங்க :-)

6:24 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://vanajaraj.blogspot.com/2006/11/blog-post_15.html

//குறிப்பாக சின்ன மருதுவின் திருச்சிப் பிரகடனம் இன்றய சூழலுக்கும் கச்சிதமாகப் பொருந்துகிறது..
//
சின்ன மருதுவின் மலைக்கோட்டை பிரகடனத்தை சபால்ட்டர்ன் எழுச்சி என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன், பிரகடனத்தை படியெடுத்து(copy) பரப்புதல், வாய்வழியாக தெருக்கூட்டங்கள் போல பரப்புதல் போன்றவை இருந்ததாக படித்திருந்தேன்.... இணையத்தில் இந்த இதழ் கிடைக்குமா? படிக்க ஆவலோடு உள்ளேன்...

நன்றி

1:36 AM  
Blogger குழலி / Kuzhali said...

//படித்துப் பாருங்கள், ஒரு மன்னன் மக்களுக்கு அறை கூவி போராட அழைக்கும் வரலாற்று விந்தை... காணாமல் மறக்கடிக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்டத்தின் வீர மரபு... அந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
//
முழுப்பிரகடணத்தையும் படித்திருக்கிறேன், அற்புதமான ஒன்று அதில் என்னை மிகவும் கவர்ந்தது அவர்கள் போராட்டத்திற்காக பொதுமக்களை உள்ளிழுக்க செய்யும் முயற்சிகள், இன்றைய பல மாற்று பார்வை கொண்ட இயக்கங்கள் செய்யும் அத்தனையையும் அன்று அவர்கள் செய்திருக்கிறார்கள், நிச்சயமாக அது ஒரு சபால்ட்டர் எழுச்சியே தான், புதியகலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களை சிங்கைக்கு எப்படி வரவழைப்பது என்று தெரியவில்லை, பிறகு முயற்சி செய்து பார்க்கிறேன்.

நன்றி

5:47 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://vittudhusigappu.blogspot.com/2006/11/blog-post_13.html
மேலே என் பெயரில் உள்ள பின்னூட்டம் என்னுடையதில்லை.... இந்த பட சோதனை, எலிக்குட்டி புலிக்குட்டி சோதனையெல்லாம் செய்து பார்த்தால் தெரியும்.... மேலும் "விளைவுகள் கடுமையாக இருக்கும்" என்று நான் பேசியதில்லை, அப்படி நான் பேசியிருப்பேன் என்றளவிற்கு புரிந்து கொண்டிருப்பவர்களுக்கும் நினைப்பவர்களுக்கெல்லாம் ஓடி ஓடி விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கும் அவசியம் இல்லை....

என்னுடைய பின்னூட்டங்களை http://kuzhalifeedbacks.blogspot.com/ என்ற இடத்தில் சேகரிக்கின்றேன், பின்னூட்டத்தில் சந்தேகமிருப்பின் இந்த இடத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

9:12 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://vanthiyathevan.blogspot.com/2006/11/blog-post.html

//குழலி சார், நீங்க விட்ட பயமுறுத்தல் விட்டுது சிகப்பு பதிவில். அது வேறு இது வேறு என அப்புறம் சொல்லுங்களேன்//
கால்கரி இப்போதுதான் அங்கே சென்று பார்த்தேன், அது என் பெயரில் அளிக்கப்பட்ட போலி பின்னூட்டம், பட சோதனையிலேயே தெரிந்துவிடும் அது போலிப்பின்னூட்டமென்று....

மேலும் "விளைவுகள் கடுமையாக இருக்கும்" என்று நான் பேசியதில்லை, அப்படி நான் பேசியிருப்பேன் என்றளவிற்கு புரிந்து கொண்டிருப்பவர்களுக்கும் நினைப்பவர்களுக்கெல்லாம் ஓடி ஓடி விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கும் அவசியம் இல்லை....

என்னுடைய பின்னூட்டங்களை http://kuzhalifeedbacks.blogspot.com/ என்ற இடத்தில் சேகரிக்கின்றேன், பின்னூட்டத்தில் சந்தேகமிருப்பின் இந்த இடத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

//குழலியும் ஆப்புவும் கூட்டளிகள் என்று அவர் வாயில் இருந்தே வந்து விட்டதே., //
வந்துட்டாருடாப்பா வரதன், தமிழை படித்து புரிந்துகொள்ளத்தெரியாத ஆட்களெல்லாம் வந்துட்டாங்க பின்னூட்டம் போட....

9:12 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://vittudhusigappu.blogspot.com/2006/11/blog-post_13.html

//இப்படிப்பட்ட (மேலே உள்ள) மிரட்டல்கள் அவர் அரசியலுக்கே ஆபத்தாக முடியும். அதாவது, பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஆபத்தாகவே முடியும். ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக பேசுவதாகச் சொல்லிக் கொள்ளும் குழலி அதிகாரம் கையில் இருக்கும்போது இப்படித்தான் செய்வார் என்றால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரமே கூடாது என்றெல்லாம் மற்றவர்களின் தவறான பிரசாரத்திற்கு இப்படிப்பட்ட உளறல்கள் வழிவகுத்துவிடும். அதனால் குழலியின் இந்த உளறலை அவர் சப்போர்ட் செய்வதாகச் சொல்லிக் கொள்கிற ஒடுக்கப்பட்ட மக்களின் கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
//
எது எப்படியோ, மேலே என் பெயரில் வந்த போலிப்பின்னூட்டத்தால் ஒரு உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது, அண்ணன் பி.கே.எஸ். மிகச்சரியாக என் அரசியலை புரிந்து கொண்டுள்ளார், மேலே உள்ள மிரட்டல் என்னுடையதில்லை என்னும் போதும் அண்ணன் பி.கே.எஸ். தன் கருத்தை (அதாவது என் அரசியலில் புரிதலை) மாற்றிக்கொள்ள மாட்டார் என நம்புகின்றேன்....

9:18 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://tamilamudhu.blogspot.com/2006/11/9.html

தலைவா மிச்சம் கதை எங்கேப்பா, ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

நன்றி

4:18 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://idlyvadai.blogspot.com/2006/11/blog-post_19.html

இந்த பதிவை பார்த்த பின் வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட அருளை கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன், அப்படியே மற்ற சில வலைப்பதிவு நண்பர்களுடனும் பேசினேன்.... ஆச்சரியம் அப்போது தான் அந்த சந்திப்பே முடிந்திருந்தது.... வெகு வேகமாக செய்தி தந்த இட்லிவடைக்கு நன்றி

நன்றி

9:08 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://whatiwanttosayis.blogspot.com/2006/11/blog-post_21.html
உள்ளேன் அய்யா...

http://simulationpadaippugal.blogspot.com/2006/11/2007.html

//என்னமோ தெரியலை, எனக்கு சிரிப்பே வரலை. ஒருவேளை எனக்கு நகைச்சுவை உணர்ச்சி கம்மியோ ???//

ரிப்பீட்டே....

நானும் ரிப்பீட்டே..... ஆனாலும் டோண்டு அய்யாவை கலாய்த்தது மட்டும் லேசாக புன்னகை வரவைத்தது (டோண்டு அய்யா கோச்சிக்காதிங்க)

http://madippakkam.blogspot.com/2006/11/blog-post_20.html
//அப்புறம்...பாலா நெசமாலுமே "யூத் மாதிரி" தாம்பா இருக்கார்...
//
அதான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு :-)

1:34 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://whatiwanttosayis.blogspot.com/2006/11/blog-post_22.html

//கீழ்சாதியினர் என்று ஒதுக்கப்பட்டவர்கள் படிப்பு, பணம், பதவி என்று எல்லா விஷயத்திலும் உயர்வதுதான். இன்றைக்கு இப்படி உயர்ந்தவர்களிடம் தீண்டாமை போன்ற கேவலங்கள் இல்லாதிருப்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
//
தற்போதைய சூழல் இதை உண்மை என்று சொல்லாது, உனக்கு நம் நண்பன் ஒருவனை நினைவிருக்கலாம், அவன் தந்தை மாவட்ட அளவிலான அரசு செயற் பொறியாளர், அவன் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களின் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சாதி தெரிந்தவுடன் அவர்களின் வீட்டுக்கு வருவதையும் அவர்களோடு பேசுவதையும் நிறுத்திக்கொண்டார்கள், இதை அவன் என்னிடம் சொன்னபோது அதை என் நாட்குறிப்பேட்டிலும் வருத்தத்தோடு பதிவு செய்திருந்தேன்(தலித் தொடர்பான என் முதல் எழுத்து பதிவு அது), முடிந்தால் அந்த நாட்குறிப்பேடுகள் கிடைத்தால் எடுத்து போடுகிறேன், உன் தந்தையையும் என் தந்தையையும் விட பெரிய படிப்பு, அதிக பணம், விசாலமான வீடு வாகனம் என்றிருந்த அவர்களுக்கு தான் அப்படியான ஒரு நிலை.

மீதியை இரவு பின்னூட்டமாக போடுகின்றேன்...

9:23 PM  
Blogger குழலி / Kuzhali said...

பதிவு தவறாக புரிந்துகொள்ளப்படும் அபாயம் இருக்கின்றது....

அருள் சாடியிருப்பது புனிதபிம்ப சாதியொழிப்பு என்று பேசுபவர்களை என்று கருதுகின்றேன், அதாவது சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் அதே சாதியை பயன்படுத்தி எதிர்ப்பதை சாதியொழிப்பு என்ற பெயரில் ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்று கூடுதலை மறுதலிப்பவர்களை குறித்தான பதிவு என்பதை கீழ்கண்டவைகள் கருதவைக்கின்றன.

//சாதிய உணர்வு கொண்டு போராடும் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, 'எந்த சாதியைச் சொல்லி நாங்கள் வளர இயலாமல் முடக்கப்படுகிறோமோ அதே சாதியைச் சொல்லித்தானே நாங்கள் போராட முடியும்? அதே சாதியைச் சேர்ந்தவர்களுடன் தானே இணைந்து செயல்படமுடியும்?!' என்று கேட்டார். அவர் கருத்தை ஆமோதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியே இருக்கவில்லை!
//

//இந்தியர்களின் பாதுகாப்புக்காக போராடியவர்கள் மதிக்கத்தக்கவர்கள் எனில், தன் சாதியைச் சார்ந்தவர்களுக்காக போராடும் ஒருவனை நாம் இழிவாய்ப் பார்ப்பது எவ்வகையில் சரி?
//

9:29 PM  
Blogger குழலி / Kuzhali said...

//சாதி என்பது வெறும் அடையாளம்.
//
இந்த அடையாளங்கள் எதற்காக? இந்த அடையாளங்கள் சொல்லும் சேதி என்ன? யாருக்கு சொல்கின்றன சேதி?

அருள் தன் நட்சத்திர அறிமுகப்பதிவில் அடையாளமற்று இருப்பதை பற்றி எழுதியிருந்தார், அது குறித்து விரிவாக ஒரு பதிவு எழுதிக்கொண்டுள்ளேன், முடித்தவுடன் போடுகின்றேன்.

10:14 PM  
Blogger குழலி / Kuzhali said...

//நாமும் நமது நண்பர்களும் அவன் வீட்டுக்குச் செல்வது பற்றி இப்படி யோசித்தோமா? அல்லது நம் வீட்டில் தான் தடுத்தார்களா? பெரும்பாண்மை பற்றியே நான் சொல்லிறேன்.
//
உண்மைதான், ஆனால் நம்மை போன்றவர்கள் இன்னும் பெரும்பாண்மை ஆகவில்லை என்பதே கசப்பான உண்மை...

10:15 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://whatiwanttosayis.blogspot.com/2006/11/blog-post_22.html

//உண்மையில் இந்திய சமூக classification தவறல்ல.//
ஹரிகரரே, நீவிர் சேரியில் இருந்தால் இதை சொல்லியிருப்பீரோ?

//தற்போது சில நூற்றாண்டுகளாக நம்மால் இந்த முறை புரிந்து கொள்ளப்பட்ட விதம் முன்னெடுத்துச்செல்லும் விதம் மிகவும் தவறானது!
//
இருக்காதே பின்னே, செத்து போன பெரியார் கொடைச்சலே இன்னும் தாங்கலை, இதுக்கு முன்னாலே வள்ளலார் வேற, அவங்கவங்களுக்கு இந்திய சமூக classification படி தரப்பட்ட பீயள்ளும், சேறு மிதிக்கும், காவல்நாய் வேலையை பார்த்துக்கொண்டிருந்தா சாதி சங்கம் வைத்து உரிமைக்காக போராடி கேட்குற நிலை வருமா? சே... சே... நாடு கெட்டு போயிடுச்சிப்பா.... என்ன ஹரிகரரே நாஞ் சொன்னது சரிதானே?

5:29 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://etamil.blogspot.com/2006/11/irony-and-hypocrisy-staples-of-satire.html

//ஜோக் சொன்னால் அனுபவிக்கிற மாதிரி இருக்க வேண்டுமா? ஆராயுமாறு அமைய வேண்டுமா?
//
அடுத்தவங்களை பற்றிய (அதாவது பாலா மாதிரி வச்சிக்குங்களேன்) ஜோக்குனா ஆராயாம அனுபவிக்கலாம், அதே நம்மளை பற்றியென்றால் அனுபவிக்க தோனுமா? ஆராயத்தோனுமா? என்னிக்காவது எனக்கு நகைச்சுவையா எழுத வர்ற அன்னிக்கு உங்களை பற்றி ஒரு நகைச்சுவை பதிவு போடுறேன், அன்னிக்கு நீங்க ஆராயாம அனுபவிங்கோ தலைவா :-)))

5:42 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://whatiwanttosayis.blogspot.com/2006/11/blog-post_22.html

//சேரி என்பது பொருள், பணம், கல்வி வசதிகள் குறைவான சூழல் என்று எடுத்துக்கொள்கிறேன். நான் அம்மாதிரி சூழலில் இருந்து சுயமாகத்தான் முன்னேறி இருக்கிறேன்.

பூணுல் பார்ப்பான் என அரசே ஆதரிக்காத எதிர்சூழலில் தந்தை ரத்தத்தை சிந்திப் புகட்டிய கல்வி மட்டுமே மேலே ஏற்றிவிட்டது
//
உம் தந்தைக்கு உம் படிப்புதான் முக்கியம், அதுவே உமக்கு எல்லாம் தரும் என்ற விழிப்புணர்வை அல்லது காலம் காலமாக இருக்கும் உந்துதலை உமக்காக பூணுல் பார்ப்பான்(நீர் சொன்னது தான்) என அரசே ஆதரிக்காத போதும்(இதுவும் நீர் சொன்னது தான்) உமக்காக ரத்தம் சிந்தி படிக்க வைத்தார், ஏன் அது மற்ற தந்தைகளுக்கு இல்லை, குப்பை அள்ளுபவனும், பேங்கிலும் அரசு அலுவலகங்களிலும் கடைநிலை ஊழியனாகவும், டி குரூப் ஊழியனாகவும் இருந்த(இதுவும் கூட இடஒதுக்கீட்டினால் வாய்த்தது)எத்தனை தந்தைகள் உம் தந்தை போல வாய்த்தனர், உம் தந்தைக்கு மட்டும் குழந்தையின் படிப்பு முக்கியம் என்பது எப்படி தெரிந்தது, படிப்பு வந்தால் எல்லாம் வந்துவிடும் இடஒதுக்கீடு தரப்பட்டும் கூட பலர் படிப்பு பற்றி தெரியாமல் இருப்பதன் காரணம் என்ன? இதில் சமூகத்தின் பங்கு என்ன? சாதியின் பங்கு என்ன?
(நல்ல வேளை என் படிப்பு விடயத்தில் என் தந்தை பூணுல் போடாத பார்ப்பானாக இருந்தார்) யோசித்து பாரும் ஓய்... புரியும்...

//இன்றைய ஆதிக்க சாதியினர் அன்றைய அரசர்களின் வழித்தோன்றல்கள். அரச வம்சம் காவல்நாய் வம்சம் இல்லை என்றைக்கும் அதிகாரத்தில் இருக்கும் வம்சம்.
//
பெரியார்தாசன் சொல்வது போல வரலாறு என்பது காலையில் சுப்ரபாரதத்தில் வருவது போன்று அரசர்களின் பெயர் பட்டியலும், அவர்கள் செய்த போர்களும், அவர்கள் கட்டிக்கொண்டும் வைத்துக்கொண்டும் இருந்த மனைவிமார்களின் எண்ணிக்கையும் ஆசை நாயகிகளின் எண்ணிக்கையும் மட்டுமே என்றிருந்தால் இப்படித்தான் நினைக்கத்தோன்றும், உங்களையும் இதில் சொல்வதற்கொன்றுமில்லை, ஏனெனில் மேலோட்டமான வரலாற்று புத்தகங்கள் இதைத்தான் பேசுகின்றன.

இன்றைக்கு எந்த சாதியை எடுத்தாலும் அவர்கள் தாங்கள் அரசின் வம்சம் என்று கூறிக்கொள்பவர்கள் தான், இதற்கு தாழ்த்தப்பட்டவர்களான பள்ளர்களும், பறையர்களும், பரதவராஜ குலம் என்னும் மீனவர்களும், பள்ளிகளும், பல்லவர்கள் பிராமணர்கள் என்று எல்லா சாதியினரும் சொல்லிக்கொள்வதுண்டு... அதற்காக சில ஆதாரங்களும் காட்டுவதுண்டு...
அழகுமுத்துகோன் (வீரன் சுந்தரலிங்கத்திற்கு பதில் இந்த பெயரை ஒரு இடத்தில் சொன்னீர்களே ஞாபகம் இருக்கா உங்களுக்கு?) சாதி பற்றி சொல்லும்போது 'கோன்' என்பது கோனார் சாதி என்றும் இல்லை இல்லை 'கோன்' என்றால் அரசன் என்று குறிப்பது என்றும் பேசுகின்றனர், அதே போல தேவர், தேவன் (பொன்னியின் செல்வன் புன்னியத்தில் எல்லோருக்கும் தெரிந்த அருண்மொழித்தேவன் பெயர்) என்பது அரசர்களின் பட்டம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது உண்டு. சரி விசயத்துக்கு வருவோம், இப்படியாக ஏதோ ஒரு காலகட்டத்தில் அரசர்கள் அந்த சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் பெயர்களும், அவர்கள் செய்த போர்களும் அவர்களின் மனைவி, ஆசைநாயகிகளின் எண்ணிக்கைகளையும் தாண்டி சமுதாய வாழ்க்கை என்று ஒன்று இருக்கின்றது அதுதான் உண்மையான வரலாறு, வெறும் ஜெயலலிதா, கருணாநிதி, ராமதாசு, வைகோ போன்றவர்களை அவர்களின் வரலாற்றை வைத்து இன்றைய சமுதாயம் இப்படித்தான் என்று சொல்லமுடியுமா? இன்றைக்கு தமிழக்த்தை ஆட்சி செய்பவர் கருணாநிதி அவர் 'மருத்துவர்' சாதி, இப்படி சொன்னா புரியுமோ என்னமோ அவர் முடிதிருத்தும் சாதியை சேர்ந்தவர், கருணாநிதி ஆட்சி செய்வதால் முடிதிருத்தும் சாதியினரின் ஆட்சி நடக்கிறது என்று சொல்ல முடியுமா? முடிதிருத்தும் சாதியினர் இன்றைக்கு சமூகத்தில் உயர்நிலையில் உள்ளனர் என்றுதான் சொல்லமுடியுமா? ஆனால் அருண்மொழித்தேவன் ஆட்சியில் இருந்தாலும் நரசிம்ம பல்லவன் ஆட்சியிலிருந்தாலும் எந்த பாண்டியன் ஆட்சியிலிருந்தாலும் அவர்கள் கிராமம் கிராமமாக, வேலி வேலியாக, வரிவிலக்கு செய்து பட்டயம் பட்டயமாக அடித்து கொடை கொடுத்தது எந்த சாதியினருக்கு என்று ஹரிகரரே தெரியுமா உமக்கு?

வரிவிலக்கோடு கொடையாக அரசர்களிடமிருந்து பெறப்பட்ட நிலங்களை விளிம்பு நிலை மக்களின் எழுச்சி காலமான களப்பிரர்கள் காலத்தில் பறிமுதல் செய்து அதை பிரித்து கொடுத்து முன்னூறு ஆண்டுகளுக்கு பிறகு களப்பிரர்கள் ஆட்சி வீழ்ந்த பின் பாண்டிய அரசன் பவனி வரும்போது தெருவில் உருண்டு பிரண்டு மீண்டு அந்த நிலங்களை வாங்கியது எந்த சாதியென்று தெரியுமா ஹரிகரரே?

படையாட்சி, படையையே ஆட்சி செய்தவர்கள் என்று பெருமை பேசுபவர்களிடம் நான் சொல்வது தான், அது சரி படையாட்சி எல்லாம் இருக்கட்டும் உன் பாட்டன் நிலை என்ன? உன் அப்பன் நிலை என்ன? அட இன்னைக்கு என்ன உன் நிலமை, உன் சாதியினரின் பெரும்பாண்மை மக்களின் நிலையென்ன? எல்லோருக்கும் படிப்பு இருக்கா? மூன்று வேளை சோறு இருக்கா? சட்டை துணி மணி இருக்கா? பன்னி குடிசை மாதிரி இருக்கே உம் வீடு, உம் தெரு நாறிப்போய் இருக்கே? எல்லாத்துக்கும் மேல புள்ளைங்க படிக்க ஒரு நல்ல சூழ்நிலையை வீட்டில் தருகிறாயா? குடிச்சிட்டு வம்பு வளக்கறப்ப புள்ளைங்க எப்படி படிக்கும்(ஹரிகரரே இந்த இடத்தில் உம் படிப்புக்காக ரத்தம் சிந்திய உம் தந்தையோடு இணை செய்து பார்க்கவும்)அப்புறம் என்ன மசுரு படையாட்சி என்று கூறுவேன். இந்த படையாட்சி, கள்ளர், மறவர், தேவர் பெருமை எல்லாம் காவல்நாய் வேலைக்கு தான்... வர்ணாசிரமத்தை காக்க கொஞ்சம் கொஞ்சமாக உருவேற்றப்பட்ட உருவாக்கப்பட்ட காவல்நாய்களுக்கு தீனி தான் இந்த பெருமை எல்லாம்.

//என்ன குழலி மனச்சாட்சியோடு பேசுங்கள்! //
எம்மை சொல்வதற்கு முன் உம் மனசாட்சியை கேளுமய்யா அது என்ன சொல்கிறது என்று....

7:32 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://whatiwanttosayis.blogspot.com/2006/11/blog-post_24.html

//இப்படியே கலைஞர் எனக்கும் தலைவராகிப் போனார்.//
அடப்பாவி சொல்லவேயில்லை....

//இரு வண்டியும் எதிர்ப்படும் சின்ன சந்துகளில் கடந்துபோகவும் முடியாமல், பின்வாங்கவும் மனமில்லாமல் கைகலப்பு கூட நிகழ்திருக்கிறது! நங்கள் பின்வாங்கினால் எங்கள் தலைவர் அல்லவா தோற்றுவிடுவார். அதனினும் பெரிய அவமானம் ஏதாவது இருக்கிறதா என்ன?!
//
"சொட்டை தலையன்" என்று கலைஞரை ஒருவன் திட்டியபோது அவனை நான் அடித்துவிட்டேன், இது நடந்தது நான் நான்காம் வகுப்பு படித்தபோது.

//'தன் தொண்டர்களைத் தானே திட்டும் ஒரே ஒரு தலைவரைத்தான் நான் பார்த்திருக்கிறேன்' என்று தந்தை பெரியாரைப் பற்றி என் அப்பா அடிக்கடி குறிப்பிடுவார்.
//
பெரியார் அளவிற்கு இல்லையென்றாலும் இன்னும் ஒரு ஆளை நான் பார்த்திருக்கிறேன், அவர் மருத்துவர் இராமதாசு, இப்போது எப்படி என்று தெரியவில்லை, ஆனால் சிறு வயதில் ஊர் கூட்டங்களில் மானாவாரியாக அவர் தொண்டர்களை அர்ச்சிப்பார், குறிப்பாக குடிப்பழக்கம், படிப்பு தொடர்பாக பேசும்போது அர்ச்சனை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும், ஆனாலும் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை அவர் திட்டியதையும் எடுத்துக்கொள்வதில்லை, அவர் குடிப்பழக்கம், படிப்பு தொடர்பாக கொடுத்த அறிவுரைகளையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை :-(

//கடைசியாய் ஒரு பஞ்ச்(டயலாக்!). வள்ளுவன் சொன்னதானாலும் சரி, வழிப்போக்கன் சொன்னதானாலும் சரி; நீ ஒருமுறை பரிசீலித்து முடிவெடு. அந்த முடிவும் ஒரு முடிவான முடிவில்லை என்பதை உணர்ந்திரு.
//
இது சூப்பர்

//தலைவர்களின் தவறுகளைத் தயங்காமல் தட்டிக்கேட்கிற - முடியாதபட்சத்தில் ஏற்கவாவது மறுக்கிற - தொண்டர்களால் மட்டுமே ஒரு உண்மையான தலைவனைத் தரமுடியும்!
//
இப்போதைக்கு யாரும் எனக்கு தலைவரில்லை, ஆனால் என் தலைவர் என்பதற்கு அருகில் உள்ள சிலரிடம் இதை கடைபிடிக்கின்றேன், பிடிக்காததை ஆவேசமாக விமர்சிக்க என்னால் முடியும் என்ற போதும் அது வேறு விதமாக சிலரால் பயன்படுத்தப் படும் என்பதால் அந்த சில நேரங்களில் அமுக்கி வாசிக்கிறேன்.

நன்றி

6:34 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://masivakumar.blogspot.com/2006/11/4.html

சிவா மற்ற கட்டுரைகளையும் வார இறுதியில் படித்துவிட்டு பேசுகிறேன்.... உங்களின் நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றி

நன்றி

8:20 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://idlyvadai.blogspot.com/2006/11/blog-post_3489.html

இட்லிவடை இவ்வளவு தூரம் பெரியார் பட இயக்குனருக்கு எடுத்துகொடுத்துள்ளீர் என் பங்குக்கு நானும் எடுத்து தருகிறேன், இப்படியெல்லாம் தமிழை திட்டிய பெரியார் அறிமுகப்படுத்தியது தான் இன்றைய தமிழ் அச்செழுத்து சீர்திருத்தம், தமிழ் என்ற இந்த காட்டுமிராண்டிகளின் மொழியில் அச்செழுத்து சீர்திருத்தத்தை பெரியார் அறிமுகப்படுத்துவதற்கு முன் "லை" இப்படி இருந்ததல்ல, அது எப்படி இருந்தது என்றால் பாலச்சந்தரின் "வானமே எல்லை" சுவரொட்டியையோ பழைய துக்ளக், கல்கியையோ பார்க்கவும்(கடந்த சில ஆண்டுகளாகத்தான் இவர்களும் பெரியார் உருவாக்கிய தமிழ் அச்செழுத்து சீர்த்திருத்தத்தை ஏற்றுகொண்டார்கள் என நினைக்கின்றேன்), பெரியார் கூற்றுப்படி நல்ல விடயங்களுக்காகவும் அச்சு நவீனத்துவத்துக்குமான மாற்றத்தை மொழியில் ஏற்காதவர்களின் மொழி காட்டுமிராண்டிகளின் மொழி "வானமே எல்லை" படம் வெளிவந்தபோது இந்த கூற்றுப்படி பாலச்சந்தர் காட்டுமிராண்டி, துக்ளக்கும் கல்கியும் நீண்ட நாட்களுக்கு இதை ஏற்காததால் அவர்களும் அவர்கள் எழுதிய தமிழும் காட்டுமிராண்டி, இதே மாதிரி நீங்கள் ஒரு பதிவிட்டபோதும் நான் இதே மாதிரி பெரியாரின் அச்செழுத்து சீர்திருத்தத்தை எழுதியிருந்தேன், உங்கள் பதிவின் செய்தி சேவையினால் அதை தேடி கண்டுபிடிக்கமுடியவில்லை, இந்த பதிவை குறித்து வைக்க வேண்டும், மீண்டும் இதே மாதிரி நீங்கள் பதிவிடுவீர் அப்போது எனக்கு CTL-C , CTL-V செய்தால் போதுமானதாக இருக்கும், புதிதாக தட்டச்ச தேவையில்லை...உ

பார்ப்பனீயம் ஊடுறுவிய, அதைஉள்வாங்கிய ஒரு சமூகத்தின் மொழி வெளிப்பாடு பெரியார் சொன்னது போலத்தான் இருக்கும், திருக்குறளுக்கு பிந்தைய காலகட்டத்தில் வெளியான தமிழிலக்கிய நூல்களில் பெரும்பாலானவை போர் பரணிகளும், அரசர்களுக்கு தட்டிய ஜால்ராக்களும், சைவ,வைணவ மதமென்று பார்ப்பனியத்துக்கு கூஜா தூக்கிய படைப்புகளாகவும் தானிருந்தன, பார்ப்பனீயம் ஊடுறுவிய, அதைஉள்வாங்கிய ஒரு சமூகத்தின் மொழி வெளிப்பாடு பிறகெப்படி இருக்கும்? அப்படித்தானிருக்கும்.? பார்ப்பனிய அதிகாரத்துவத்தை எதிர்க்கும் பெரியாரின் குரல் இப்படி தான் இருக்கும், கருத்தளவில் இப்படி எதிர்த்த இதே பெரியார் இதே தமிழ் மொழி நவீனத்துவமடையவேண்டுமென்று அச்செழுத்து சீர்திருத்தம் செய்திருக்கிறாரென்றால் அவர் தமிழ் மொழியை கேவலமாக நினைத்தவரா என்பது புரியும்...

அது சரி தமிழ் என்றால் பலர் உணர்ச்சிவயப்படவும் சிலர் எரிச்சலடையவும் காரணமென்ன?

தமிழ்- முகமூடி, குழலி பதிவுகளை முன்வைத்து என்ற பதிவில் எழுத்தாளர் மாலன் சொல்லியிருப்பதிலிருந்து சில வரிகள் கீழே...

மிகை உணர்ச்சிகளை நீக்கிவிட்டு வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், இரண்டு விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்:

1.தமிழ் அறிவு என்பது ஒரு சமநிலைச் சமூகத்திற்கான (egalitarian society) விழைவை நோக்கி இட்டுச் செல்லும் ஒன்று
2.தமிழ் உணர்வு என்பது அதிகாரத்திற்கெதிரான, குறிப்பாக -வலியார் சிலர் எளியோர் தமை வதை செய்குவதை- போர்க் குணத்தை அளிப்பது. (anti -establishment)

கம்பன், பாரதி, பாரதிதாசன், ஜீவா ஆகியோரிடம் காணப்படும் அதிகார எதிர்ப்பு நிலைகளுக்கும் ஒரு முக்கிய காரணியாக தமிழுணர்வு இருந்திருக்கிறது.

தமிழுக்கு ஐம்பெரும் காப்பியங்களைத் தந்த சமண பெளத்த சமயங்கள், ஒரு வித சமநிலைச் சமூகத்தை விரும்பின. நிறுவனமாக்கப்பட்ட அமைப்புக்கள் மூலம் கல்வி வழங்கல், வைதீக சமயங்கள் பெண்களுக்கு அளித்திருந்ததைவிட சற்று மேம்பட்ட நிலையை அளித்தல் இவை அவற்றின் இந்த விழைவுகளுக்கு உதாரணங்கள். ஆனால் அவை தங்களது தமிழ் ஆர்வத்தை உணர்வு நிலையில் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அறிவார்ந்த நிலையிலேயே வெளிப்படுத்திக் கொண்டன. தமிழர்களிடையே இந்த சமயங்கள் பெரும் செல்வாக்குப் பெற இயலாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.

அரசியல் வரலாற்றின் வெளிச்சத்தில் பார்த்தால், களப்பிரர்களுக்கு எதிராக சைவர்களும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக பார்ப்பனர்களும், பார்ப்பனர்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், இன்று பிற்பட்டோருக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டவர்களும் எழுப்பும் கலக்க்குரலின் அடையாளமாகத் தமிழ் உணர்வு இருந்து வருகிறது.


அதுசரி இப்போது புரிந்திருக்குமே தமிழென்றால் சிலருக்கு உணர்ச்சிப்பெருக்கும், சிலருக்கு வயிற்றெரிச்சலும் உருவாவதன் காரணம்.

சரி இந்த பின்னூட்டத்தினால் ஏதோ நீர் புரிந்துகொள்வீரென்ற நம்பிக்கையெல்லாம் எனக்கு இல்லை, ஏனென்றால் இதே மாதிரி ஏற்கனவே ஒரு பதிவிலும் சொன்னது தானே இது, ஆனாலும் ஏன் எழுதுகிறேனென்றால் உம் மாதிரியான ஆட்கள் தொடர்ந்து இயங்கும் போது (எதற்கு எதிராக இயங்குகிறீர்கள் என்பது சொல்ல தேவையில்லை) எம் மாதிரியான ஆட்களும் தொடர்ந்து இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

9:13 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://nanbanshaji.blogspot.com/2006/11/blog-post.html

//மாறாக, சமூக அரசியல் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தளங்களிலிருக்கும் தவறான அணுகுமுறைகளுக்கு மட்டுமே எதிர்வினை செய்ய வேண்டும் என்பது தான் எனது எண்ணம்.
இதன் தொடர்ச்சியாக, சமூக அரசியல் தளங்களில் எழுச்சி பெற முனைய வேண்டியது அவசியம் - அதன் ஆரம்ப கட்டம் - கல்வி. பெண்கள் உட்பட. பெண்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். உடைகள் உட்பட. கண்ணியமான உடைகள் என்ற அளவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Muslims should adopt a modern outlook and acquire a scientific temper.

இது தான் இன்றைய அத்தியாவசியத் தேவை//

தமிழக மற்றும் இந்திய இசுலாமிய தலைவர்கள் மீது நான் கடுமையாக வைக்கும் விமர்சனம் நீங்கள் மேலே சொன்ன இது தான், உங்கள் மதத்திற்கு தரம் முக்கியத்துவத்தைவிட உங்கள் மக்களின் வாழ்க்கை, சமூக உயர்வுக்கு தரவேண்டிய முக்கியத்துவம் அதிகமாக இருக்க வேண்டும், உங்களைப் போன்றோர்களை பார்க்கும் போது புதிய நம்பிக்கை பிறக்கின்றது.

நன்றி

11:03 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://idlyvadai.blogspot.com/2006/11/blog-post_25.html

//ஊரிலே போனா தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் குழலி கும்பலைத் தான் உதைக்க தேடிக்கிட்டிருக்காங்க. இந்த ஆளுங்களும் அவங்களை ஒடுக்கிட்டே இருக்காங்க. இங்க என்னடான்னா பெரிய லெவல்ல பில்டப்பு. தாங்க முடியலடா சாமி.
//
வாய்யா அனானி வா.... அதான் நாலஞ்சு வருசமா உங்க பப்புலாம் தான் வேகலையே வடமாவட்டத்துல, இத்தனை வருசமா ஆடுகள் இரண்டை மோதவிட்டு ஓநாய்கள் இரத்தம் குடித்தன, இப்போ தான் ஆடுகளுக்கு புரிஞ்சிடுச்சே.... எதிர் எதிர் அணியில தேர்தல்ல இருந்தப்ப இதோ மோதிப்பாங்க, அதோ மோதிப்பாங்கனு எல்லா பத்திரிக்கையிலயும் ரவுண்டு கட்டி எழுதினீங்கள் என்னத்த கிழிச்சிங்க, அதெல்லாம் அந்த காலம் ராசா, இப்போ ஒரே வேன்ல ஒரு பக்கம் பாமக கொடி, ஒரு பக்கம் விசி கொடி ஜெகஜோதியா பறக்குது, உள்ளாட்சி தேர்தலப்ப சாதி பிரச்சினை வந்த சில இடங்கள்ல கூட பேசி தீர்த்துக்கிட்டாங்கப்பு, இனியெல்லாம் நாக்கை சப்பு கொட்டிக்கிட்டு இரத்தம் குடிக்க முடியாது அனானி, இனி இப்பிடி போயி ஊருல சொன்னாங்காட்டியும் உனக்கு தான் ரவுண்டு கட்டுவாங்க.... இனி இந்த ஓநாய் வேலை பாக்கதப்பு, மக்க முழிச்சிக்கிட்டாங்கோ,பாத்து அப்பு உள்ளூர்ல ஓநாய் வேலை பாக்கறதை உட்டுட்டி சூதனமா எங்கியாவது அமெரிக்கா சிங்கப்பூரு, அட அது இல்லைனாலும் இந்தி தெரியுமில்ல அட இஸ்கோல்ல சொல்லிதரலைனாலும் எதுனா பிரச்சாரசபால படிச்சிருப்பியே அப்போ பம்பாய், தில்லினு போயி பொழச்சிக்கப்பு, அதான் ஒனக்கு நல்லது அக்காங்.....

9:06 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://jokeparty.blogspot.com/2006/11/blog-post_116487735772269935.html

கருத்து கணிப்பிற்கு மிக்க நன்றி....

பின்னே நாம ஒருத்தருக்கு கருத்து கணிப்பு வைச்சா நமக்கு ஒருத்தர் வைக்க தானே செய்வாங்க, இதெல்லாம் எதிர்பார்த்து தானே எறங்கோனும்......

என்ன ஜோக் பார்ட்டி நாஞ்சொல்றது சரிதானே?

1:19 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://poar-parai.blogspot.com/2006/11/blog-post_30.html

இதெல்லாம் 'சோ' விற்கும் ராஜரிஷி(?!)'சோ' ரசிகர்களுக்கும் புரியாததா? அவங்கலாம் வெவரமானவங்கதான், ஆனா இதெல்லாம் தெரியாம நடுநிலைவாதி என்ற பெயரில் நம்புறாங்களே அவங்களை சொல்லனும்...

8:32 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://jokeparty.blogspot.com/2006/12/blog-post.html

மிக்க நன்றி ஜோக்பார்ட்டி, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.....

8:36 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://idlyvadai.blogspot.com/2006/11/blog-post_5800.html

கருத்து கணிப்பு முடிவுகள் இங்கே

9:05 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://madippakkam.blogspot.com/2006/12/blog-post_02.html

அது சரி....... நீ கலக்கு ராசா....

1:57 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://karuppupaiyan.blogspot.com/2006/12/blog-post_04.html

கருப்பு தமிழ்மணம் ஆரியதிரட்டியுமல்ல, திராவிட திரட்டியுமல்ல, கருத்துசுதந்திரம் மிக்க பொதுவானதொரு வலைப்பதிவு திரட்டி, தமிழ்மணத்திற்கு ஒரு முத்திரை குத்தி குழப்பம் விளைவிக்க நினைக்கும் சிலரின் செயல்களுக்கு இந்த பதிவு அறிந்தோ அறியாமலோ உதவியாக இருக்குமென்று உங்களுக்கு தெரியவில்லையா? வாசகர்கள் ஒன்றுமறியாத/ தெரியாதவர்கள் அல்ல, அவர்களுக்கு தெரியும் எது எப்படியென்று.

6:53 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_05.html

செந்தழல் ரவி, நட்சத்திர வார வாழ்த்துகள், அமர்க்களமா ஆரம்பிச்சிருக்கிங்க இந்த வாரத்தை, என்ன ஒரு எள்ளல், என்ன ஒரு நையாண்டி, பொதுவாக சு.ரா.வின் எழுத்தில் துள்ளிவிளையாடும் எள்ளல் (டேய் உனக்கு முதல்ல சு.ரா. தெரியுமா அப்படினு யாரும் கேட்கப்படாது கேட்கப்படாது கேட்கப்படாது) இங்கே உள்ளது, தன்னைத்தானே நையாண்டி செய்துகொள்வதில் 'சோ'வும் பெயர் வாங்கியவர், அதே போல பதிவில் பட்டையை கிளப்பியிருக்கிங்க.... இயல்பாக ஏதோ நெருங்கிய நண்பன் அருகிலிருந்து பேசுவது போன்றிருந்தது இந்த பதிவு, பதிவோ கதையோ படிக்கும் போது வாசிப்போடு ஒரு படமும் நம் கண்முன் ஓடினால் அதுவே அந்த எழுத்தாளனின் பெரிய வெற்றி, ஒரு நொடி என் கண் முன் சட்டென்று இரயில்வே நிலையமும், பெஞ்சும் பிளாட்பாரமும் அங்கே இருவரும் இழுத்துக்கொண்டதும் ஓடியது... அனேகமாக இந்த பதிவை வாசித்த ஒவ்வொருவருக்கும் ஏதேனும் பதிவின் ஊடாக ஏதேனும் படக்காட்சி நிச்சயம் ஓடியிருக்கும் என நம்புகிறேன்.

அப்புறம் சொன்னீங்களே ஒரு விசயம், கஞ்சா கிடைக்காத ஊரே இல்லைனு, எனக்கு கல்லூரியின் மூன்றாம் வருடத்தில் தான் தெரிந்தது, சீனியர் நண்பரோடு வெளியே போனபோது சட்டென்று கஞ்சா வாங்கி வந்த போது கொஞ்சம் அரண்டு தான் போனேன், நீங்களெல்லாம் கஞ்சாவுக்கு இத்தனை பில்டப், நான் ஒரு பில்ட்டர் கோல்ட் பிளேக் சிகெரெட் அடிக்க கிளம்பியது ஒரு பெரிய திரில்லர் சம்பவத்துக்கு இணையானது....

சுவையான நட்சத்திர வாரத்தின் எதிர்பார்ப்பை இந்த பதிவின் நடை அதிக அளவில் ஏற்படுத்திவிட்டது, அருள், பொன்ஸ் இப்போது ரவி என தொடர்ந்து கலக்கலான நட்சத்திரங்கள்....

நன்றி

7:11 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://vanajaraj.blogspot.com/2006/12/blog-post.html

//1) வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக
2) சித்தாந்த பின்புலம் இல்லாத போது அல்லது அது பலகீனமாய் உள்ள எதிராளியின் கவனத்தை வார்த்தைகளின் பின் திருப்ப.
//
இதெல்லாம் இங்கே தினம் தினம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்

//3) சரியான ஒரு விஷயத்தை மந்தமான புத்தியில் அடித்து உள்ளிறக்க.///
தொடக்க காலத்தில் பலரையும் போலவே நானும் பெரியாரின் பேச்சு மொழிகளையும்(கருத்தையல்ல), சிலையை செருப்பால் அடித்ததையும் விமர்சித்துக்கொண்டிருந்தேன், எல்லாம் சரி தான் அவர் பேசிய வார்த்தைகள் தான் சரியில்லை அப்படி இப்படியென, ஆனால் ஒரு கட்டத்தில் புரிந்தது இது புனிதம் என்று முழுமையாக நம்பி வருவதை இது மாதிரியான அதிர்ச்சி வைத்தியத்தினால் தான் உடைத்தெறிய முடியும் முடிந்தது என்ற புரிதல் வந்த போது இது மாதிரியான நாகரீகம் லொட்டு லொசுக்கு என்று பேசுவதை நிறுத்திக்கொண்டேன், வலைப்பதிவில் கதை வேறு இங்கே எல்லோரும் படித்தவர்கள், அவர்களுக்கு சொல்லும் கருத்து புரியாததல்ல, புரியாத மாதிரி நடிப்பார்கள் :-)

8:53 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_116531659151324853.html

பாலபாரதியின் இந்த தொகுப்பை படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டியது இந்த பதிவு.


ஹலோ மிஸ்டர்
பாலா ஜி
திருப்பதியிலிருப்பது
பாலாஜி

திருப்பதிக்கு போனா
கெடைக்கும் லட்டு
உன்கிட்ட வந்தா
கெடைக்குமா ஃபுட்டு(food)?

திருப்பதிக்கு போனா
கெடைக்கும் லட்டு
உன்கிட்ட வந்தா
கெடைக்குமா ஃபுட்டு(food)?

ஹலோ மிஸ்டர்
பாலா ஜி
திருப்பதியிலிருப்பது
பாலாஜி

உன் கையிலிருக்குது
செல்போனு
உன் பாக்கெட்லிருப்பது
ரெனால்ட்ஸ் பேனா

ஒன்னும் ஒன்னும்
ரெண்டு
நீயும் நானு
ஃபிரெண்டு

பாலா ஜி
நான்
கடலை போட்டு
ரொம்ப நாளாச்சி

5:08 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://pesalaam.blogspot.com/2006/12/blog-post.html

மணி உங்கள் ஆவேசம் நிதானமாகவே வெளிப்பட்டுள்ளது, சிலருக்கு சொறிந்து கொண்டே இருக்க வேண்டும், அதுவும் இப்போது வேறு ஒரு அரசியலுக்காக திட்டம் போட்டு செய்து கொண்டிருக்கும் சிலரின் தரமிழந்த செய்கைகள் சில திட்டங்களுக்காக நடக்கின்றது, இத்தனை நாட்கள் ஒருவரின் பின்னால் ஒளிந்து கொண்டு அய்யோ அய்யோ என்று கத்தி கதறி ஆர்ப்பாட்டம் செய்தார்கள், இப்போது?

அய்யா நடுநிலை ஆட்கள் என்று நினைப்பவர்களே பாருங்கள் என்ன நடக்கின்றது என்று.... எதை சொறிகிறார்கள் என்று? ஏன் சொறிகிறார்கள் என்று.... எல்லா பொறுமைகளும் உங்களுக்காகத்தான் வெறும் அனுதாபங்களை சம்பாதிக்க நடத்திய நாடகம் இப்போது எந்த கட்டத்தை நோக்கி நகர்கிறது என்று.

5:22 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://metermurugesan.blogspot.com/2006/12/blog-post_12.html

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது, குயில் பாட்டு ஓ.... வந்தது இளமானே... :-)

8:49 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://surveysan.blogspot.com/2006/12/2006_13.html

எல்லாம் சரிதான், முதலில் நீங்கள் யார்? தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் இது மாதிரியான சர்வேக்கள் எடுப்பது எத்தனை தூரம் நியாயமானது? இதை எடுப்பவர் யாரென்று தம்மை வெளிப்படுத்திக்கொள்வது தான் தார்மீக கடமையாக இருக்கும்.... இதே காரணத்தினால் இட்லிவடை பதிவில் சிறந்த பதிவர்கள் போட்டியில் வாக்களிக்கவில்லை, தேவைப்படின் விரிவாக பேசலாம். எனவே என் பெயரை வாக்கெடுப்பிலிருந்து நீக்கிவிடுங்கள்

நன்றி

1:00 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://vasanthanin.blogspot.com/2006/12/blog-post_15.html

மதியுரைஞர் பாலசிங்கம் அவர்களின் மறைவு மிகத்துயரமான செய்தி, அவரது குடும்பத்திற்கும் வாடித்தவிக்கும் ஈழ மக்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்....

7:04 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://potteakadai.blogspot.com/2006/12/art-of-deconstruction.html

இன்னா சத்யா படா பேஜாரா கீது.... சரி நீ நல்லா உன் புது வேலைய பாரு, அப்பாலிக்கா ஆப்பு லொட்டு லொசுக்கெல்லாம் பாத்துக்கலாம்.... நீ இப்பவே லீவு உட்டுட்ட, எனக்கு லீவு உட இன்னும் ரெண்டு வாரம் கீதுப்பா.... அப்பாலிக்கா நமக்கும் சொந்த வேலை கீது... ஆமா இப்போ என்ன பொதுவுல களட்டுறங்கறியா அதும்சரிதான்.... வர்ரட்டா.... என்சாய் மாமு.....

6:12 AM  

Post a Comment

<< Home